லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் நிறைவு

2211

லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம், கடந்த திங்கட்கிழமை (19) இணையத்தளம் வாயிலாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் புதிய இலச்சினை வெளியீடு

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் கண்டி, கொழும்பு, தம்புள்ளை, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஐந்து அணிகள் பங்கு பெறுகின்றன.

அதன்படி, இந்த ஐந்து அணிகளதும் உரிமையாளர்கள் ஏலத்தின் போது தங்களுக்கு தேவையான வீரர்களை மொத்தமாக 8 பிரிவுகளில் கொள்வனவு செய்திருந்தனர். 

இந்த பிரிவுகளில் உள்ளூர் நட்சத்திரம் என்னும் பிரிவில் இலங்கையினைச் சேர்ந்த ஐந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் ஐந்து அணிகளினால் கொள்முதல் செய்யப்பட்டிருந்தனர். 

இதில் அஞ்சலோ மெதிவ்ஸ் கொழும்பு கிங்ஸ் அணியினாலும், தசுன் ஷானக்க தம்புள்ளை ஹவ்க்ஸ் அணியினாலும், லசித் மாலிங்க காலி கிளேடியேட்டர்ஸ் அணியினாலும், திசர பெரேரா ஜப்னா ஸ்டேலியன் அணியினாலும், குசல் ஜனித் பெரேரா கண்டி டஸ்கர்ஸ் அணியினாலும் ஏலத்தின் போது தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய ரசல், சிம்மண்ஸ், லூவிஸ்

மறுமுனையில் வெளிநாட்டு நட்சத்திரவீரர்கள் என்னும் பிரிவில், ஜப்னா ஹவ்க்ஸ் தவிர்ந்த ஒவ்வொரு அணிகளும் இரண்டு வெளிநாட்டு வீரர்களை கொள்வனவு செய்திருந்தன. 

இதில் மேற்கிந்திய தீவுகளின் அன்ட்ரு ரசல், பாப் டு பிளேசிஸ் ஆகியோர் கொழும்பு கிங்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட, டேவிட் மில்லர், கார்லோஸ் ப்ராத்வைட் ஆகியோர் தம்புள்ளை ஹவ்க்ஸ் அணியினாலும், சஹீட் அப்ரிடி, கொலின் இங்ரம் ஆகியோர் காலி கிளேடியேட்டர்ஸ் அணியினாலும், கிறிஸ் கெயில், லியாம் ப்ளன்கட் ஆகியோர் கண்டியின் டஸ்கர்ஸ் அணியினாலும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரிவில் ஜப்னா ஸ்டேலியன் அணி இங்கிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான டாவிட் மலானை தம்முடைய வெளிநாட்டு நட்சத்திரவீரராக தெரிவு செய்தது. 

இந்த வெளிநாட்டு வீரர்கள் தவிர பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான சொஹைப் மலிக் ஜப்னா ஸ்டேலியன் அணியினாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஆமீர் ஆகியோர் காலி கிளேடியேட்டர்ஸ் அணியினாலும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தனர். இந்த வீரர்களில் ஒரு வீரரின் கொள்வனவுக்காக சுமார் 40,000 அமெரிக்க டொலர்கள் வரையில் ஒரு அணி செலவு செய்திருந்ததுடன் இது இரண்டாம்நிலை வெளிநாட்டு நட்சத்திரவீரர்கள் கொள்வனவு என்கிற பிரிவிலும் அமைந்திருந்தது. 

