குணதிலக்கவின் 73 ஓட்டங்களின் உதவியுடன் பேதுரு கல்லூரி வலுவான நிலையில்!

126
U19 Schools Roundup

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கான போட்டிகளில் இன்று இடம்பெற்ற ஆட்டங்களிலும் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என்பவற்றில் சிறப்பித்த இளம் வீரர்கள் இத்தொடருக்கான மேலும் சிறந்த பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் மஹாநாம கல்லூரி, கொழும்பு

இவ்விரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இந்தப் போட்டி சமநிலையில் முடிவுற்ற போதிலும் முதல் இன்னிங்ஸ் வெற்றிப் புள்ளிகளை கொழும்பு மஹாநாம கல்லூரி பெற்றுக்கொண்டது.

96 ஓட்டங்களுடன் இன்றைய நாளுக்காக களமிறங்கிய மஹாநாம கல்லூரி, கவிந்து முனசிங்கவின் சதத்துடன் 9 விக்கெட் இழப்பிற்கு 364 ஓட்டங்களைப் பெற்று, 153 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அதையடுத்து களமிறங்கிய  மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது 5 விக்கெட்டுகளுக்கு 135 ஓட்டங்களைப் பெற்ற  நிலையில் போதிய நேரமின்மை காரணமாக போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்

மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி: 211 (52.5) – ரவிந்து பெர்னாண்டோ 106, சசிந்து  கொலம்பகே 44, நீதிக்க வெலிகல 4/54, ஹெஷான் ஹெட்டியாராச்சி 2/25, ஹசான் சந்தீப 2/64

மஹாநாம கல்லூரி: 364/9d (103.1) – கவிந்து  முனசிங்க 114, விஷான் முதலிகே  82, தினுக்க ரூபசிங்க 57, நீதிக்க வெலிகல 57, சசிந்து கொலம்பகே 5/77

மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி:135/5(25) – லசித் க்ரூஸ்புள்ளே 54, ரவிந்து பெர்னாண்டோ 34 *, அஷான் பெர்னாண்டோ 27, ஹசான் சந்தீப 3/54

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது. மஹாநாம கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


கண்டி திரித்துவக் கல்லூரி எதிர் ஸாஹிரா கல்லூரி, கொழும்பு

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினம் பல்லேகல சர்வதேச மைதானத்தில் முதல் நாளாக நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஸாஹிரா கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அந்த வகையில் முதலில் களமிறங்கிய கண்டி திரித்துவக் கல்லூரி ஹசிந்த ஜயசூரிய மற்றும் சண்முகநாதனின் அரைச் சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து  252 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பதிவு செய்தது.

அதனையடுத்து  களமிறங்கிய ஸாஹிரா கல்லூரி, ட்ற்வொன் பேர்சிவல்லின் அதிரடி பந்து வீச்சில் சீக்குண்டு 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையில் உள்ளது.

நாளை இப்போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

கண்டி திரித்துவக் கல்லூரி : 252 (63.5) – ஹசிந்த ஜயசூரிய 66, சண்முகநாதன் ஷானகீத் 56, ஹசித்த பயாகோட 30, ஹாஷ்மி ஹுசைன்  2/42, சஜித் சமீரா 2/63, முஹம்மத்  ஷமாஸ் 2/09

ஸாஹிரா கல்லூரி: 65/4 (24) ட்ற்வொன் பேர்சிவல்  2/23


புனித செபஸ்தியன் கல்லூரி, கட்டுனேறிய எதிர் புனித மரியார்  கல்லூரி, கேகாலை

இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றிருந்தாலும் முதல் இன்னிங்ஸ் வெற்றியை கேகாலை புனித மரியார்  கல்லூரி பதிவு செய்து கொண்டது. 175 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மரியார் கல்லூரி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 323 ஓட்டங்களை பெற்ற அதேவேளை, 148 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது. சிறப்பாக துடுப்பாடிய கஜித கொட்டுவகோட 1௦5 ஓட்டங்களை விளாசினார்.

