கிரிக்கெட் பற்றி எழுதிக் கொஞ்சக் காலமாகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆரம்பித்துவிட்டது. கடந்த வருடத்தில் தான் தலைமை தாங்கிய 11 போட்டிகளில் 7 டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ள உற்சாகத்தோடு மைக்கேல் கிளார்க் அனுபவம் குறைவான, ஆனால் ஆற்றலுள்ள இளைய அணியோடு இந்தியா வந்துள்ளார். மறுபக்கம் இன்னுமொரு டெஸ்ட் தொடர் தோல்வி என்ன, ஒரு டெஸ்ட் தோல்வியே ...
இதோ இதோ என்று காத்திருந்து, திருட்டு DVD வந்தும் அதில் பார்க்க விரும்பாமல் நேற்று வந்தவுடன் திரையரங்கில் சென்று விஸ்வரூபம் பார்த்துவிட்டேன். இதில் கமல் ரசிகன் என்பதோ, இல்லாவிட்டால் First day First Show பைத்தியம் என்பதோ இல்லாமல் அடக்கி வைக்கப்பட்ட ஒரு படைப்பில் அப்படியென்ன ரகசியம் இருக்கப் போகிறது என்பதே எனது மிகப்பெரும் கேள்வியாக மனதுள் இருந்தது. படம் பார்த்த கொட்டாஞ்சேனை சினி வேர்ல்டில் ...
விஸ்வரூபம்... என்னதான் இந்தப் பெயரில் இருக்கோ தெரியவில்லை ஆரம்பம் முதலே சிக்கல்.. இழுபறி... நேற்று நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றி மீண்டும் தடையாக இழுபறி. கமல் என்ற கலைஞன் முடக்கப்படுகிறான்.. ஒடுக்கப்படுகிறான்.. அரசியல் விளையாட்டுக்களால் பந்தாடப்படுகிறான் என்பது தெரிகிறது. அவர் வழங்கியுள்ள ஊடகவியலாளர் சந்திப்புப் பேச்சு எவ்வளவு தூரம் காயப்பட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ...
தமிழ்நாட்டில் தடை நீங்கியது.. எத்தனை திருப்பங்கள், குழப்பங்கள், திடுக் திடுக் கணங்களைத் தாண்டி இந்தத் தீர்ப்பு? ஒரு மாநில அரசின் முட்டாள் தனமான வாதங்களை எதிர்த்து கமலின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வைத்த நியாயமான வாதங்கள் வென்றிருக்கின்றன. மதவாதிகளைத் (அடிப்படை இல்லாமல் படம் பார்க்காமலே, இதிலே ஆபத்துள்ளது என்று முதலில் இருந்து கடைசிவரை குரல் எழுப்பிய சிலரை மட்டும்) தூண்டி விட்டு ...
ஹர்ஷுவுக்கு அப்பிள் சாப்பிட விருப்பம், ஆனால் அப்பிள் என்று தெரிந்தால் சாப்பிட மாட்டான்... ஒரு நாள் விருந்தகம் ஒன்றுக்கு சாப்பிடப் போயிருந்தோம்.. சாப்பாட்டுக்குப் பின்னர் ஒவ்வொருவரும் வேறு வேறு dessert order பண்ணி சாப்பிடும் நேரம், இவன் தனக்குப் பிடித்த ஏதோ ஒன்றை உண்டு முடித்துவிட்டு, தன்னுடைய தாயாரின் Fruit salad ஐயும் பதம் பார்க்க ஆரம்பித்த நேரத்தில் அவன் குறிவைத்து பப்பாளி மற்றும் மாம்பழத் ...
நாளை இலங்கை அணியின் அண்மைக்கால மிகச் சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர்களில் ஒருவரான / முதன்மையானவரான மஹேல ஜெயவர்த்தன இலங்கை அணியின் தலைவராக தனது இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளார். யாருக்குத் தெரியும் புதிய அணித்தலைவராக வருபவர் சொதப்பி, தடுமாறி வேறு யாரும் இல்லாமல் மீண்டும் மஹேலவை "கொஞ்ச நாள், புதியவரைத் தெரிவு செய்யும் வரை தலைவராக இருந்து அணியைக் காப்பாற்றுங்கள்" என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் ...
அகில உலக சுப்பர் ஸ்டார் ஒபாமா தனது இரண்டாவது பதவிக்காலத்துக்காக நேற்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவில் எது மாறினாலும் சில விஷயங்கள் மாறவே மாறா... குறிப்பாக எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டங்கள், பதவியேற்பு முறைகள், ஆட்சிக்கான வரம்புகளில் எந்தக் கொம்பன் வந்தாலும் மாற்றங்களைத் தன் இஷ்டப்படி செய்ய முடியாது. மூன்றில் இரண்டு என்ன மூன்றில் மூன்று வந்தாலும் இப்படி யாப்பு, சட்டவாக்கங்களில் ...
இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து தனியார் தொலைக்காட்சியான CSN தொலைக்காட்சியில் (இதன் பின்னணி, பக்கபலம் பற்றி விமர்சனங்கள் உண்டு.. எனக்கும் கூட.. அது கிடக்கட்டும் ஒரு பக்கம்)வாராந்த விளையாட்டுத் தொகுப்பான Sports week என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன். சர்வதேச விளையாட்டுச் செய்திகளையும், அதிகமாக இலங்கையில் இடம்பெறும் உள்ளூர் விளையாட்டுச் செய்திகளையும் தொகுப்பாகத் தரும் இந்த வாராந்த ...
சிரிக்க வைக்கப் போகிறோம் தயாராக வாங்கோ... என்று சந்தானம் அழைத்தபிறகு, போதாக்குறைக்கு இணையம் மூலமாகவே கடந்த இரண்டாண்டுகளில் எங்கள் இதயம் கவர்ந்த பவர் ஸ்டார் இருக்கும்போது கேட்கவா வேண்டும்? இரட்டை அர்த்தம் இல்லாமல், சலிக்கவைக்காமல், தொய்வில்லாமல் ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுப்பதும் சவாலான விடயம் தான். ஆனால் சாதித்துக் காட்டியிருக்கிறார் சந்தானம் ஒரு தயாரிப்பாளராக. மணிகண்டன் ...
சில சப்பைக் கதைகளைக் குப்பையாய் எடுத்து எப்படியாவது ஒப்பேற்றிவிடலாம் என்று யோசிக்கின்ற இயக்குனர்களுக்கு ஹீரோவின் மாஸ், ஹீரோயினின் கவர்ச்சி, ஹிட் ஆன பாடல்கள், நகைச்சுவை நடிகரின் விளாசல் form ஆகியன துணை இருக்கும். இயக்குனர் சுராஜின் முன்னைய திரைப்படங்கள் அவரது 'பெருமை' சொல்லக் கூடியவை, மூவேந்தர், தலைநகரம், மருதமலை, படிக்காதவன் & மாப்பிள்ளை. இந்தப் படங்கள் எல்லாம் 'எப்படி; என்று நம்ம ...
இசைப்புயலுக்கு எனதும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். (ஒன்பதாம் திகதி இன்றைத் தலைகீழாக ஆறாக எண்ணிவிட்டேன் என்று எண்ணிக்கொள்ளுங்கள்) எங்களோடு சேர்ந்து வளர்ந்த ஒருவர் இப்போது உலகத்தின் உச்சங்களில் ஒருவராக இருக்கும்போது வரும் ஒரு உரிமை கலந்த பெருமை எனக்கு எப்போதும் ரஹ்மானில் உள்ளது. அவர் இன்னும் எம்மவராகவே இருப்பதாலும்.... அவரது முதல் பாடல் வெளிவந்த நாளில் இருந்து படிப்படியான வளர்ச்சியும், ...
பிறந்திருக்கும் இந்த 2013ஆம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் நல்லதைக் கொண்டுவரட்டும்; நிம்மதி, சந்தோசம், சமாதானத்தைக் கொண்டுவரட்டும் என்று வாழ்த்துகிறேன். இன்று ஒரு சந்தோசம், உற்சாகம், நிம்மதி எல்லாவற்றையும் உணர்ந்தேன்... கடந்த வருடங்கள் போலவே நண்பர்கள், நேயர்களின் வாழ்த்துக்கள், இரு மாத கால ஓய்வுக்கு இனி வரும் சில நாட்களில் விடை கொடுத்து மீண்டும் நேரமேயில்லாமல் பம்பரமாக ஓடக் கூடிய காலம் ...
கும்கி மைனா தந்த பிரபு சொலமனின் இன்னொரு களத்தில் அமைந்த படம். காட்டு யானை, மலைவாசிகளும் அவர்களது வாழ்க்கையும் கலந்த கதை என்று இயக்குனர் பேட்டியளித்துத் தந்த ஆர்வங்கள் தூண்டிவிட்டது ஒருபக்கம், பிரபுவின் மகனின் அறிமுகம் இன்னொரு பக்கம், பிரபு சொலமன் மைனா மூலம் ஏற்படுத்தி வைத்துள்ள பிம்பம் இன்னொரு பக்கம்... இவையெல்லாம் தாண்டி 'கும்கி' பாடல்கள் எல்லாம் மனதை அள்ளி இருந்தன. ஒரு படத்தின் அத்தனை ...
