நாளை இலங்கை அணியின் அண்மைக்கால மிகச் சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர்களில் ஒருவரான / முதன்மையானவரான மஹேல ஜெயவர்த்தன இலங்கை அணியின் தலைவராக தனது இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளார். யாருக்குத் தெரியும் புதிய அணித்தலைவராக வருபவர் சொதப்பி, தடுமாறி வேறு யாரும் இல்லாமல் மீண்டும் மஹேலவை "கொஞ்ச நாள், புதியவரைத் தெரிவு செய்யும் வரை தலைவராக இருந்து அணியைக் காப்பாற்றுங்கள்" என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் ...

இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து தனியார் தொலைக்காட்சியான CSN தொலைக்காட்சியில் (இதன் பின்னணி, பக்கபலம் பற்றி விமர்சனங்கள் உண்டு.. எனக்கும் கூட.. அது கிடக்கட்டும் ஒரு பக்கம்)வாராந்த விளையாட்டுத் தொகுப்பான Sports week என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன். சர்வதேச விளையாட்டுச் செய்திகளையும், அதிகமாக இலங்கையில் இடம்பெறும் உள்ளூர் விளையாட்டுச் செய்திகளையும் தொகுப்பாகத் தரும் இந்த வாராந்த ...

உலக T20 கிண்ண வெற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிடைத்து பற்றி இப்பொழுது சொல்லவந்தால் "அண்ணோய் டீ ஆறிட்டுது" என்று குரல் வரும்.... கொஞ்சம் நேரக் குறைவு, அதைவிட அலுவலகத்தில் பெரிய பெரிய ஆணி புடுங்கல்கள், அலவாங்கு புடுங்கல்கள், சில அதிமுக்கிய முடிவுகளை எடுத்தல்கள் எல்லாம் இருந்ததால், வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. இலங்கை அணி தோற்றதால் மனம் உடைஞ்சு போயிட்டீங்களா அண்ணே  என்று கேட்டு ...

இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. தனக்கான வாய்ப்பை உலகின் தலைசிறந்த Twenty 20 அணிகளில் ஒன்றான பாகிஸ்தானை அதன் வழியிலேயே வீழ்த்தி இலங்கை அணி தன் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. தொடர  முதல் அரையிறுதிகள் ஆரம்பிக்க முதல் தமிழ் மிரருக்காக எழுதிய Super 8 சுற்றைப் பற்றிய அலசல் & அரையிறுதிக்கான அறிமுகத்தை வாசித்துவிடுங்கள் (இதுவரை வாசிக்காவிட்டால்) அரையிறுதிகள் அழைக்கின்றன: ICC உலக Twenty ...

அரையிறுதிகளுக்கு மூன்று அணிகள் தெரிவாகியுள்ளன. அரையிறுதிகளுக்குத் தெரிவான முதல் அணியாக நேற்று இலங்கை மூன்று வெற்றிகளுடன் பள்ளேக்கலையிலிருந்து  கொழும்பு வருகிறது. இலங்கையின் லசித் மாலிங்க சுருட்டிய ஐந்து விக்கெட்டுக்களால் நடப்புச் சாம்பியன்கள் இங்கிலாந்து அரையிறுதியே காணாமல் வெளியேறி, தொடர்ச்சியாக ஒரு அணி இரு உலக T20 கிண்ணங்களைத் தொடர்ச்சியாக வென்றதில்லை  என்பது மீண்டும் நியதியாகி உள்ளது. ...

27 போட்டிகள் கொண்ட உலக T20  கிண்ணத்தின் பன்னிரண்டு போட்டிகள் நிறைவடைந்து இன்று பிற்பகல் முதல் Super 8 சுற்று ஆரம்பிக்கிறது. இதிலும் பன்னிரண்டு போட்டிகள். ஆனால் இரு பிரிவுகள்... இந்தப் போட்டிகள் பற்றியும், நடந்து முடிந்த முதல் சுற்றுப் போட்டிகள் பற்றியும் முடிந்தளவு முழுமையாக தமிழ் மிரரில் எழுதியுள்ளேன். 'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் ...

நேற்று இலங்கையின் ஆரம்பமே அமர்க்களமாகி இருக்கிறது. இலங்கை வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும் இப்படி அமோகமாக வெல்லும் என்றும் முதலாவது போட்டி இப்படி ஒரு பக்கத்துக்கு இலகுவாக வெற்றியைக் கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இரண்டு மென்டிஸ்களும் சேர்ந்து உருட்டி எடுத்து விட்டார்கள் பரிதாபமான சிம்பாப்வே அணியை. அஜந்த மென்டிஸ் தான் வைத்திருந்த T20 சர்வதேசப் போட்டிகளின் மிகச் சிறந்த ...

