நான் எனது சொந்த ஊரில் இருந்த காலங்கள் கொஞ்சமே. படிப்பு மற்றும் இடைவிடாத வேலை என்று கொழும்பிலேயே பலகாலம் வாழ்ந்து வருவதால் ஊருக்கு போவது எப்போதாவது நடக்கும் நல்ல காரியம். வருஷம் தவறாமல் அம்மன் கோவில் திருவிழாவுக்கு நான் எப்படியாவது ஊருக்கு போவது வழக்கம். "டேய் நண்பா! நீ இந்த திருவிழாவுக்கும் ஊருக்கு வராம இருந்தால் உன்ர ஊர் citizenship cancelஆயிடும்.. ஊருக்குள்ள ஒருத்தனும் உனக்கு பொண்ணு குடுக்கமாட்டான்" என்று வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கு பத்து நாளைக்கு முன்னதாக போன் போட்டு மிரட்டுவான் ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நாளாந்தம் நாம் பலரைக் காண்கிறோம். சந்திக்கிறோம். ஒவ்வொருவரும் சொல்லுகின்ற கதைகளோடு பயணிக்கிறோம். அவர்களின் கதைகளை கடத்த நம் காதுகளை இரவல் தருகிறோம். இந்த நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்தக் கதை சொல்லும், கதை கேட்கும் பாத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் அத்தனை பேரும் ஒவ்வொரு நாளும் புதிய விடயங்களைப் படிக்கிறார்கள். அல்லது பழைய விடயங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள் சொல்கின்ற பாங்கில் கதைகள் கனமிழக்கின்றன. இன்னும் சில கதைகளோ கனம் கொள
இது ஒரு ஊஞ்சல் பயணத்தின் ஒப்பிடம்,உணர்வைக் கிறுக்கும் ஒரு கைக் குழந்தையின் ஓவியம்.பிரிவை விடப் பயங்கரம் பூமியில் இல்லை, அதை ருசிப்பவன் மறுமுறை மரணிப்பதில்லை. நினைவோடு வாழ்ந்தால் எங்கிருந்தும் வாழலாம் என்ற என் கருத்துக்கள் எல்லாம் கண்முன்னே கருகிப் போகிறது.. கண்களிடம் இருந்து, கனவுகளை; காலம் கழட்டி எறிந்த வலி இன்னும் தீரவில்லை. வலியினால் விழி நீர் விழுவதை தடுக்க முடியவில்லை. "விமான நிலையம்" என் போன்றோருக்கு கண்ணீரைக் காதலிக்கும் ஒரு கல்லறைக் கட்டடம். பிரிவுகளுக்கு பின்னணி இசை வடித்துக் கொண்டிருக்கிறது ஏறி இற
2013 ஆம் ஆண்டின் IPL போட்டிகளின் 13 போட்டிகள் முடிவடைந்த பிறகு, நேற்றைய போட்டி - Delhi Dare Devils vs Sun Risers Hyderabad - 14வது போட்டியாக நடைபெற முதல் வழமையாக நான் எழுதும் 'தமிழ் மிரரின்' விளையாட்டுப் பகுதிக்காக எழுதிய கட்டுரை இது.... எனினும் சில பல தொடர்பு, தொழிநுட்ப சிக்கல்களால் பிரசுரிக்க முடியாமல் போக, 14வது போட்டியும் முடிந்த பிறகு, 13ஆம் திகதியாகிய இன்று கொஞ்சம் தாமதமாக இங்கே இடுகிறேன் ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கடந்த வாரம் முழுக்க, என் பேருந்துப் பயணங்களின் துணையாக Brené Brown இன் The Gifts of Imperfection என்ற நூல் இருந்தது. வெறும் வார்த்தைகளால் உளவியல் பேசாமல் வாழ்க்கையின் நிகழ்வுகளால் விடயங்கள் சொன்ன பாங்கு பிடித்திருந்தது. இந்த நூலை, வெறும் மகிழ்ச்சிக்கான வழிகளைச் சொல்லுகின்ற இன்னொரு நூலாக கண்டு கொள்ள முடியாது. மாறுபட்டதும் சொல்லவந்த விடயத்தை தெளிவாகச் சொல்லிருப்பதும் தான் சுவை. ஒருவன் தன் குறைகளை பற்றிய புரிதல்களோடு, அவற்றை தைரியமாக