இன்று காலையிலே சற்றுத் தாமதமாகத் துயில் எழுந்தது மூன்று மரணச் செய்திகளுடன்... இலங்கையின் பிரபல நாடகக் கலைஞர் உபாலி செல்வசேகரன் டெல்லியில் ஆறு மிருகங்களால் வன்புணர்வு செய்யப்பட்டு பல நாட்களாக வாழ்க்கைக்காகப் போராடி வந்த டெல்லி மாணவி கிரிக்கெட்டின் ஆங்கில நேர்முக வர்ணனையின் ஆளுமையாக விளங்கிய டோனி கிரெய்க் இந்த மூன்று மரணங்களுமே வெவ்வேறு தாக்கங்களை எனது மனதில் ஏற்படுத்தியவை; பல்வேறு தடங்களை ...
கொஞ்சம் (என்ன கொஞ்சம் முழுமையாகவே என்பது தான் பொருத்தம் என்று நீங்கள் சொன்னா சரிதானுங்கோ) ஓய்வாக இருப்பதால் சில தெரிவு செய்யப்பட புதிய படங்களை - திரையரங்குக்கு வராதவற்றை - வீட்டிலே பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்த பின்பு மீண்டும் திரையரங்கில் பார்த்த படங்கள் கும்கி & பிட்சா. இவை வெளிவந்து சில பல நாட்கள் ஆனதால் விமர்சனம் என்று ...
சச்சின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு... இது பற்றியே இந்த இரண்டு நாட்களாகப் பேச்சு... இந்த ஓய்வு எதிர்பார்த்ததே என்றாலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விளையாடிவிட்டு ஓய்வுபெறக் காத்திருக்கிறார் என்றதால் தான் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் பின்னர் சச்சின் ஓய்வை அறிவிக்கவில்லை என்று நான் நினைத்திருந்தேன். உண்மையில் நாற்பது வயதை நெருங்கும் ...
உலகம் நாளைக்கு அழியப்போகுதாம்... இன்று தான் இறுதியாக ஒரு முழு நாளும் என்று வரும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை. தற்செயலாக அழிந்தாலும், அதற்கு முன்னதாக இறுதியாக ஒரு கிரிக்கெட் இடுகை போடலாமே னு தான்..... ;) கடந்த வாரம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடுத்தடுத்த நாட்களில் முடிவுக்கு வந்திருந்தன. நாக்பூரில் இந்தியா வென்றால் தொடர் சமப்படும் என்ற நிலையில் ஆரம்பித்த இந்திய-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி , ...
இப்போதெல்லாம் கிரிக்கெட் மற்றும் ஏனைய விளையாட்டு இடுகைகள் குறைந்துவிட்டன என்று சில நண்பர்கள் குறைப்பட்டிருந்தார்கள்... அதற்கான முக்கிய காரணங்கள்... தமிழ் மிரர் இணையத்துக்காக அடிக்கடி விளையாட்டுக் கட்டுரைகள் எழுதி வருகிறேன். எனவே எனது வலைப்பதிவிலும் எழுதினால் அதே விடயங்கள் வந்துவிடும் என்ற ஒரு எச்சரிக்கை உணர்வு. இன்னொன்று ஒரே நேரத்தில் விளையாடப்படும் பல போட்டிகள்... சில நேரங்களில் எந்த ...
இளையராஜாவின் பாடல்கள் வர முதலே என் நண்பர்கள், நான் பழகும் வட்டத்தில் ஒரு விஷயம் சொல்லி இருந்தேன்.. "கௌதம் வாசுதேவ மேனன், விண்ணைத்தாண்டி வருவாயா இளைஞர் வட்டாரத்தில் எடுத்துத் தந்த நல்ல பெயரையும் அந்த காதல் hype ஐயும் வைத்தே நீ தானே என் பொன்வசந்தத்தை ஓட்டிவிடப் பார்க்கிறார்; இதில் வேறு இளையராஜாவின் மீள்வருகை என்று விளம்பரம் வேறு பண்ணி பரபரப்பாக்கப் பார்ப்பார்" பாடல்கள் வந்தபோது குழாயடிச் சண்டை ...
பாரதி கவிதை - தமிழ் - பாடல் இவை மூன்றையும் நேசிக்கச் செய்த என் அன்புக்குரிய பாரதியின் பிறந்தநாள் நேற்று. வழமையாக வானொலியில் சிறப்பு நிகழ்ச்சி செய்கின்ற வாய்ப்பு இம்முறை இல்லாமல் போனாலும், காலையில் Dialog தலைப்பு செய்திகள் வாசிக்க எழுந்த பொழுதிலிருந்து, மனதுக்குப் பிடித்த பாரதி கவிதைகளை வாசித்து, நயந்து கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. பாரதி கவிதைகளை முழுமையாகத் தேடும் நண்பர்களுக்கு நான் ...