19 நாள் திருவிழா.. பரபரப்புக்குக் குறைவில்லை. ESPN-STAR ஒளிபரப்பு நிறுவனங்களின் கூற்றுப்படி இம்முறை நடைபெறும் இத்தொடரானது ஒளிபரப்பு, பார்வையாளர் சாதனைகளைஎல்லாம் முரியடித்துவிடுமாம். ஆமாம் நாளை ஆரம்பமாகவுள்ள  ICC World Twenty20 என்று அழைக்கப்படுகின்ற Twenty 20 போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர்   பற்றித் தான் சொல்கிறேன். SLPL வணிகரீதியில் வெற்றியைத் தந்த பின்னர் இன்னுமொரு வசூல் வெற்றியைத் ...

 ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு.... ஸ்பெய்ன் எதிர் ஜெர்மனி என்று எதிர்வு கூறியிருந்த நான் உட்பட ஏராளமானோருக்கு விக்கிரமாதித்தன் மாபெரும் அதிர்ச்சியை இத்தாலியின் மரியோ பலோடேல்லி கொடுத்திருந்தார். ஜெர்மனியின் வெளியேற்றம் ஒரு மிக வித்தியாசமான இறுதிப் போட்டியைக் கொடுத்துள்ளது. இதுவரை முக்கியமான தொடர்களின் இறுதிப்போட்டிகள் எவற்றிலும் ஒன்றையொன்று சந்தித்திராத இரு அணிகள் ...

பாகிஸ்தான் அணியை இலங்கை காலியில் துவைத்தெடுத்து ஒரு பக்கம்; விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆரம்பம் ஒரு பக்கம் என்று நேற்றைய நாள் அமோகமாக இருக்க, கால்பந்தாட்டப் பக்கம் அமைதியாக இருக்கிறது. ஆனால் இன்று முக்கியமான இறுதிக்கட்ட மூன்று போட்டிகளில் முதலாவது போட்டியோடு அமைதி கிழிந்து மீண்டும் கால்பந்தாட்ட ஆர்ப்பரிப்பு ஆரம்பிக்கிறது.  விக்கிரமாதித்தன் கால்பந்தாட்டப் போட்டிகளில் என்னுடன் ...

இன்று நள்ளிரவு முதல் ஐரோப்பிய கால்பந்தாட்டத் தொடரின் கால் இறுதிப் போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன. கால் இறுதிப் போட்டிகளுக்கு எந்த அணிகள் தெரிவாக வேண்டும் என்று நான் விரும்பி இருந்தேனோ, அவற்றில் நெதர்லாந்து, குரோஷியா, உக்ரெய்ன், ஸ்வீடன் ஆகிய அணிகள் அவுட். ஆனால் இவற்றில் நான்குமே தெரிவாகும் என்று நான் உறுதியாகத் தெரிவித்திருக்கவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவே வேண்டும். (விக்கிரமாதித்தன் இங்கே ...

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான Twenty 20 தொடர் போலவே ஒருநாள் சர்வதேசத் தொடரும் சமநிலையிலேயே முடிவடைந்துவிடுமோ என்றிருந்த ஒரு நிலையை மாற்றி இலங்கையை அஞ்சேலோ மத்தியூஸ் கரைசேர்த்த நேற்றிரவு இறுதிப் போட்டியுடன் இலங்கை தொடரை வென்றெடுத்துள்ளது. அணியாக விளையாடி இவ்விரு அணிகளும் மழையினால் குழம்பிய ஒரு போட்டிதவிர ஏனைய நான்கு போட்டிகளையும் வென்றதை விட, ஒரு சில தனிநபர் சிறப்பாட்டங்களால் ...

ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் முதல் வாரம்.. ஐரோப்பியக் கிண்ண ஆரம்பத்தில் எனது இடுகையொன்றில் மேலோட்டமாக சில விஷயங்களை சொல்லி இருந்த நான், தமிழ் மிர்ரரில் விரிவாக ஒரு கட்டுரை வரைந்திருந்தேன். வாசிக்காதவர்கள் இந்த சுட்டி வழியாக செல்லுங்கள். ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்துத் தொடர் A பிரிவு தவிர ஏனைய எல்லாப் பிரிவுகளிலும் உள்ள அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளையே விளையாடியுள்ளன. ...

