கொழும்பு இந்து கல்லுரி மற்றும் யாழ் இந்து கல்லூரிக்கும் இடையில் இன்றைய தினம் (do sports no drugs) ’போதைப்பொருளற்ற விளையாட்டு’ எனும் தொனிப் பொருளில் ஆரம்பமாகிய 19 வயதுக்கு உட்பட்ட இந்துக்களுக்கான பெரும் சமர் கிரிக்கெட் போட்டியில் கொழும்பு இந்துக் கல்லூரி வலுவான நிலையில் காணப்படுகிறது.

கொழும்பு இந்துக் கல்லுரியில் ஆரம்பித்த இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய யாழ் இந்து கல்லூரி முதலில் கொழும்பு இந்து கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது. அந்த வகையில் களமிறங்கிய கொழும்பு இந்து கல்லூரிக்கு ஆரம்பம் இனிதாக அமையவில்லை.

யாழ் இந்து கல்லூரியின் அதிரடி பந்து வீச்சில் முதல் மூன்று விக்கெட்டுகளையும் இழந்து சற்று நெருக்கடியான நிலையிலிருந்தது. அதனையடுத்து களமிறங்கிய எஸ். மதுர்ஷன் மற்றும் கஜேந்திரன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய அதேநேரம் அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். எனினும், எல். சிவலுர்ஷனின் பந்து வீச்சில் சிக்குண்ட கஜேந்திரன் LBW முறையில் துரதிஷ்வசடமாக ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய யுதீஷன் சிறப்பாக துடுப்பாடி 63 ஓட்டங்களை பங்களிப்பு செய்த அதேவேளை எஸ். மதுர்ஷனுடன் இணைந்து ஓட்டங்களை உயர்த்தினார். அந்த வகையில் 54 ஓவர்கள் முடிவில் இந்து கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்ச ஓட்டங்களாக  எஸ். மதுர்ஷன் 72 ஓட்டங்களை பதிவு செய்தார்.

அதனையடுத்து களமிறங்கிய யாழ் இந்து கல்லுரி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கே. சந்தோஷ் மற்றும் வை. விதிசன் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 73 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். எனினும், கொழும்பு இந்து கல்லூரி சார்பாக அதிரடியாக பந்து வீசிய கஜேந்திரன் சீரான இடைவெளிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் முடிவு:

இந்து கல்லூரி, கொழும்பு: 287 (54) – எஸ். ஷரோன் 03, எம்.பி. குமார் 14, ஜி. தினேஷ் 9, எஸ். மதுர்ஷன் 72, கஜேந்திரன் 35, யுதீஷன் 63, ஹரிஹரன் 43, ஷெவாக் 15, என். அஷ்விந்த் 07 அதிக்க்ஷன் 04, ஹரிஷன் 02  வை. விதுஷன் 26/2, எஸ். அன்சிகன் 27/1, எம். துவாரகன் 23/1, எல். சிவலுர்ஷன் 110/2  எம். கோபிராம் 18/0, என் அபிப்ரியன் 60/2, கே. நிகேஷ் 06/2

இந்து கல்லூரி, யாழ்ப்பாணம்: 169/6 (35) – கே. சந்தோஷ் 39, வை. விதிசன் 52,   நிவ்கேஷ் 01, எம். துவாபன் 51, எம். கோபிராஜ் 12, அபிபிரியன் 00