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அழியும் உலகமும் அழியாத ஆசைகளும் என்ற பதிவில் நிரம்பி வழிகின்ற கோப்பை பற்றிய கதையொன்றைச் சொல்லியிருப்பேன். இன்றளவில் அதிகமானோர் தாம் கேள்விப்பட்டவையெல்லாம், அவை பற்றிய எந்த ஆய்தலும் இல்லாமல் நிஜமானதென நம்பி செயலிலீடுபடுகின்றனர். ஆய்தறியப்படாத விடயங்களின் தொட்டிகளாக, அவர்களின் மனது நிரம்பி வழிந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை போன்றே தோன்றுகிறது. ஒரு முக்கோணமொன்றை உருவாக்கி, அதனுள்ளே தம்மை பொருத்திக் கொண்டால், உலகமே சுபீட்சம் கண
நான் கவிஞனாய்..நிஜங்களை சொல்லி விட ஆசைதான் நிதர்சனம் தொகுத்துவிட ஆசைதான் மனிதனை நேசிக்க ஆசைதான் - அவன் மனங்களை வாசிக்க ஆசைதான்.நான் கவிஞனாய்..கல்லறைக்குள் வாழ்ந்திட ஆசைதான் கனாவினுள் கண்மூடிட ஆசைதான்மௌனத்தின் மொழி எழுத ஆசைதான்- முதல் மோகத்தில் ஊமையாக ஆசைதான்.நான் கவிஞனாய்..ஊனங்களை உசுப்பிவிட ஆசைதான் ஊழல்களை ஒழித்துவிட ஆசைதான் காதலுக்கு கண் செதுக்க ஆசைதான் - இந்த காலத்துக்கும் கற்றுக் கொடுக்க ஆசைதான்.நான் கவிஞனாய்..எண்ணங்களை எடுத்தியம்ப ஆசைதான் எளிமையில் ஏழை போல் என் கவியிருக்க ஆசைதான் குழந்தைக் கோபம் கொள்ள
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?] என் மகனே! திண்மம். திரவம். வாயு. நீ. உன் கனவுகள் அத்தனையும் உன் எண்ணங்களுக்குள் படர்ந்திருக்கிறது. உன் நம்பிக்கை தன் கால்களை நிலைநிறுத்திக் கொள்ளும். உன் ஆசைகள் விலாசம் பெறவுள்ளன. நீ எதிர்பார்த்தவையெல்லாம் உன்னை எட்டித்தொட பாய்ந்து கொண்டும்வரும். உன் பயத்தைக் கூட பயமறியாது. மனவுளைச்சல் என்பதைப் பற்றி உனக்கு எண்ணங்கள் சொல்லித்தரக்கூடும். ஆனாலும், இது எல்லாமும் தான் நீ. உன்னைப் போல உலகத்தில் வேறொன்றும் கிடையாது. உனக்கும் தனித்துவமாய் .
இருளின் ஒளிக்குள் இரவின் உயிருக்குள் ஒரு உரிமைக் குரலின் ஒலிப் பிரளயம் வாழ்வின் வலிக்குல் அடக்கு முறைக்குள் இந்த கவிதைப் பிரியனின் கவி முழக்கம் உவமைகள் துறந்து,உரிமைகள் இழந்து ஓரமாய் ஒடுங்கி ஒலிக்கிறது என் கானம்..தன்னை தொலைத்து தன்மானம் களைந்து தரம் கேட்டுக் கிடக்கிறது இப் பூகோளம்..என் வாழ்கைச் சுவர்களை வலிக் கற்கள் கொண்டு வடிமைத்திருக்கிறது காலம்..மூச்சு முட்டும் இருளிலும் அதை விட மிஞ்சியதாய் பிழிந்தெடுக்கிறது ஒரு சோகம்..நம்பிக்கை இறுக்கிப் பிடித்து முயற்சியை மூச்சாக்கி ஓராயிரம் சுவரையும் தகர்த்து விடுவேன்
மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் எடுத்த அதே அமீரா இந்த அமீரின் ஆதி - பகவனை மூன்று வருஷமா முக்கி முக்கி எடுத்தார்? இவரது முன்னைய படங்களிலேயே பல காட்சிகளும் கதாபாத்திரங்களும் ஆங்கிலப் படங்களில் பார்த்த மாதிரியே இருக்கு என்று அடித்து சொல்லிவந்தேன். ஆதி - பகவனிலோ அப்படியே அப்பட்டமான ஆங்கிலப் பாணிக் கதை உருவாக்கம் மட்டுமல்ல, பல ஆங்கில, ஹிந்திப் படங்களில் பார்க்கிற காட்சி மாற்றங்களும் கூட. ...
