சசிக்க துல்ஷான், சுப்புன் கவிந்த பந்துவீச்சில் அபாரம்: புனித செர்வாடியஸ் கல்லூரி 9 விக்கெட்டுகளால் வெற்றி

164
Singer U19 Division 1

சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் I முதல் சுற்று போட்டிகளுக்காக இன்றைய தினம் 5 போட்டிகள் நிறைவுற்ற நிலையில், புனித செர்வாடியஸ் கல்லூரி சசிக்க துல்ஷான் மற்றும் சுப்புன் கவிந்தவின் சிறந்த பந்து வீச்சின் மூலம் 9 விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றி பெற்றது. அதே நேரம் எஞ்சிய நான்கு போட்டிகளில் புனித மரியார் கல்லூரி, செபஸ்தியன் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் DS சேனநாயக்க கல்லூரி  ஆகியன முதல் இன்னிங்சில் வெற்றியை பதிவு செய்து கொண்டன.

புனித மரியார் கல்லூரி, கேகாலை எதிர் புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவ

செபஸ்தியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், A குழுவில் இடம் பெற்றிருந்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற நிலையில் முதல் இன்னிங்ஸ் வெற்றியை புனித மரியார் கல்லூரி பதிவு செய்து கொண்டது.

24 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த செபஸ்தியன் கல்லூரி, லசித உடகேவின் பந்து வீச்சில் 203 ஓட்டங்களுக்கு சுருண்டது. வினுஜ ரணசிங்க 36 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்து கொண்ட போதிலும் ஏனையோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். அதிரடியாக பந்து வீசிய லசித உடகே 72 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து, 66 ஓட்டங்களுடன் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த மரியார் கல்லூரி, வினுஜ ரணசிங்கவின் அதிரடி பந்து வீச்சில் 97 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்சுக்காக நேர்த்தியாக பந்து வீசிய வினுஜ ரணசிங்க 32 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓட்டங்களை மட்டுப்படுத்தினார்.

அதன் பின்னர் 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய செபஸ்தியன் கல்லூரி போதிய நேரமின்மை காரணமாக இன்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித மரியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 269 (78) – அஷான் சேனாதீர 75, சஜீவ ரஞ்சித் 43, சுஜித் குமார 38, எம் ஆர் எம் ரசீன் 25, திமிர குமார 23, பிரஷான் பெர்னாண்டோ 3/43, லசித் பெரேரா 2/06, நிமேஷ் பண்டார 2/34

புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்): 203 (63) வினுஜ ரணசிங்க 36, தசிக் பெரேரா 33, நிமேஷ் பண்டார 30, கிஹான் சேனாநாயக்க 24, லசித உடகே 6/72  

புனித மரியார் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 97 (46.2) – கஜித கோடுவகோட 38, சதரு ஸ்ரியஷாந்த 21, வினுஜ ரணசிங்க 7/32, நுவனிது பெர்னாண்டோ 3/38

புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவ (இரண்டாவது இன்னிங்ஸ்): 34/0 (3) – நுவனிது பெர்னாண்டோ 24*

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. புனித மரியார் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


புனித செபஸ்தியன் கல்லூரி, கட்டுனேறிய எதிர் புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் செபஸ்தியன் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்து கொண்டது. புனித அந்தோனியர் கல்லூரியை முதல் இன்னிங்சில் 180 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய அதே வேளை, தமது முதல் இன்னிங்சுக்காக ஷொஹான் பேசலவின் 95 ஓட்டங்களின் உதவியுடன் 266 ஓட்டங்களை பெற்று 86 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது. அத்துடன் ரஸ்மிக்க உதார அரை சதம் கடந்து 60 ஓட்டங்களால் அணிக்கு பங்களிப்பு செய்தார்.