மேலதிக வெளிநாட்டு வீரர்கள் கொள்வனவுகளை நோக்கும் நிலையில் ஐ.பி.எல். T20 தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான மன்விந்தர் பிஸ்லா கொழும்பு கிங்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தார். பிஸ்லா தவிர, வேகப்பந்துவீச்சாளரான மன்பிரிட் கோனி கொழும்பு கிங்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்ட ஏனைய இந்திய வீரராக மாறியிருந்தார். அதேவேளை கனடா நாட்டின் ரவிந்தர்பால் சிங்கும் கொழும்பு கிங்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Video – Army லீக்கில் துடுப்பாட்டத்தில் கலக்கும் Chandimal..! |Sports RoundUp – Epi 135

இவர்கள் தவிர இலங்கை வீரர்களின் பக்கம் மீண்டும் வரும் போது நட்சத்திர வீரர்கள் பிரிவில் இளம் பந்துவீச்சு சகலதுறைவீரரான வனிந்து ஹஸரங்க ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியினால்  வாங்கப்பட்டிருந்தார். 

மறுமுனையில், தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டிகளில் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக ஆடும் இசுரு உதான கொழும்பு கிங்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்ட முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாறினார். அதோடு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமாலினையும் கொழும்பு கிங்ஸ் அணி கொள்வனவு செய்திருந்தது. இந்த இரண்டுவீரர்களும் இரண்டாம்நிலை உள்ளூர் நட்சத்திரவீரர்கள் பிரிவுக்குள் வந்திருந்தனர். 

இதேநேரம், நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரர்களாக உருவாகும் தனன்ஞய டி சில்வா, அவிஷ்க பெர்னாந்து ஆகிய இருவரினையும் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி இரண்டாம்நிலை உள்ளூர் நட்சத்திரவீரர்கள் பிரிவில் வாங்கியிருந்தது. இதேநேரம், குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன ஆகியோர் கண்டி டஸ்கர்ஸ் அணியின் உள்ளூர் இரண்டாம்நிலை நட்சத்திர வீரர்களாக மாறிக் கொண்டார். 

மறுமுனையில் இதே பிரிவுக்குள் இலங்கை அணிக்காக T20 போட்டிகளில் திறமை காட்டும் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ, அகில தனன்ஞய மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் காலி கிளேடியட்டர்ஸ் அணி வீரர்களாக வீரர்கள் ஏலத்தின் போது மாறிக் கொண்டனர். 

மறுமுனையில், தம்புள்ளை அணி நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு குமார ஆகியோரை இந்த வீரர்கள் ஏலத்தில் தமது இரண்டாம் நிலை நட்சத்திரவீரர்களாக தெரிவு செய்தது.  

இளம் வீரர்களை நோக்கும் போது இளம் வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் சிராஸ், நுவான் துஷார மற்றும் அசித்த பெர்னாந்து ஆகியோர் காலி கிளேடியேட்டர்ஸ் அணியினால் வளர்ந்துவரும் உள்ளூர் கிரிக்கெட் பிரிவில் வாங்கப்பட்டிருக்க சகலதுறைவீரரான சரித் அசலன்கவும் இதே பிரிவில் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 

பாடசாலைக் கிரிக்கெட்டில் சிறப்பாக செயற்பட்ட வடமாகாண வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த், தெய்வேந்திரம் டினோஷன் மற்றும் கனகரட்னம் கபில்ராஜ் ஆகியோர் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்காக மேலதிக உள்ளூர் வீரர்கள் பிரிவு என்னும் பிரிவில் வீரர்கள் ஏலம் மூலம் கொள்வனவு செய்யப்பட்டனர். 

பாகிஸ்தான் அணியிலிருந்து மலிக், சர்பராஸ், ஆமிர் அதிரடி நீக்கம்

ஆனால், இந்த வீரர்கள் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களான லஹிரு திரிமான்ன, திமுத் கருணாரட்ன போன்ற வீரர்கள் எந்த அணிகளினாலும் கொள்வனவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

எண்ணிக்கை அடிப்படையில் நோக்கும் போது லங்கா ப்ரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் மொத்தமாக 93 வீரர்களின் கொள்வனவுகள் நடைபெற்றிருந்தன. இதேநேரம், ஒவ்வொரு அணிகளுக்கும் இந்த ஏலத்தில் 20 வீரர்களை கொள்வனவு செய்ய முடியும் என முன்னர் குறிப்பிடப்பட்ட போதும் காலி கிளேடியேட்டர்ஸ் அணி மாத்திரமே 20 வீரர்களை வாங்கியிருந்தது. அதேநேரம், வீரர்கள் கொள்வனவுகளை முழுமை செய்யாத அணிகள் நவம்பர் மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் மேலதிக வீரர்கள் மூலம் தங்களது அணிக்குழாம்களை பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனக்கூறப்பட்டிருக்கின்றது. 

ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட வீரர்கள் விபரம்

கொழும்பு கிங்ஸ் – அஞ்சலோ மெதிவ்ஸ், அன்ட்ரே ரசல், பாப் டு பிளேசிஸ், மன்பிரீட் சிங் கோனி, மன்விந்தர் பிஸ்லா, இசுரு உதான, தினேஷ் சந்திமால், அமில அபொன்சோ, அஷான் பிரியஞ்சன், ரவிந்தர்பல் சிங், ஜெப்ரி வன்டர்சேய், துஷ்மந்த சமீர, திக்ஷில டி சில்வா, தரிந்து கெளசால், லஹிரு உதார, ஹிமேஷ் ராமநாயக்க, கலன பெரேரா, தரிந்து ரத்நாயக்க, நவோத் பரணவிதான

தம்புள்ளை ஹவ்க்ஸ் – தசுன் ஷானக்க, டேவிட் மில்லர், கார்லோஸ் ப்ராத்வைட், சமிட் பட்டேல், நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு குமார, ஒசத பெர்னாந்து, கசுன் ராஜித, போல் ஸ்ரிலிங், லஹிரு மதுசங்க, உபுல் தரங்க, அஞ்சலோ பெரேரா, ரமேஷ் மெண்டிஸ், புலின தரங்க, அஷேன் பண்டார, டில்சான் மதுசங்க, சசிந்து கொலம்பகே

காலி கிளேடியேட்டர்ஸ் – லசித் மாலிங்க, சஹிட் அப்ரிடி, கொலின் இன்ங்ரம், ஹஸ்ரத்துல்லா சஷாய், மொஹமட் ஆமீர், தனுஷ்க குணத்திலக்க, பானுக்க ராஜபக்ஷ, அகில தனன்ஞய, மிலிந்த சிறிவர்தன, சர்பராஸ் அஹ்மட், அஷாம் கான், லக்ஷான் சந்தகன், ஷெஹான் ஜயசூரிய, அசித்த பெர்னாந்து, நுவான் துஷார, மொஹமட் சிராஸ், தனன்ஞ லக்ஷான், ஷானக்க ருவன்சிரி, சஹான் ஆராச்சி

ஜப்னா ஸ்டேலியன்ஸ் – திசர பெரேரா, டாவிட் மலான், வனிந்து ஹஸரங்க, சொஹைப் மலிக், உஸ்மான் சின்வாரி, அவிஷ்க பெர்னாந்து, தனன்ஞய டி சில்வா, சுரங்க லக்மால், பினுர பெர்னாந்து, ஆசிப் அலி, மினோத் பானுக்க, சத்துரங்க டி சில்வா, மஹேஷ் தீக்ஷன, சரித் அசலன்க, நுவனிது பெர்னாந்து, கனகரட்னம் கபில்ராஜ், விஜயகாந்த் வியாஸ்காந்த்

கண்டி டஸ்கர்ஸ் – குசல் ஜனித் பெரேரா, கிறிஸ் கெயில், லியாம் ப்ளன்கட், வஹாப் ரியாஸ், குசல் மெண்டிஸ், நுவன் பிரதீப், சீக்குகே பிரசன்ன, அசேல குணரத்ன, நவீன் உல் ஹக், கமிந்து மெண்டிஸ், டில்ருவான் பெரேரா, பிரியாமல் பெரேரா, கவிஷ்க அஞ்சுல, லசித் எம்புல்தெனிய, லஹிரு சமரக்கோன், நிஷான் மதுஷ்க பெர்னாந்து, சாமிக்க எதிரிசிங்க, இஷான் ஜயரட்ன

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<