கிரிக்கெட் பற்றி எழுதிக் கொஞ்சக் காலமாகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆரம்பித்துவிட்டது. கடந்த வருடத்தில் தான் தலைமை தாங்கிய 11 போட்டிகளில் 7 டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ள உற்சாகத்தோடு மைக்கேல் கிளார்க் அனுபவம் குறைவான, ஆனால் ஆற்றலுள்ள இளைய அணியோடு இந்தியா வந்துள்ளார். மறுபக்கம் இன்னுமொரு டெஸ்ட் தொடர் தோல்வி என்ன, ஒரு டெஸ்ட் தோல்வியே ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?] சமுத்திரங்களைக் கடப்பது போன்றுதான் வாழ்க்கையை வாழ்வது பற்றிய அமைப்புகள் இருக்கின்றன. சமுத்திரங்களைக் கடக்க யாருக்குத்தான் தேவை உண்டு? ஆனாலும், வாழ்க்கை வாழப்பட்டுக் கொண்டே போகிறது. அடுத்த அடியில் ஆழமாயிருக்குமோ — இன்னும் கொஞ்சம் நேரத்தில் கண்ணுக்குள் கரையின் காட்சி தோன்றிடுமோ என்ற ஆர்வம் தான் சமுத்திரங்களைக் கடக்க நினைக்கையில் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். நீங்கள் நினைக்காவிட்டாலும், அது அப்படியாகவே நடந்தும் விடுகிறது.
இதோ இதோ என்று காத்திருந்து, திருட்டு DVD வந்தும் அதில் பார்க்க விரும்பாமல் நேற்று வந்தவுடன் திரையரங்கில் சென்று விஸ்வரூபம் பார்த்துவிட்டேன். இதில் கமல் ரசிகன் என்பதோ, இல்லாவிட்டால் First day First Show பைத்தியம் என்பதோ இல்லாமல் அடக்கி வைக்கப்பட்ட ஒரு படைப்பில் அப்படியென்ன ரகசியம் இருக்கப் போகிறது என்பதே எனது மிகப்பெரும் கேள்வியாக மனதுள் இருந்தது. படம் பார்த்த கொட்டாஞ்சேனை சினி வேர்ல்டில் ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 54 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அது நவம்பர் மாதம் தொடங்கிவிட இன்னும் ஓரிரு நாட்கள் காணப்பட்ட சூழல். நெடுநாட்கள் கழித்து என்னைக் காணவந்தான் என் நண்பனொருவன். நெடுநாட்களின் தெரியாத சங்கதிகளை சுவை சேர்த்து குறுகிய நேரத்திற்குள் பகிர்ந்து கொண்டோம். விடைபெறும் நேரத்தில், “உனக்கொரு கிப்ஃட் கொண்டு வந்திருக்கேன்” என்றவாறு என்னிடம் ஒரு பொதியைத் தந்தான். பொதியைப் பெற்று, அவனையும் வழியனுப்பிவிட்டு, வீட்டினுள் வந்தேன். பொதியில் தந்த பரிசு என்னவாயிருக்கும் என்ற ஆர்வ
விஸ்வரூபம்... என்னதான் இந்தப் பெயரில் இருக்கோ தெரியவில்லை ஆரம்பம் முதலே சிக்கல்.. இழுபறி... நேற்று நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றி மீண்டும் தடையாக இழுபறி. கமல் என்ற கலைஞன் முடக்கப்படுகிறான்.. ஒடுக்கப்படுகிறான்.. அரசியல் விளையாட்டுக்களால் பந்தாடப்படுகிறான் என்பது தெரிகிறது. அவர் வழங்கியுள்ள ஊடகவியலாளர் சந்திப்புப் பேச்சு எவ்வளவு தூரம் காயப்பட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ...
