பொதுநலவாய விளையாட்டு விழாவில் முதல்முறையாக பெண்கள் கிரிக்கெட்

134

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் (Commonwealth Games) என்றழைக்கப்படுகின்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் முதல்முறையாக பெண்கள் T20 கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது.

22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹமில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

இதில் முதன் முறையாக பெண்களுக்கான T20 கிரிக்கெட் இடம்பெற்றவுள்ளது. ஏற்கனவே 1998ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

2021இல் இங்கிலாந்து செல்லும் இலங்கை அணி

இதில் தென்னாபிரிக்கா அணி தங்கப் பதக்கத்தையும், அவுஸ்திரேலிய அணி வெள்ளிப் பதக்கத்தையும், நியூஸிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டதுஆனால், அதன்பிறகு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் இருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டது

இதனிடையே, 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவில் அறிமுகமாகும் பெண்களுக்கான T20 போட்டிக்கான தகுதிச்சுற்று குறித்த விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவையும் (.சி.சி.), பொதுநலவாய விளையாட்டு சம்மேளனமும் இணைந்து நேற்று (18) வெளியிட்டன

Video – இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் | Sports Roundup – Epi 140

இதன்படி 8 அணிகள் பங்கேற்கும் பொதுநலவாய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டிக்கு, போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி மற்றும் அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் முதலாம் திகதி வரை .சி.சி இன் பெண்களுக்கான T20 தரவரிசையில் முன்னணியில் இருக்கும் மற்ற 6 அணிகள் நேரடியாக தகுதி பெறும்

எஞ்சிய ஒரு அணி எது? என்பதை நிர்ணயிப்பதற்கான தகுதிச் சுற்று போட்டி குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்கு முன் தகுதிச்சுற்று போட்டி நடத்தப்படும் என்றும் .சி.சி. தெரிவித்துள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெறும்

இந்தப் பட்டியலில் முதல் 6 இடங்களுக்குள் ஒருவேளை மேற்கிந்திய தீவுகள் அணி இடம்பெற்றால், கரீபிய அணிகளுக்கு எதிராக தனி தகுதிச்சுற்று நடத்தப்பட்டு, ஏதாவது ஒரு கரீபியன் தீவுகள் அணி பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்கும்.

இந்தியாவில் T20 உலகக் கிண்ணம்: ‘கவுன்ட் டவுண்’ ஆரம்பம்

இதுஇவ்வாறிக்க, .சி.சி இன் பெண்களுக்கான T20 தரவரிசையில் இலங்கை அணி தற்போது 8வது இடத்தில் உள்ளது. இதில் பாகிஸ்தான் அணி 7ஆவது இடத்திலும், பங்களாதேஷ் அணி 9ஆவது இடத்திலும் உள்ளன. எனவே இந்த மூன்று அணிகளில் இரண்டு அணிகளுக்கு பெரும்பாலும் தகுதிச்சுற்றின் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பில், ஐ.சி.சி., தலைமை அதிகாரி மனு சவ்னி கூறுகையில், பொதுநலவாய விளையாட்டு விழாவில கிரிக்கெட் இடம்பெறச் செய்வதால் பெண்கள் கிரிக்கெட்டை உலகளவில் வளர்ச்சியடையச் செய்யலாம்”  என்றார்.

பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் டேம் லூசி மார்ட்டின் கருத்து தெரிவிக்கையில், பர்மிங்ஹமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் T20 கிரிக்கெட் அறிமுகமாவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்தார்.

Video – மஹேலவின் தலைமையில் சாதித்த மும்பை இந்தியன்ஸ் | Cricket Galatta Epi 45

இதேநேரம், பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்கள் கிரிக்கெட் இடம்பெற்றது குறித்து இந்திய பெண்கள் T20 அணியின் தலைவி ஹர்மன்பிரீத் கவுர் கருத்து தெரிவிக்கையில்

”பொதுநலவாய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருப்பது அனைத்து வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய விடயமாகும். பொதுநலவாய விளையாட்டு விழாவில் நானும் பங்கேற்பேன் என்று நம்புகிறேன். தரமான மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த போட்டிகள் மூலம் இந்தப் போட்டி மிகவும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்” என தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<