அந்த வகையில், 86 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த புனித அந்தோனியர் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேரம் முடிவின் போது 34 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஜோயல் பின்டோ 42 ஓட்டங்களை பதிவு செய்த அதே வேளை செபஸ்தியன் கல்லூரி சார்பாக தேஷான் பிரமோத் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம் :

புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை (முதல் இன்னிங்ஸ்): 180 (66) –  ஜோயல் பின்டோ 65 *, ரவிந்து தில்ஷான் 4/31, ஷெஷான் உதார 3/42, அஷேன் சாருக 2/42

புனித செபஸ்தியன் கல்லூரி, கட்டுனேறிய (முதல் இன்னிங்ஸ்): 266 (85.3) – ஷொஹான் பேசல 95, சேஷான் உதார 32, ரஷ்மிக உதார 60, கவிந்து ஹெட்டியாராச்சி 4/21

புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை (இரண்டாவது இன்னிங்ஸ்): 121/6 (34) – ஜோயல் பின்டோ 42, யசிந்து ரவீஷ 34, தேஷான் பிரமோத் 2/38, ரவிந்து தில்ஷான் 2/40

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. புனித செபஸ்தியன் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


றோயல் கல்லூரி கொழும்பு எதிர் புனித பெனடிக் கல்லூரி, கொழும்பு

B குழுவிற்கான முதல் சுற்று போட்டிகாக, இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட இந்த போட்டியில், இன்றைய இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றிருந்தாலும் முதல் இன்னிங்சில் கொழும்பு றோயல் கல்லூரி 141 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

தனது சொந்த மைதானத்தில் முதலில் துடுப்பாடிய றோயல் கல்லூரி, முதல் இன்னிங்சுக்காக கவிந்து மதரசிங்கவின் சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய புனித பெனடிக் கல்லூரி, றோயல் கல்லூரியின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு 61.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அவ்வணிக்காக மகிஷ தீக்ஷன 77 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதிலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

அதே நேரம் றோயல் கல்லூரி சார்பாக எதிரணிக்கு நெருக்கடி கொடுத்த அபிஷேக் பெரேரா 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 141 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் மீண்டும் துடுப்பாடிய றோயல் கல்லூரி இரண்டாவது இன்னிங்சுக்காக 6 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.

முதல் இன்னிங்சுக்காக அரைச் சதம் பெற்றுக்கொண்ட தெவிந்து சேனாரத்ன  70 ஓட்டங்களையும் ஹிமேஷ் ராமநாயக்க ஆட்டமிழக்கமால் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம் :

கொழும்பு றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 300 /9d (88) – கவிந்து மதரசிங்க 111, தெவிந்து சேனாரத்ன 53, லகிந்து நாணயக்கார 37, பசிந்து சூரியபண்டார 21, ஹெலித விதானகே 20, இமேஷ் பெர்னாண்டோ 2/49, ப்ரீத்தி கெரகராஜசிங்கம் 2/48

புனித பெனடிக் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 159 (61.4) – மகிஷ தீக்ஷன 77, செஹான் பெர்னாண்டோ 18, அபிஷேக் பெரேரா 5/35, ஹிமேஷ் ராமநாயக்க 2/20, மனுல பெரேரா 2/57

கொழும்பு றோயல் கல்லூரி (இரண்டாம் இன்னிங்க்ஸ்): 198/6 (38) – தெவிந்து சேனாரத்ன 70, ஹிமேஷ் ராமநாயக்க 53*, துலந்த லூயிஸ் 3/60

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. றோயல் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


புனித செர்வாடியஸ் கல்லூரி, மாத்தறை எதிர் பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா

இரண்டாம் நாளாக நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் மாத்தறை, புனித செர்வாடியஸ் கல்லூரி சசிக்க துல்ஷான் மற்றும் சுப்புன் கவிந்தவின் அதிரடி பந்து வீச்சில் 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

