பலநாள் பட்டினி கிடந்தவனுக்கு பந்திபோட்டு எல்லாச் சுவையும் உள்ள,பலசுவையான ஆகாரங்களை வயிறு நிறையப் பரிமாறினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' எனக்கு.. அண்மைக்காலமாக ஏற்படுத்திய கடுப்பைப் போக்க படம் முழுக்க ரசிக்கக்கூடியதாக அமைந்த வ.வா.ச நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு கொட்டாவியாவது இல்லாமல் பார்த்த படம். படம் முழுக்க சிரிப்புக்குக் குறைவில்லை. சிரிப்பு மட்டுமே ...
ஒரு கலைஞனின் கருத்துவெளிப்பாட்டு உரிமை என்றவகையில் தலைவா வெளிவருவதில் யார் யார் தடையாக இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் கண்டனங்களைப் பதிவு செய்துகொண்டே படம் பார்த்து நான்கு நாட்களின் பின்னர் எனது சமூகக் கடமையை நிறைவேற்றுகிறேன். மும்பாய் தாதா படங்கள் என்றவுடன் பாட்ஷா, நாயகன் படங்களை கொப்பி அடிச்சிட்டான் என்பதும், அப்பா, மகன், ஆட்சி, அரசியல் என்றவுடன் தேவர் மகன், நாட்டாமை படத்திலிருந்து ...
மரியான் - இறப்பு இல்லாதவன் என்று பெயர் வைத்ததிலிருந்து, இந்தியத் தேசிய விருது நடிகர் தனுஷ், இசைப்புயல் என்று ஏக எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய இயக்குனர் பரத்பாலா இவ்விருவர் மீதே அதிக பாரத்தை ஏற்றி (குட்டி ரேவதி, ஜோ டீ க்ரூஸ் என்று சில அறிந்த 'சிந்தனையாளர்கள்' வேறு)வெகு சாதாரணமான ஒரு கதையை (சம்பவம் உண்மையாக இருந்தால் மட்டும் போதுமா?) வெகு வெகு சாதாரணமாக இயக்கி, அறுசுவை விருந்தை ...
கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த ஒருநாள் அணியாக இந்தியாவும், மிகச் சிறந்த ஒருநாள் போட்டித் தலைவராக மகேந்திர சிங் தோனியும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டாடப்படுகிறார்கள். 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் முடி சூடிய பிறகு தோனியின் புகழ் உச்சத்தைத் தொட்ட பிறகு, இடை நடுவே வந்த தோல்விகள் (முக்கியமாக டெஸ்ட் தொடர் தோல்விகள்) தோனியின் தலைமைப் பதவியைப் பறிக்கும் ...
பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப் போட்டி வருணபகவானின்ஒப்புதல் இல்லாமல், அவரது குறுக்கீடுகளுடன் இந்த இடுகையை நான் இடும் வரை இடம்பெறாமலேயே இருக்கிறது. 2002ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒரு தடவை கிண்ணம் வெற்றியாளர்களினால் பகிர்ந்துகொள்ளப்பட இருக்கிறது போல் தெரிகிறது. சந்தேகமில்லாமல் இந்தத் தொடரின் மிகச் சிறந்த இரு அணிகளும் மோதிக்கொள்கின்றபோட்டிக்கு மழை தான் மத்தியஸ்தம் ...
Chokers !!! அவர்களது பயிற்றுவிப்பாளர் கரி கேர்ஸ்டனே ஒத்துக்கொண்ட பிறகு வேறு பேச்சு ஏன் ? எவ்வளவு தான் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்தாலும், என்ன தான் பழையவற்றை மறந்துவிட்டோம்; புதிய அணியாக மாறி இருக்கிறோம் என்று உரக்க அறிக்கை விட்டாலும், 90களில் ஆரம்பித்த தென் ஆபிரிக்காவின் இந்த choking வியாதி இன்னமும் இல்லை. அரையிறுதி/knock out கட்டங்கள் வரை அடித்துப் பிடித்து சூரர்களாக ...
நடப்பு சம்பியனும் வெளியே.. கடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடிய மற்ற அணியான நியூ சீலாந்தும் வெளியே. நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலங்கையை அரையிறுதிக்கு அழைத்துச் செல்ல, இவ்விரு டஸ்மன் நீரிணை சகோதரர்களையும் ஒரேயடியாக இங்கிலாந்திலிருந்து வெளியே அனுப்பியுள்ளது. இலங்கை அணி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரொன்றில் பங்குபற்றும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இதுவென்பது ...
