இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய ஆடை அனுசரணையாளர்

1049
SLC

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ முறைமையான ஆடை (Formal) அனுசரணையாளராக, நாட்டின் பிரபல்யமிக்க ஆடை உற்பத்தி நிறுவனமான நாமல் பாலச்சந்த்ர தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 

இதன்படி, எதிர்வரும் 3 வருடங்களுக்கு தேசிய கிரிக்கெட் அணிகளின் உத்தியோகப்பூர்வ முறைமையான ஆடை அனுசரணையாளராக நாமல் பாலச்சந்த்ர நிறுவனம் செயற்படவுள்ளது

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராகும் ரங்கன ஹேரத்

இதுதொடர்பிலான ஒப்பந்தம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் நேற்று (23) கைச்சாத்திடப்பட்டது. இதன்போது இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா, நாமல் பாலச்சந்த்ர தனியார் நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான நாமல் பாலச்சந்த்ரவும் ஒப்பந்த உடன்படிக்கையினை பரிமாற்றிக் கொண்டனர்

இதன்படி, இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளின் முறைமையான ஆடைகளை, உற்பத்தி செய்வதிலும், வடிவமைப்பதிலும் நாமல் பாலச்சந்த்ர நிறுவனம் முன்நின்று செயற்படவுள்ளது

மேலும், இலங்கை கிரிக்கெட் அணியின் முறைமையான ஆடை அனுசரணையாளர் என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கான உரிமை நாமல் பாலச்சந்த்ர பிறைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது

குறிப்பாக, எதிர்வரும் 3 வருடங்களுக்கு அதுதொடர்பிலான சகலவிதமான காகிதாதிகள், பிரசாரப் பொருட்கள், விளம்பரங்கள் அனைத்திலும் அதனைப் பயன்படுத்தும் உரிமையும் அந்த நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.  

Video – டோனி, கோஹ்லி, டிவில்லியர்ஸின் முத்தான சாதனைகள் |Sports RoundUp – Epi 133

அத்துடன், வீரர்களுக்கான ஜெக்கெட், மேற்சட்டை, நீள கால்சட்டை உட்பட ஏனைய சலுகைகளுக்குத் தேவையான நிதியை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு நாமல் பாலச்சந்த்ர தனியார் நிறுவனம் வழங்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிவையில், அனுசரணைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா,

”விளையாட்டுத்துறையில் மட்டுமல்லாமல் முழு உலகிலும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அணியின் உத்தியோகப்பூர்வ முறைமையான ஆடை அனுசரணையாளராக நாமல் பாலச்சந்த்ர தனியார் நிறுவனம் எம்மோடு கைகோரத்துள்ளதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்” என தெரிவித்தார்.

இதனிடையே, நாமல் பாலச்சந்த்ர தனியார் நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான நாமல் பாலச்சந்த்ர கருத்து தெரிவிக்கையில்

49 வருடங்களில் 4 தடவைகள் மாத்திரம் பதிவாகிய அரிய சாதனை!

”முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும் இலங்கை கிரிக்கெட்டின் பங்காளராக இணைவதையிட்டு நாங்கள் பெருமை அடைகின்றோம். எமது வர்த்தக குறியீட்டுப் பெயரின் மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு இந்த அனுசரணை நிச்சயம் பங்களிப்புச் செய்யும் என்பதை நாம் அறிவோம்” என அவர் தெரிவித்தார்

இதன்போது, இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஷ்லி டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<