இன்னோர் சகாப்தம் – பேராசிரியர் காலோ பொன்சேகா

Share

ஓர் மனிதன் தன் வாழ்க்கையை சரியாகத்தான் வாழ்ந்திருக்கிறாரா என்கின்ற கேள்விக்கான பதிலை அவர் மறைந்த செய்தி கேட்டு ஏங்கிடும் மனங்களில் தெரிந்துகொள்ளலாம் .

பேராசிரியர் காலோ பொன்சேகா ..

1933ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி பிறந்த இவர்,நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியிலும்,கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரியிலும் தனது ஆரம்பக்கல்வியை கற்றார்.பின்னர் சிலோன் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இணைந்து தன் மருத்துவ பட்டப்படிப்பை 1960ம் ஆண்டில் முடித்துக்கொண்டார்.

1962ம் ஆண்டில் சீலோன் பல்கலைக்கழகத்தின் உடலியல் திணைக்களத்தின் விரிவுரையாளராக பணியாற்ற தொடங்கினார் . எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் Ph.D படிப்பை முடித்துக்கொண்டு 1967ம் ஆண்டு மீண்டும் நாடு திரும்பிய அவர் ,1982 ஆம் ஆண்டில் பேராசிரியராக கடமை புரிய தொடங்கினார் .

North Colombo Medical College (NCMC) 1989இல் தேசியமயமாக்கப்பட்டு 1991இல் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடமாக மாற்றம் பெற்றபோது பேராசிரியர் கார்லோ அவர்கள் அப்பீடத்தின் முதல் Dean ஆக கடமையேற்று 1997 ம் ஆண்டு வரை அங்கேயே கடமை புரிந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின் படிப்பிற்கான நிறுவனத்தின் முகாமைத்துவக்குழுவின் தலைவராகவும் கடமையாற்றினார்.

அதன் பின் இளைப்பாறிய விரிவுரையாளராக(emeritus professor) கொழும்பு பல்கலைக்கழகத்திலும் களனி பல்கலைக்கழகத்திலும் கடமையாற்றினார்.

2012ம் ஆண்டில் இருந்து 2017ம் ஆண்டு வரை இலங்கை வைத்தியச்சபையின் தலைவராக செயற்பட்ட இவர் தனது பதவிக்காலத்தில் மருத்துவத்துறையில் காணப்பட்ட பல்வேறு பிரச்சனைகளை தைரியமாக முகம்கொடுத்தவர்.

தனியார் மருத்துவக்கல்வி தொடர்பாக நிலவிய குழப்ப சூழ்நிலையிலும் தன் கருத்தை எவ்விடத்திலும் தைரியமாக எடுத்தியம்பிய தலைவர்.

ஓர் சிறந்த வைத்தியராக திகழ்ந்த இவர் கலைத்துறையிலும் கால்பதிக்க தவறவில்லை. சிங்கள மொழியில் பல பாடல்களை தன் பேனாவினால் அலங்கரித்த இவர் 1980களில் ஒரு அரசியல் செயற்பாட்டாளராகவும் இருந்துள்ளார்.லங்கா சமசமாஜ கட்சியின் மத்திய சபையில் ஒரு உறுப்பினராக அரசியலிலும் சிறந்த தடத்தை பதிவு செய்துள்ளார் .

ஒரு தலைசிறந்த வைத்தியரினதும் ஒரு சிறந்த தலைவரின் உயிரிழப்பு , நம் நாட்டின் வரலாற்றின் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.

சுகயீனத்தால் அவதியுற்று தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2019,செப்டம்பர் மாதம் 2ம் திகதி காலமானார்.

இலங்கை மருத்துவ வரலாற்றில் இன்னோர் சகாப்தம் முடிவடைந்தது.

தலைவர்கள் பிறந்து வருவதில்லை,உருவாகிறார்கள்;

பிறரை வழிநடாத்துகிறார்கள்…

 

Image Courtesy :

http://static.dailymirror.lk/media/images/image_1528908147-9e4c3db6cc.jpg
https://adaderanaenglish.s3.amazonaws.com/1567412546-Prof-Carlo-Fonseka-passes-away-B.jpg

 

 
Tagged :