மூன்று நாட்களாக நடந்த போட்டிகள் பற்றி, இடுகைகள் போட முடியாதளவு பிசி. மூன்று போட்டிகளுமே மழையின் குறுக்கீடுகள் காரணமாக கழுதை கட்டெறும்பாய்த் தேய்ந்தது போல, ஓவர்கள் குறைக்கப்பட்டு எக்கச் சக்க குழப்பங்களோடும், அரை குறையாகவும் நடந்து முடிந்த போட்டிகளாயின. பிரிவு B யில் இருந்து இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் அரையிறுதிகளுக்குத் தெரிவாகியிருக்கின்றன. பிரிவு Aயில் இருந்து நேற்றைய நியூ ...
சில போட்டிகளை தூக்கம் விழித்திருந்து பார்த்து முடிகிற நேரம், இதுக்குப் போய் ஏன்டா இவ்வளவு நேரம் விழித்திருந்தோம் என்று எண்ணத் தோன்றும்.. அடுத்தநாள் முழுக்க அலுவலகத்தில் தூங்கி வழிகிற நேரம் எல்லாம் எங்களிலேயே எரிச்சல் வரும். தூக்கம் கண்ணைச் சுழற்றும் நேரம், உடலும் களைத்திருந்து கட்டாயம் பார்த்தேயாகவேண்டும் என்றிருக்கும் போட்டிகளைப் பார்க்காமலே தூங்கிவிட்டு, அடுத்த நாள் முடிவைப் பார்த்து 'அடடா ...
ஆறு போட்டிகளாக வருவதும் போவதுமாக விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்த இங்கிலாந்து மழை, நேற்றைய ஏழாவது போட்டியில் வந்தே விட்டது. ஏற்கெனவே ஏழரைச் சனியனின் உச்ச பட்ச பார்வையில் இருந்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் போட்டியிலே, அந்த அணி கொஞ்சம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும் நேரம் பார்த்து. உபாதை காரணமாகத் தொடர்ச்சியான இரண்டாவது போட்டியிலும் தங்கள் தலைவர் கிளார்க் இல்லாமல், எதிரணி வீரரின் ...
ஒரே கல்லில் இரு மாங்கனிகள்... இந்தியா நேற்றுப் பெற்ற வெற்றியில் இரு அணிகளுக்கு ஒரே நேரத்தில் அடி... மேற்கிந்தியத் தீவுகளுக்கு விழுந்த சாதாரண அடி, பாகிஸ்தானுக்கு மரண அடியானது. தொடரின் ஆரம்பத்தில் கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையாகக் கருதப்பட்ட பாகிஸ்தான் தான் முதலாவதாக இந்த சம்பியன்ஸ் கின்னத்தொடரில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்த அணியாகியுள்ளது. மறுபக்கம், இந்தியா ...
மீண்டும் ஒரு தடவை நான் சொன்னது நடந்தது. பாகிஸ்தான் அணி தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொண்டு தோற்கும் ஒரு அணி என்பது மீண்டும் புலனாகியுள்ளது. கஷ்டப்பட்டு பந்துவீச்சாளர்கள் எடுத்துத் தந்த ஒரு அருமையான வாய்ப்பைப் பொறுப்பற்ற துடுப்பாட்டம் மூலம் வீணாக்கி, இப்போது அரையிறுதி வாய்ப்பை அநேகமாக இழந்து நிற்கிறது. தென் ஆபிரிக்க அணி தனது முக்கிய, அனுபவம் வாய்ந்த வீரர்களை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கும் ...
குறைவான ஓட்ட இலக்குகள் வைக்கப்படுகின்ற போட்டிகள் அதிக ஓட்டங்கள் மழையாகப் பொழிகிற போட்டிகளை விட அதிக சுவாரஸ்யமாக இருப்பது வழமை. வெறும் 139 ஓட்டங்களே இலக்காக வழங்கப்பட்ட போட்டி ஒன்றில் 19 விக்கெட்டுக்களை மொத்தமாக வீழ்ந்தது கண்டோம் . அவசர ஆட்டமிழப்புக்கள், அதிரடி ஆட்டமிழப்புக்கள், துல்லியமான விட்டுக்கொடுக்காத பந்துவீச்சுக்கள், தடுமாறிய நடுவர்கள், நம்பமுடியாத அபார களத்தடுப்புக்கள், நகத்தை ...
