இலங்கையில் முதல்முறை அறிமுகமாகும் வீரர்களுக்கான முன்னேற்ற அறிக்கை

162

தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும் மாதாந்த முன்னேற்ற அறிக்கையொன்றை வழங்குவதை கட்டாயமாக்க விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

அடையாள அட்டை இல்லாத பயிற்சியாளர்களுக்கு 2022 முதல் தடை

இதன்படி, இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் முதல்தடவையாக தேசிய குழாத்தைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் தமது தனிப்பட்ட பயிற்சிகளின் முன்னேற்றம் குறித்து மேற்பார்வை அறிக்கையொன்றை வழங்கவுள்ளனர்.

நேபாளத்தின் கத்மண்டுவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற 27 வீர வீராங்கனைகளை உள்ளடக்கிய சிறப்பு தேசிய குழாம் தற்போது பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், தேசிய குழாத்தின் முன் பயிற்சிகளின் முன்னேற்றம் குறித்து கலந்து ஆலோசிக்கும் விசேட கூட்டமொன்று அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

அதன்போது தேசிய மெய்வல்லுனர் குழாத்தை மேற்பார்வை செய்வதற்காக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசிங்கவின் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

video – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா?|Sports RoundUp – Epi 126

இதனிடையே, சிறப்பு தேசிய குழாத்தில் இடம்பெற்றுள்ள 27 வீரர்களுக்கும், 15 பயிற்சியாளர்களுக்கும் மாதாந்த முன்னேற்ற அறிக்கையொன்றை கட்டாயப்படுத்துவதற்கான காரணம் தொடர்பில் மெய்வல்லுனர் பயிற்சியாளர் வை.கே குலரத்ன தெரிவிக்கையில்,

”வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் இவ்வாறானதொரு அறிக்கையை கட்டாயப்படுத்துவதற்கு பிரதான காரணமாக அவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் தான் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகிறது. எனவே அதற்கான உண்மையான பிரதிபலனை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தான் இந்தப் புதிய முறை அறிகப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில வீரர்கள் தற்போது வெளி மாவட்டங்களில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற கென்யாவைச் சேர்ந்த முன்னாள் மெய்வல்லுனர் பயிற்சியாளரான டேன்ஸ் விடோவின் கீழ் ஓட்டப் போட்டிகளில் பங்குகொள்கின்ற எட்டு வீரர்கள் நுவரெலியாவில் தங்கி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செப்டம்பரில் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை நடத்த முஸ்தீபு

மறுபுறத்தில் இலங்கையின் அனுபவமிக்க பயிற்சியாளர்களில் ஒருவரான சஜித் ஜயலாலின் மேற்பார்வையின் கீழ் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுகின்ற ஒருசில வீரர்கள் பொரலன்த மற்றும் குருதலாவ ஆகிய பகுதகளில் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேநேரம், இரத்தினபுரி மாவட்ட மெய்வல்லுனர் பயிற்சியாளர் ரோஹித குணரத்னவின் மேற்பார்வையின் கீழ் 3 வீரர்கள் இரத்தினபுரி ஒஹிய பகுதியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுஇவ்வாறிருக்க, தேசிய மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ மற்றும் மெய்வல்லுனர் பயிற்சியாளர் வை.கே குலரத்ன ஆகிய இருவரும் தேசிய குழாத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களை மேற்பார்வை செய்ய அந்தந்த பகுதிகளுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தனர்.

தேசிய விளையாட்டு விழா நடைபெறும் திகதி அறிவிப்பு

இதேவேளை, கொவிட் – 19 வைரஸ் காரணமாக பெரும்பாலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில். எதிர்வரும் அக்டோபர் மாதம் 23, 24 மற்றும் 25 ஆகிய தினங்களில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் தேசிய மெய்வல்லுனர் குழாத்துக்கான வீரர்களை தேர்வு செய்கின்ற தகுதிகாண் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதனைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் 5ஆம், 6ஆம் திகதிகளில் 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியின்ஷிப் தொடர் மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களுடன் மாத்திரம் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<