ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் காலமானார்

672
ICC

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ், மாரடைப்பு காரணமாக தன்னுடைய 59வது வயதில் உயிரிழந்தார் என்ற தகவல் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவை பிறப்பிடமாகக்கொண்ட டீன் ஜோன்ஸ், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடருக்கான, தொலைக்காட்சி வர்னணையாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வரவிருந்த பங்களாதேஷ் வீரருக்கு கொவிட்-19 தொற்று

இந்தநிலையில் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஐ.பி.எல். கொவிட்-19 உயிர் பாதுகாப்பு வளையத்தில் தங்கியிருந்த இவருக்கு, இன்று (24) மதியம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

டீன் ஜோன்ஸ் அவுஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரராக இருந்து சாதனைகள் படைத்திருந்த போதும், தற்போதைய காலப்பகுதியில் முன்னணி கிரிக்கெட் ஆய்வாளர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். அத்துடன், தெற்காசியவில் கிரிக்கெட்டின் தன்மையை வெளிக்கொண்டு செல்வதற்கு முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்த இவரின், கிரிக்கெட் ஆய்வுக்கு உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் உள்ளனர்.

அதேநேரம், சர்வதேசத்தில் கிரிக்கெட் வீரராக மாத்திரம் அல்லாமல் பயிற்றுவிப்பாளர், வர்னணையாளர் மற்றும் கிரிக்கெட் ஆய்வாளர் என மிகவும் சிறப்பாக சர்வதேச கிரிக்கெட்டுக்காக டீன் ஜோன்ஸ் பங்காற்றியுள்ளார். டீன் ஜோன்ஸ் தனது பயிற்றுவிப்பு பணியில் இறுதியாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமை பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

Video – எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திய RCB | Cricket Galatta Epi 36

இதேவேளை, டீன் ஜோன்ஸ் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 1984ம் ஆண்டு தொடக்கம் 1994ம் ஆண்டுவரை 52 டெஸ்ட் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டமாக 216 ஓட்டங்களை விளாசி 46.55 என்ற சராசரியில் 3,631 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 44.61 என்ற சராசரியில் 6,068 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் எலன் போர்டரின் அணியில் முக்கிய வீரராக இருந்த இவர், டெஸ்ட் போட்டிகளில் 11 சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் 7 சதங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<