நடப்புச் சாம்பியன்கள் மண் கவ்வுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தது நேற்று நடந்தது. இறுதியாக தென் ஆபிரிக்காவில் நடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற அணியின் தரத்திலும் பலத்திலும் பாதியளவான ஆஸ்திரேலிய அணியே இப்போது இங்கிலாந்துக்கு வந்திருக்கிறது. எவ்வளவுதான் பூசி மெழுகிப் போக்குக் காட்டினாலும் எவ்வளவு நாளுக்குத் தான் வலுவுள்ள அணி மாதிரியே நடிக்கிறது? சரியான சமபல அணி இல்லாமல் முன்னைய ஆஸ்திரேலிய அணிகள ...
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டியாக இருக்க, நேற்று நடந்த போட்டி குறைவான ஓட்டங்களை இரு அணிகளும் பெற்று வெற்றிக்காக இழுபறிப்பட்ட போட்டியாக அமைந்தது. ஒரு நாள் போட்டிகளுக்கான தோதான, தரமான, சமயோசிதமான பந்துவீச்சாளர்கள் நிறைந்த இரு அணிகளும் விளையாடிய போட்டி என்பதால் துடுப்பாட்ட வீரர்களுக்கு இத்தகைய சவால் இருக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. ...
முதன் முதலாக 1998 இல் ICC Knock Out என்ற பெயரில் பங்களாதேஷில் இத்தொடர் ஆரம்பித்தபோது இவ்வளவு காலமும் இது பெயர்கள் பலப்பல மாறி (Mini World Cup, Champions Trophy) நீடிக்கும் என்றோ, அல்லது இப்போது வரவேற்பையும் வர்த்தக லாபங்களையும் அத்தோடு சேர்த்துப் பல வம்புகளையும் சேர்த்தே கொண்டு வந்திருக்கும் Twenty 20 போட்டிகள் ஆரம்பித்து ICC அந்தஸ்து பெறும் என்றோ, ஒரு நாள் ...
வணக்கம் நண்பர்ஸ்... இந்தப் பக்கம் ஞாபகம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அழைத்திருக்கிறேன். தூசு தட்டாமல் சில மாதம் கிடந்ததனால் உள்ளே நுழையும்போதே தும்மல் தான்... சமாளித்து வாருங்கள்... இதுவரை கடைசியாக எப்போது இடுகை ஒன்றை இட்டிருக்கிறேன் என்று தற்செயலாகக் கடந்த வாரம் பார்த்தபோது தான் என் வாழ்க்கை ஓட்டம் கடந்த மாதங்களாக எப்படி இருக்கிறது என்று உணர முடிந்தது. பல விஷயங்கள் விரைவாக, ...
2013 ஆம் ஆண்டின் IPL போட்டிகளின் 13 போட்டிகள் முடிவடைந்த பிறகு, நேற்றைய போட்டி - Delhi Dare Devils vs Sun Risers Hyderabad - 14வது போட்டியாக நடைபெற முதல் வழமையாக நான் எழுதும் 'தமிழ் மிரரின்' விளையாட்டுப் பகுதிக்காக எழுதிய கட்டுரை இது.... எனினும் சில பல தொடர்பு, தொழிநுட்ப சிக்கல்களால் பிரசுரிக்க முடியாமல் போக, 14வது போட்டியும் முடிந்த பிறகு, 13ஆம் திகதியாகிய இன்று கொஞ்சம் தாமதமாக இங்கே இடுகிறேன் ...
மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் எடுத்த அதே அமீரா இந்த அமீரின் ஆதி - பகவனை மூன்று வருஷமா முக்கி முக்கி எடுத்தார்? இவரது முன்னைய படங்களிலேயே பல காட்சிகளும் கதாபாத்திரங்களும் ஆங்கிலப் படங்களில் பார்த்த மாதிரியே இருக்கு என்று அடித்து சொல்லிவந்தேன். ஆதி - பகவனிலோ அப்படியே அப்பட்டமான ஆங்கிலப் பாணிக் கதை உருவாக்கம் மட்டுமல்ல, பல ஆங்கில, ஹிந்திப் படங்களில் பார்க்கிற காட்சி மாற்றங்களும் கூட. ...