அந்த வகையில் 148 ஓட்டங்களால் பின்நிலையுற்ற நிலையில் களமிறங்கிய புனித செபஸ்தியன் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 146 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்தியன் கல்லூரி: 175 (51.4) – நிமேஷ் தனஞ்சய 36, சேசான் உதார 34, கயான் சந்திரசிறி 4/35, மதுஷான் 3/59, நிர்மல் பெர்னாண்டோ 2/11

புனித மரியார்  கல்லூரி: 323 (99.5) – கஜித கொட்டுவகோட 105, டி எஸ் குமார 79, நிமால் பெர்னாண்டோ 31, சேஷான் உதார 4/52, ரஸ்மிக்க  உதார 2/52

புனித செபஸ்தியன் கல்லூரி: 146/7 (37) சமித்த  தில்ஷன் 70, கவிந்து இரோஸ்  30, லசித உடகே  3/89


காலி, மஹிந்த கல்லூரி எதிர் நாலந்தா கல்லூரி, கொழும்பு

காலி மகிந்த கல்லூரி மைதானத்தில் இரண்டாம் நாளாக நடைபெற்ற இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. எதிரணி முதல் இன்னிங்சுக்காக 392 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் களமிறங்கிய நாலந்தா கல்லூரி 226 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றது.

சிறப்பாகத் துடுப்பாடிய மஹிந்த கல்லூரி வீரர் ரவீந்து ஹன்சிக 151 ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம், நாலந்த கல்லூரி சார்பாக லக்சித ரசங்கன ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை பதிவு செய்தார்.

போட்டியின் சுருக்கம்

காலி, மஹிந்த கல்லூரி: 292/5 (95) ரவீந்து ஹன்சிக 151, வினுர விரஞ்சித் 53, மலிங்க அமரசேன 3/37

காலி, மஹிந்த கல்லூரி : 392 (132,2) ரவீந்து ஹன்சிக 151, வினுர விரஞ்சித் 53, கே கே கெவின் 53, பிரமீத் ஹன்சிக 40 *, மலிங்க அமரசிங்க 5/53, அசெல் குலதுங்க 3/74

நாலந்தா கல்லூரி: 226/4 (60) லக்சித ரசங்கன  72 *, அவிஷ்க  பெரேரா 46, தசுன் செனவிரத்ன 32, மலிங்க அமரசிங்க 53, அஷேன் கண்டம்பி 3/41

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது.


சில்வஸ்டர் கல்லூரி, கண்டி எதிர் புனித செபஸ்தியன்  கல்லூரி

மொறட்டுவ செபஸ்தியன் கல்லூரி மைதானத்தில் இரண்டாம் நாளாக நடைபெற்ற இந்த போட்டி சமநிலையில் முடிவுற்றது. 173 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸ் இலக்காகக் கொண்டு களமிறங்கிய செபஸ்தியன் கல்லூரி 7 விக்கெட் இழப்பிற்கு 293 ஓட்டங்களை பெற்று 12௦ ஓட்டங்களால் முன்னிலை வகித்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அந்த வகையில் இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய சில்வஸ்டர் கல்லூரி பிரவீண் ஜயவிக்ரமவின் அதிரடி பந்து வீச்சில் சீக்குண்டு சடுதியாக விக்கெட்டுகளை இழந்தாலும்,  ஆட்ட நேர  இறுதிவரை துடுப்பாடி தோல்வியை தவிர்த்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

சில்வஸ்டர் கல்லூரி:173 (75.2) – மாந்தித் ராஜபக்ஷ 51 *, சந்துல ஜயக்கொடி 27, நுவனிது பெர்னாண்டோ 5/54, ஆசேர் வர்ணகுலசூரிய 2/07

புனித செபஸ்தியன் கல்லூரி: 293/d(60) – அவிஷ்க பெர்னாண்டோ 75, தருஷ பெர்னாண்டோ 53 மலிந்த பீரிஸ் 46 *, பிம்சர அத்தனகல்ல  2/74, தூசித் சொய்சா 5/97

சில்வஸ்டர் கல்லூரி: 102/7 (58) – சந்துல  ஜயக்கொடி 35, பிரவீண் ஜயவிக்ரம 3/32


தோமியர் கல்லூரி கல்கிசை எதிர் புனித பேதுரு கல்லூரி கொழும்பு

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி கல்கிசை புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் முதல் நாளாக ஆரம்பித்தது. முதலில் துடுப்பாடிய தோமியர் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பதிவு செய்தது.

அந்த வகையில் 145 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸ் இலக்காக கொண்டு களமிறங்கிய புனித பேதுரு  கல்லூரி சந்தோஷ்  குணதிலக ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 73 ஓட்டங்களின் உதவியுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 1௦9 ஓட்டங்களை இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி: 145 (48.4)- பாக்கிய திசாநாயக்க 41, டேலோன் பீரிஸ் 28, ரவிந்து கொடிதுவக்கு 17, சத்துர ஒபெசெக்கற 3/34, சச்சின் சில்வா 3/18, மனில்க்க  சில்வா 2/28

புனித பேதுரு கல்லூரி:1௦9/4 (36) – சந்தோஷ்  குணதிலக 73 *, டேலோன் பிரிஸ் 3/27, தெவின் எரியகம  1/19