தமிழ்நாட்டில் தடை நீங்கியது.. எத்தனை திருப்பங்கள், குழப்பங்கள், திடுக் திடுக் கணங்களைத் தாண்டி இந்தத் தீர்ப்பு? ஒரு மாநில அரசின் முட்டாள் தனமான வாதங்களை எதிர்த்து கமலின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வைத்த நியாயமான வாதங்கள் வென்றிருக்கின்றன. மதவாதிகளைத் (அடிப்படை இல்லாமல் படம் பார்க்காமலே, இதிலே ஆபத்துள்ளது என்று முதலில் இருந்து கடைசிவரை குரல் எழுப்பிய சிலரை மட்டும்) தூண்டி விட்டு ...
இது முஸ்லிம்களுக்கான பதிவு. நீண்டதொரு வாதம், கலந்துரையாடல், கருத்து மோதலின் பின் தான் நான் இதை எழுதுகிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்னும் மன நிலையில் நான் இதை எழுதவில்லை என்பதையும் முதலில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பெரிய மேதை எல்லாம் இல்லை. சாதாரண மனிதன். இது என் சிறிய மூளையில் உதித்த ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி. விடயத்துக்கு வருவோம். இன்று எல்லோராலும் பேசப்படுகின்ற ஒரு விடயம் விஸ்வரூபம் திரைப்படமும் அதன் பின்னணியில் முஸ்லிம்களின் செயற்பாடுகளும். முதலில் முஸ்லிம்கள் ..
ஹர்ஷுவுக்கு அப்பிள் சாப்பிட விருப்பம், ஆனால் அப்பிள் என்று தெரிந்தால் சாப்பிட மாட்டான்... ஒரு நாள் விருந்தகம் ஒன்றுக்கு சாப்பிடப் போயிருந்தோம்.. சாப்பாட்டுக்குப் பின்னர் ஒவ்வொருவரும் வேறு வேறு dessert order பண்ணி சாப்பிடும் நேரம், இவன் தனக்குப் பிடித்த ஏதோ ஒன்றை உண்டு முடித்துவிட்டு, தன்னுடைய தாயாரின் Fruit salad ஐயும் பதம் பார்க்க ஆரம்பித்த நேரத்தில் அவன் குறிவைத்து பப்பாளி மற்றும் மாம்பழத் ...
கனவும், கற்பனையும் கொட்டிக் கிடக்கிறது நிஜங்கள் இன்று எதிலுமே இல்லை. மெய்யும், பொய்யும் கலந்தே உலகை ஆழ்கிறது.உண்மையை உணர்த்த கைகொடுப்போம் வாருங்கள்.பிரிவினை பூமியில் படர்ந்து விட்டது மொழியால், ஜாதியால், நிறத்தால்..பூமிக்கு புரிய வைத்து ஒற்றுமையை ஊக்குவிக்க கை கொடுப்போம் வாருங்கள்."அமைதியாய் வாழ்பவனை அடக்க நினைக்கிறான்" அகராதியை விட்டே அடிமையை துரத்த கை கொடுப்போம் வாருங்கள். வாழ்க்கைக்கு வழி காட்டிய பெற்றோர்கள் இன்று அன்றாட உணவுக்காய் வீதிகளில்.. அவர்களின் பசி போக்கி அன்பால் அரவணைக்க கை கொடுப்போம் வாருங்கள்.
நாளை இலங்கை அணியின் அண்மைக்கால மிகச் சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர்களில் ஒருவரான / முதன்மையானவரான மஹேல ஜெயவர்த்தன இலங்கை அணியின் தலைவராக தனது இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளார். யாருக்குத் தெரியும் புதிய அணித்தலைவராக வருபவர் சொதப்பி, தடுமாறி வேறு யாரும் இல்லாமல் மீண்டும் மஹேலவை "கொஞ்ச நாள், புதியவரைத் தெரிவு செய்யும் வரை தலைவராக இருந்து அணியைக் காப்பாற்றுங்கள்" என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் ...