இளம் வீரர்களின் சிறப்பாட்டத்தால் ஆசியக் கிண்ண அரையிறுதிக்குள் இலங்கை

4834
Sadeera and Amila

இலங்கை இளையோர் அணி வீரர்கள் துடுப்பாட்டம், பந்து வீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் திறம்பட செயற்பட்டு மலேசியாவுடனான போட்டியில் 205 ஓட்டங்களால் அபார வெற்றியை சுவைத்து, தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளது.

பங்ளாதேஷில் நடைபெற்று வரும் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரின் குழு நிலைப் போட்டிகள் யாவும் நிறைவடைந்துள்ள தருணத்தில், அதில் ஒரு போட்டியாக மலேசியா மற்றும் இலங்கை இளையோர் அணிகளுக்கு இடையிலான இந்த மோதல் சிட்டகொங்கில் இடம்பெற்றது.

சரித் அசலங்கவின் சதத்துடன் இலங்கை இளையோர் அணிக்கு முதல் வெற்றி

பங்களாதேஷில் நடைபெற்று வரும், இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரில் ஆப்கானிஸ்தான் இளையோர் அணியுடனான போட்டியில்…

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை இளையோர் அணியின் தலைவர் அஞ்சலொ பெரேரா முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்  

மலேசியாவின் தேசிய குழாம் பங்குபெற்றியிருந்த இப்போட்டியில், இலங்கை சார்பிலான அணியின் ஆரம்ப வீரரர்களான சதீர சமரவிக்ரம மற்றும் ரொன் சந்திரகுப்தா ஆகியோர் உறுதியான ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர்.

இவர்கள் 75 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் அணியின் முதல் விக்கெட்டாக மலேசிய சுழல் வீரர் விரன்தீப் சிங்கின் பந்து வீச்சில் ரொன் சந்திரகுப்தா 22 ஓட்டங்களுடன் மைதானத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.

தொடர்ந்தும் பந்து வீச்சு ஆதிக்கத்தினை செலுத்திய மலேசிய அணி, களத்திற்கு வந்த ஷெஹான் ஜயசூரியவை குறுகிய ஓட்டங்களுடன் ஓய்வறை அனுப்பியது.  

எனினும், களத்தில் ஆட்டமிழக்காமல் நின்ற ஏனைய ஆரம்ப வீரர் சதீர சமரவிக்ரம மற்றும் ஆப்கான் இளையோர் அணியுடனான இறுதிப் போட்டியில் சதம் கடந்திருந்த சரித் அசலன்க ஆகியோர் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையினை மெதுமெதுவாக கட்டியெழுப்பத் தொடங்கினர்.

இதனால் மூன்றாம் விக்கெட்டிற்காக இருவராலும் 147 ஓட்டங்கள் பகிரப்பட்டதுடன், அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையும் வலுவான நிலைக்குச் சென்றது.  

இலங்கை இளையோர் அணியின் மூன்றாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த சதீர சமரவிக்ரம சதம் கடந்தது 123 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகளை விளாசி 121 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

மறுமுனையில், அரைச் சதம் தாண்டியிருந்த சரித் அசலங்க, சதீர சமரவிக்ரமவின் விக்கெட்டினை தொடர்ந்து அப்துல் ராஸித்தின் பந்தில் வீழ்ந்தார்.

>> மழையின் குறுக்கீட்டால் கைநழுவிச் சென்ற இலங்கையின் வெற்றி வாய்ப்பு

ஆட்டமிழக்கும் போது, 72 பந்துகளிற்கு 9 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்களைப் பெற்றிருந்த சரித் அசலன்க, இத்தொடரில் இலங்கை இளையோர் அணி பங்குபற்றியிருந்த முதல் மூன்று போட்டிகளிலும் 50 ஓட்டங்கள் கடந்த ஒரே வீரராக தன்னை பதிவு செய்து கொண்டார்.

எனினும், இவர்கள் இருவரினதும் விக்கெட்டுக்களை தொடர்ந்து இலங்கை இளையோர் தரப்பு அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.  முடிவில், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை இளையோர் அணி 311 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை இளையோர் தரப்பின் பின்வரிசை வீரர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்திருந்த மலேசிய அணியின் பந்து வீச்சில் தெரேக் துரைசிங்கம் மற்றும் விரன்தீப் சிங்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதமும், அப்துல் ராஸித் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து மிகவும் சவாலான வெற்றி இலக்கான 312 ஓட்டங்களைப் பெறுவதற்கு பதிலுக்குத் துடுப்பாடிய மலேசிய அணி, போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட் ஒன்றினை பறிகொடுத்தது.

இதன்போது அசித்த பெர்ணாந்துவின் பந்து வீச்சினை எதிர்கொண்டிருந்த சிவானந்த கிருஷ்ணன் ஓட்டமெதுவுமின்றி மைதானத்தினை விட்டு நடையை கட்டினார்.

தொடர்ந்தும் துடுப்பாட மைதானம் விரைந்திருந்த ஏனைய வீரர்களும் இலங்கை இளையோர் அணியின் பந்து வீச்சினை எதிர்கொள்ளத் தடுமாறினர். இதனால் மேலதிமாக இரண்டு விக்கெட்டுக்களை அவ்வணி விரைவாக பறிகொடுத்தது.

தொடர்ந்து பந்தினை கையில் எடுத்த இலங்கை தேசிய அணியின் இடது கை சுழல் வீரர் அமில அபொன்சோ சிறப்பான முறையில் தனது பந்து வீச்சு ஆற்றலை வெளிக்காண்பித்து மலேசியாவின் விக்கெட்டுக்களை சாய்த்தார்.

கொழும்பு, கண்டி, கேகாலை மற்றும் மன்னார் மாவட்ட அணிகள் அரையிறுதிக்குள்

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையுடன் தற்போது நடைபெற்று வரும் மாவட்ட அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டித் தொடரின்…

இதனால், ஆட்ட முடிவில் அவ்வணி 27.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 106 ஓட்டங்களினை மாத்திரமே பெற்று, இப்போட்டியில் படுதோல்வியடைந்தது.  

அவ்வணி சார்பாக தனி ஒருவராகப் போராடிய அமினுத்தின் ரம்லி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 29 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். இலங்கை இளையோர் அணி சார்பாக அமில அபொன்சோ மொத்தமாக 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

அத்துடன், வனிது ஹஷரங்கவும் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியின் வெற்றியிற்கு வலுவூட்டியிருந்தார்.

இந்த அபார வெற்றியுடன், இத்தொடரின் அடுத்த கட்டமான அரையிறுதிப் போட்டிகளுக்கு குழு A இல் இருந்த இலங்கை இளையோர் அணியும், இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஆப்கான் இளையோர் அணியும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

போட்டியின் சுருக்கம்

இலங்கை இளையோர் அணி:  311/9 (50) சதீர சமரவிக்ரம 121(123), சரித் அசலன்க 78(72), அஞ்சலொ பெரேரா 31(28), ரொன் சந்திரகுப்தா 22(33), தெரேக் துரைசிங்கம் 52/3(10), விரன்தீப் சிங் 56/3(9), அப்துல் ராஷித் 67/2(10)

மலேசியா: 106 (27.3) அமினுத்தின் ரம்லி 29(38)*, அஹ்மட் பாயிஸ் 22(37), அமில அபொன்சோ 31/5(10), வனிது ஹஷரங்க 26/3(7.3)

போட்டி முடிவுஇலங்கை இளையோர் அணி 205 ஓட்டங்களால் வெற்றி