முதல் இன்னிங்சில் செர்வாடியஸ் அணி பெற்றுக்கொண்ட 2௦7 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய பண்டாரநாயக்க கல்லூரி சசிக்க துல்ஷானின் அதிரடி பந்து வீச்சில் சகல விக்கெட்டுகளையும் 37.3 ஓவர்களில் இழந்து 1௦5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. 1௦2 ஒட்டங்களால் பின்நிலை பெற்ற நிலையில் மீண்டும் துடுப்பாடுமாறு செர்வாடியஸ் கல்லூரியினால் பணிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மீண்டும் களமிறங்கிய அவ்வணி இரண்டாம் இன்னிங்சில் சுப்புன் கவிந்தவின் நேர்த்தியான பந்து வீச்சில் 158 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஹசித்த திமல் 53 ஓட்டங்களையும் இறுதி வரை போராடிய சிசித மதனநாயக்க ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் அணி சார்பாக பெற்றுக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து இலகுவான 56 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய புனித செர்வாடியஸ் கல்லூரி 16.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சிறப்பாக துடுப்பாடிய இசுறு உதயங்க ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை விளாசினார்.

போட்டியின் சுருக்கம் :

புனித செர்வாடியஸ் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்): 207 (72.4) – கேசர நுவந்த 65, சுபுன் கவிந்த 35, இசுறு உதயங்க 47, ஹசித்த திமல் 3/50, ஜனித்து ஜயவர்த்தன 3/52

பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (முதல் இன்னிங்ஸ்): 105 (37.3) திலான் பிரஷான் 4/36, சஷிக துல்ஷான் 5/24

பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o : 158 (49.5) – ஹசிந்த திமல் 53, சிசித மதநாயக்க 32*, ஜனிது ஜயவர்தன 30, சுபுன் கவிந்த 6/31, பசிந்து மனுப்ரிய 3/11

புனித செர்வாடியஸ் கல்லூரி, மாத்தறை (இரண்டாம் இன்னிங்ஸ்): 60/1 (16.3) – இசுறு உதயங்க 36*

முடிவு: புனித செர்வாடியஸ் கல்லூரி 9 விக்கெட்டுகளால் வெற்றி


DS சேனநாயக்க கல்லூரி எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி

இவ்விரு அணிகளுகிடயிலான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற போதிலும், 78 ஓட்டங்களால் DS சேனநாயக்க கல்லூரி முதல் இன்னிங்க்சில் வெற்றியீட்டியது. முதல் இன்னிங்சுக்காக DS சேனநாயக்க கல்லூரி பெற்றுக்கொண்ட 272 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய சில்வெஸ்டர் கல்லூரி, மஞ்சித் ராஜபக்ச ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 85 ஓட்டங்களின் உதவியுடன் 194 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

விஹான் குணசேகற மற்றும் தத்சர பண்டார தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனை தொடர்ந்து இரண்டாம் இன்னிங்சை தொடர்ந்த DS சேனநாயக்க கல்லூரி 7 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை போதிய நேரமின்மை காரணமாக போட்டி நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாம் இன்னிங்சுக்காக அதிரடியாக பந்து வீசிய நதீர பாலசூரிய 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

DS சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 272/9d (78) – தசுன் டிமேஷ 51, விஹான்  குணசேகர 45, மத்சித்  ஜயமான 43, ஷீசாத் அமீன் 39, பசிந்து சானக 21, தூசித் டி சொய்சா 3/64, நிம்சர அதரகல 2/38

புனித சில்வெஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 194 (72.2) – மஞ்சித் ராஜபக்ஷ 85*, விஹான்  குணசேகர 3/46, தத்சர பண்டார 3/33, முதித்த லக்ஷான் 2/70, சேஷாத் அமீன் 2/07

DS சேனநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 128/7 (32) தேரான் பாஸ்கரன் 49, சசிக்க கமகே 24, தசுன் டிமேஷ 21, துசித்த டி சொய்சா 2/33, கனிஷ்க ஜயசேகர 2/17, நதீர பாலசூரிய 3/29