சச்சினின் துடுப்பு மட்டையால் 37 பந்துகளில் சதமடித்த அப்ரிடி

169
Sachin Tendulkar and Shahid Afridi
Getty Image

பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், முன்னாள் வீரருமான சஹீட் அப்ரிடி, ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது போட்டியில் இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்திருந்தார். இதற்காகப் பயன்படுத்திய துடுப்பு மட்டை, சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கியது என தற்போது தெரிய வந்துள்ளது.

1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசி அச்சாதனையை 18 வருடங்களாக தக்க வைத்திருந்தார்

எனினும், 2014ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் கடந்து அப்ரிடியின் சாதனையை முறியடித்திருந்தார்

அதன்பிறகு 2015இல் ஏபி டிவில்லியர்ஸும் 31 பந்துகளில் அதிவேக சதமடித்து சாதனை படைத்தார்.

உலகின் சிறந்த தலைவர் டோனியா? பொண்டிங்கா? அப்ரிடியின் பதில்

இந்நிலையில், சச்சின் வழங்கிய துடுப்பு மட்டை மூலமாகத்தான் சஹீட் அப்ரிடி உலக சாதனையை நிகழ்த்தினார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அசார் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இணைய நிகழ்ச்சி ஒன்றில் அசார் மஹ்மூத் விரிவாகப் பேசினார். அதில் அவர் கருத்து தெரிவிக்கையில்

வகார் யூனிஸ் வழங்கிய துடுப்பு மட்டை மூலம் தான் அப்ரிடி உலக சாதனை படைத்தார். ஆனால், வகார் யூனிஸிற்கு அந்த துடுப்பு மட்டையை சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கியிருந்தார்.

1996ஆம் ஆண்டு, சஹாரா கிண்ணத் தொடர் முடிந்தபின்பு, அப்ரிடியும் நானும் (அசார் மஹ்மூத்) பாகிஸ்தான் அணிக்கு அறிமுகமானோம். முஸ்டாக் அஹமட் காயத்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகியதால், பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த அப்ரிடி அணிக்குள் சேர்க்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணியுடன் இணையும் ஹாரிஸ் ரவூப்

அந்த காலகட்டத்தில், இலங்கை அணியில் சனத் ஜயசூரியா மற்றும் ரொமேஷ் களுவிதாரன ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி உலகின் கவனத்தைப் பெற்றுக் கொண்டனர்.

எனவே, இலங்கையைப் போல, பாகிஸ்தான் அணியிலும் ஆரம்பத்தில் ஒரு அதிரடி ஆட்டக்காரரைக் களமிறக்க வேண்டும் என்று அப்போதைபாகிஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்தது. எனவே இலங்கைக்கு எதிராக அதிரடியாக விளையாட வேண்டும் என அப்போதைய பாகிஸ்தான் அணியின் தலைவர் வசீம் அக்ரம் தெரிவித்தார்.

இந்த நிலையில், வலைப் பயிற்சியின் போது, அப்ரிடி அதிரடியாக விளையாடி பந்துகளை அனைத்து திசைகளிலும் சிதறடித்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த பயிற்சியாளர், அப்ரிடி 3ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராகக் களமிறக்க முடிவு செய்தார் எனக் கூறினார்.

பாகிஸ்தானுடன் விளையாடவுள்ள இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான  அந்தப் போட்டியில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்கனை எடுத்திருந்தபோது அப்ரிடி களமிறங்கினார். தொடக்க முதலே அதிரடியாக ஆடிய அவர் 11 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளின் உதவியுடன் 37 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்தார். ஆனால், அவர் பயன்படுத்தி துடுப்பு மட்டை சச்சின் டெண்டுல்கர் வழங்கியது என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

அப்ரிடி பெற்ற அந்த சதம் குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்ட அசார் மஹ்மூத்

பந்துவீச்சாளராக அறிமுகமான அப்ரிடி, வகார் யூனிஸ் வழங்கிய துடுப்பு மட்டை மூலம் அதிரடி சதம் விளாசினார். இதனால் அன்று முதல் துடுப்பாட்ட வீரராகவும் மாறிவிட்டார்

வகார் யூனிஸ்க்கு சச்சின்தான் அந்த துடுப்பு மட்டையை பரிசாக வழங்கியிருந்தார் என நினைக்கிறேன். அதன்பின்பு சஹீட் அப்ரிடி தனது அசாத்திய திறமையால் அணியில் நிரந்தர இடம் பிடித்து, பாகிஸ்தான் அணியின் தலைவராகவும் இருந்தார் எனத் தெரிவித்தார்.

நான்கு மாதங்களின் பின் பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய இம்ரான் தாஹிர்

இதனிடையே, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை அப்ரிடி சிறப்பாக வழிநடத்தினார். பந்து வீச்சிலும், துடுப்பாட்டத்திலும் சிறந்த முறையில் சோபித்தார். இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி போராடித் தோல்வியடைந்தது எனக் கூறினார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க