கடந்த பருவகால பாடசாலை ரக்பி லீக் போட்டிகளில் பலரும் எதிர்பார்த்ததை போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிய கண்டி திரித்துவக் கல்லூரி ஆறாம் இடத்தையே பெற்றுக் கொண்டது.

சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளுமா இசிபதன கல்லூரி?

அத்துடன் இலங்கை தேசிய ரக்பி அணிக்கு அதிகபடியான வீரர்களை உருவாக்கித் தந்துள்ள பாடசாலையாகவும் இசிபதன கல்லூரி திகழ்கின்றது…

இந்நிலையில் 111 ஆவது வருடமாக ரக்பி விளையாட்டில் ஈடுபடவுள்ள அவ்வணி பல புதுமுக வீரர்களுடன், புது எதிர்பார்ப்புக்களுடன் மீளெழுச்சி பெறும் நோக்கில் இந்தப் பருவகால போட்டிகளில் களமிறங்கியுள்ளது.

கல்லூரியின் ரக்பி வரலாறு

இலங்கையில் ரக்பி விளையாட்டின் முன்னோடிகள் எனப்படும் பாடசாலைகளில் ஒன்றான திரித்துவக் கல்லூரி, 1906ஆம் ஆண்டு முதல் பாடசாலை ரக்பி களத்தில் பெயர் பதித்துள்ள ஒரு பாடசாலையாகும். இக்கல்லூரி இன்தி மரிக்கார், ஷோன் விஜேசிங்க மற்றும் பிரதீப் பஸ்நாயக்க போன்ற திறமையான ரக்பி வீரர்களையும் உருவாக்கித் தந்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் திரித்துவக் கல்லூரி அனைத்து வருடங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போதிலும், கடந்த வருடம் சற்று பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. எனினும் றோயல் கல்லூரியுடன் இடம்பெறும் ‘ப்ரெட்பி’ கிண்ணத்திற்கான போட்டியை சமநிலையில் நிறைவு செய்து, கிண்ணத்தை பகிர்ந்து கொண்டது.

முக்கியமான வீரர்கள்

Nathan Yee

நேதன் யீ : ஐந்தாவது வருடமாக திரித்துவக் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தும் நேதன் யீ இம்முறை அணிக்கு தலைமை தாங்குகின்றார். கடந்த வருடங்களில் முன்வரிசை வீரராக செயற்பட்டிருந்த இவர், இம்முறை 8 ஆம் இலக்க வீரராக களமிறங்கவுள்ளார்.

Dliuksha Dange

டிலுக்ஷ டங்கே : அணிக்கு எழுவரை கொண்ட 18 வயதிற்குட்பட்ட இலங்கை கனிஷ்ட அணியின் வீரரான டிலுக்ஷ டங்கே, மூன்றாவது வருடமாக திரித்துவக் கல்லூரி சார்பில் விளையாகின்றார். பின்களத்தின் முக்கிய நிலையான சென்டர் நிலையில் இவர் களமிறங்கவுள்ளதுடன், இவரது வேகமான விளையாட்டுப்பாணி அணிக்கு வலு சேர்க்கவிருக்கின்றது.

அணுக போயகொட : கடந்த இரண்டு பருவகாலங்களில் திரித்துவக் கல்லூரியின் ஸ்க்ரம் ஹாப் வீரராக செயற்பட்டிருந்த அணுக போயகொட, தனது விவேகமான, துரிதமான நகர்வுகளின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இவரும் அணிக்கு எழுவரை கொண்ட 18 வயதிற்குட்பட்ட இலங்கை அணிக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்முறை திரித்துவக் கல்லூரியின் மிக முக்கிய வீரராக இவரே காணப்படுவார் என எதிர்பார்க்கலாம்.

நவீன் ராஜரத்தினம் : திரித்துவக் கல்லூரியின் வலுவான பின்களத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வீரராக நவீன் ராஜரத்தினம் காணப்படுகின்றார். இரண்டாவது சென்டர் நிலை வீரராக இவர் செயற்படவுள்ளதுடன், இவரது ஆக்ரோஷமான விளையாட்டுப்பாணி திரித்துவக் கல்லூரியின் முன்னேற்றத்தில் பெறும் தாக்கத்தை செலுத்தும் எனலாம்.

பயிற்றுவிப்பாளர்கள்

இவ்வருடம் திரித்துவக் கல்லூரியின் முதன்மை பயிற்றுவிப்பாளராக முன்னாள் நியூசிலாந்து தேசிய அணி வீரர் லோட் ரைக்கபுலா நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை உதவி பயிற்சியாளராக புத்திக அபேசிங்கவும், உடற்திறன் பயிற்சியாளராக நவீந்திர தயானும் பொறுப்பேற்றுள்ளனர்.

இவ்வருடத்திற்கான குழாம்

[a-team-showcase-vc ats_team_id=”2163963″]