சுனில் நரேனின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு

202
Courtsey - IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேனின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.

எனினும், .பி.எல் தொடரில் அவருக்கு தொடர்ந்து பந்துவீசலாம் எனவும், 2ஆவது முறையாக நடுவர்கள் புகார் அளித்தால் சுனில் நரேனுக்கு தடை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

வேறு திகதியில் லங்கா ப்ரீமியர் லீக் வீரர்கள் ஏலம்

இம் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த லங்கா ப்ரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் வீரர்கள் ஏலம்…

சுனில் நரேன், பிரஷித் கிருஷ்ணாவின் அபாரமான பந்துவீச்சு, தினேஷ் கார்த்திக், சுப்மான் கில்லின் பொறுப்பான துடுப்பாட்டம் ஆகியவற்றால் அபுதாபியில் நேற்று (10) நடைபெற்ற .பி.எல் தொடரில் 24ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பிரஷித் கிருஷ்ணா, சுனில் நரேன் வீசிய கடைசி இரு ஓவர்கள்தான் ஆட்டத்தையே மாற்றின. கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. சிக்ஸர் அடித்தால் ஆட்டம் சமநிலையில் முடிந்து சுப்பர் ஓவருக்குச் சென்றுவிடும்.

ஆனால் நரேன் வீசிய அந்த பந்தில் கிளென் மெக்ஸ்வெல் வேகமாக அடித்தார். பவுண்டரி எல்லைக்கு 2 அங்குலம் முன்பாக பந்து விழுந்ததால் பவுண்டரியோடு பஞ்சாப் அணியின் போராட்டம் தோல்வியில் முடிந்தது

இதனையடுத்து சுனில் நரேனின் பந்துவீச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது, இக்கட்டான நேரத்தில் சிறப்பாகப் பந்துவீசி கொல்கத்தா அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரேன் பந்துவீசியது .சி.சி இன் விதமுறைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி களநடுவர் உலஹாஸ் காந்தி, கிறிஸ் கஃபானே இருவரும் ஐ.பி.எல் அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரால் தற்போது சுனில் நரேன் எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்துவரும் போட்டிகளில் சுனில் நரேன் பந்துவீசத் தடையில்லை

Video – IPL தொடரில் பட்டையைக் கிளப்பும் இளம் நட்சத்திரங்கள்

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் விறுவிறுப்பாக நடை…

ஒருவேளை மீண்டும் நடுவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் .பி.எல் தொடர் முழுவதும் சுனில் நரேன் பந்துவீசத் தடை விதிக்கப்படுவார் என பிசிசிஐ அமைப்பின் பந்துவீச்சு சந்தேக ஆராய்வு குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபின்புதான் மீண்டும் நரேன் பந்துவீச அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனில் நரேன் கடந்த 2014ஆம் ஆண்டு சம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் சுனில் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்ததால் புகார் செய்யப்பட்டது. இதனால் 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு .பி.எல் தொடரிலும் சுனில் நரேன் பந்துவீச்சு மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சுனில் நரேன் பந்துவீச்சு மீது நடுவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசத் சுனில் நரேனுக்கு தடை விதிக்கப்பட்டது.

T20 போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய சொஹைப் மலிக்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சொஹைப் மலிக் T20 போட்டிகளில் பத்தாயிரம் …

அதன்பின் தனது பந்துவீச்சில் மாற்றம் செய்து, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐசிசியின் அனுமதியைப் பெற்றார். இருப்பினும் 2016ஆம்ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் சுனில் நரேன் பங்கேற்கவில்லை

கடந்த 2018ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலும் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்து நடுவர்கள் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறாயினும், சுனில் நரேனுக்கு பல்வேறு வகைகளில் கொல்கத்தா அணி நிர்வாகம் உதவியுள்ளது. சுழல் பந்துவீச்சாளர் கோர்ல் குரோவின் மூலம் தனது பந்துவீச்சை சுனில் நரேனுக்கு உதவிய கொல்கத்தா அணி, லீசெஸ்டர் நகரைச் சேர்ந்த பந்துவீச்சு ஆய்வு பயிற்சி நிலையத்தின் மூலம் நரேனுக்கு பயிற்சியும் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க