ஒன்று இரண்டு அல்ல, மூன்று முக்கிய விளையாட்டுக்கள் மையம் கொண்டுள்ள ஒரு காலப் பகுதி இது. ஒரு பக்கம் கிரிக்கெட்டில் இலங்கை - பாகிஸ்தான், மறுபக்கம் இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள்... டென்னிசில் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளன.. நாளை உலகக் கிண்ணம், ஒலிம்பிக் போட்டிகளின் பின்னர் சர்வதேசரீதியில் முக்கியமானதாகக் கருதப்படும் கால்பந்துத் தொடர் ஒன்று ஐரோப்பாவில் ...

மீண்டும் ஒரு ஒலிப் பதிவு.. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற V for வெற்றி, V for விளையாட்டு நிகழ்ச்சியின் ஒலிப் பகுதிகளை இடுகையாக இங்கே தருகிறேன். இந்த நிகழ்ச்சி ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைகிறது. காரணம் நாளை (திங்கள்) முதல் எமது வெற்றி FM இல் இடம்பெறுகின்ற நிகழ்ச்சி மாற்றங்களின் காரணமாக இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக விடைபெறவுள்ளது.  இரு வருடங்களாக இந்த நிகழ்ச்சி விளையாட்டுப் ...

பற்றிய ஒலி வடிவ இடுகை ஒரு வாரத்துக்கு முந்திய வாரம் இட்டிருந்தேன்.. இதுவரை IPL 2012 - ஒலி இடுகை நல்ல வரவேற்பும் இருந்தது. கடந்த வாரம் தொடர்ச்சியைத் தரமுடியாமல் நேர,கால சூழ்நிலைகள் சதிசெய்திருந்தன.. இதோ கடந்த வெள்ளிக்கிழமை Vettri FMஇன் V for வெற்றி V for விளையாட்டு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான சிறப்புத் தொகுப்பு.. பகுதி 2 & 3 இல் ஏப்ரல் 27முதல் கடந்த வெள்ளிக்கிழமை ...

இவ்வருடத்துக்கான IPL போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னர் முன்னோட்டப் பதிவுகள் இட்டதன் பின்னர், ஆரம்பமாகிறது IPL 2012 ஐந்தாவது IPL ஐந்து அணிகள் பற்றி - IPL 2012 அலசல் 2 IPL பற்றி ட்விட்டரில் அலட்டி, அரட்டிக் கொள்வதுடன் ஒவ்வொரு நாளும் கழிகிறது. ஒவ்வொரு அணிக்கும் தலா 16 போட்டிகள், மே மாதம் 27ஆம் திகதிவரை நீடிக்கப் போகின்றன எனும்போது ஒருவித அயர்ச்சி ஏற்படுவதனால் இதைப் பற்றி இடுகைகளை இடும் ...

கொஞ்சக் காலமாக எந்த ஒரு இடுகையும் இடவில்லை; அதைவிட அதிக காலமாக கிரிக்கெட் இடுகைகள் இடவில்லை. ஏன் என்று என்னையே நான் கேட்டுப் பார்த்தேன்.. பிசி? ம்ம் கொஞ்சம்... அலுப்பு.. ம்ம் அதுவும் தான்.. என்னத்தை எழுதி என்னத்தை.. அதான் ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் போட்டிகள் நடந்திட்டே இருக்கே.. சச்சினின் சதத்தில் சதங்கள்.. ராகுல் டிராவிடின் ஓய்வு.. விராட் கொஹ்லி, வெர்னம் பிலாண்டர் ஆகியோரின் அமோக ஆட்டங்கள், ...

இன்றைய முன்னைய பதிவின் தொடர்ச்சி.... இலங்கை கிரிக்கெட் அணியைக் காய்ச்சி எடுக்கிறவர்கள் வாங்கோ.... நான் முன்பிருந்து பாகிஸ்தானிய அணியை ரசிக்காவிடினும் ஒரு சில வீரர்கள் காலாகாலமாக என் ரசிப்புக்குரியவர்களாக இருந்து வந்துள்ளார்கள். (நல்ல காலம் சூதாட்டக் கேசுகள் எவையும் அந்த லிஸ்ட்டில் இல்லை) அண்மைய ரசனைகளில் மிஸ்பா உல் ஹக் முக்கியமானவர். அவரது நிதானமான அணுகுமுறைகள் மிகப் பிடித்தவை. தலைவராக ...

இலங்கையில் வைத்து இந்த மைக்கேல் கிளார்க்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை தோற்கும் என்று கனவிலும் யாரும் நினைத்திரார்கள்.நானும் தான்.. ஆனால் இப்போது கிரிக்கெட்டில் நினைத்த எது தான் நடக்கிறது? டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாம் இடத்திலிருந்த இந்தியா

Previous Page