இலங்கை கிரிக்கெட்டின் புதிய குடிநீர் பங்காளராகும் Chrystal And life

134

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உள்ளூர் குளிர்பான விநியோக அனுசரணையாளராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற மை கோலா பெவரேஜஸ் தனியார் நிறுவனம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விநியோகஸ்தர்களாக இணைந்து கொண்டுள்ளது. 

மை கோலா பெவரேஜஸ் தனியார் நிறுவனத்தினால் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்கும் இரண்டு வர்த்தக குறியீட்டுப் பெயர்களைக் கொண்ட Chrystal And life ஆகியவற்றுக்கும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்த கைச்சாத்திடலும், ஆவணப் பரிமாற்றலும் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (24) இடம்பெற்றது

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய ஆடை அனுசரணையாளர்

இதன்போது மை கோலா பெவரேஜஸ் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சட்டத்தரணி மஹிந்த பெரேரா, மை கோலா பெவரேஜஸ் பிறைவெட் லிமிட்டெட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷாம் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான்  டி சில்வா, பிரதம நிறைவேற்று அதிகாரி ஷ்லி டி சில்வா, இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மொஹான் டி சில்வா கருத்து தெரிவிக்கையில், மீண்டும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்த மை கோலா பெவரேஜஸ் தனியார் நிறுவனத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.

இதனிடையே, மை கோலா பெவரேஜஸ் தனியார் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷாம் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,

”இலங்கையில் உள்ள ஒரு முன்னணி நிறுவனமாக மீண்டும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் குளிர்பானம் மற்றும் குடிநீர் போத்தல் அனுசரணையாளராக இணைந்து கொள்ள கிடைத்தமை மிகப் பெரிய கௌரவமாகவும், வரப்பிரசாதமாகவும் உள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச ரீதியில் எமது நாமத்தைக் கொண்டு செல்லவும் ஒரு வாய்ப்பாகவும் இது அமையும்” என அவர் தெரிவித்தார்.

எனவே, இந்தப் புதிய ஒப்பந்தத்துக்கு அமைய எதிர்வரும் 3 வருடங்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விநியோகஸ்தர்களாக Chrystal And life செயற்படவுள்ளது

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<