கவிந்து மதரசிங்கவின் சதத்தால் றோயல் கல்லூரி வலுவான நிலையில்

229
Singer U19 Division 1

சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் I சுற்று போட்டிகளுக்காக இன்றைய தினம் 5 போட்டிகள் இடம் பெற்றன. DS சேனநாயக்க கல்லூரி மற்றும் கொழும்பு, றோயல் கல்லூரி கூடிய ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பதிவு செய்துள்ளதால் மிகவும் வலுவான நிலையில் உள்ளன.

புனித மரியார் கல்லூரி, கேகாலை எதிர் புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவ

செபஸ்தியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், A குழுவில் இடம் பெற்றிருந்த இவ்விரு அணிகளில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  புனித செபஸ்டியன் கல்லூரி முதலில் புனித மரியார் கல்லூரியை துடுப்படுமாறு பணித்தது. அந்த வகையில் துடுப்பாடக் களமிறங்கிய அவ்வணி முதல் இன்னிங்சுக்காக 78 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சிறப்பாக துடுப்பாடிய அஷான் சேனாதீர அரைச் சதம் கடந்து 75 ஓட்டங்களையும் அவருடன் சஜீவ ரஞ்சித் 43 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். பந்து வீச்சில் புனித செபஸ்தியன் கல்லூரி  சார்பாக அதிரடி காட்டிய பிரஷான் பெர்னாண்டோ 43 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய புனித செபஸ்தியன் கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித மரியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 269 (78) – அஷான் சேனாதீர 75, சஜீவ ரஞ்சித் 43, சுஜித் குமார 38, எம் ஆர் எம் ரசீன் 25, திமிர குமார 23, பிரஷான் பெர்னாண்டோ 3/43, லசித் பெரேரா 2/06, நிமேஷ் பண்டார 2/34

புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்): 24/0 (7)


புனித செபஸ்தியன் கல்லூரி, கட்டுனேறிய எதிர் புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை

சமபலம் கொண்ட இவ்விரு அணிகளும் இன்று புனித செபஸ்தியன் கல்லூரி மைதானத்தில் எதிர்கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற புனித அந்தோனியர் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய அந்தோனியர் கல்லூரி அணி ரவிந்து தில்ஷானின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. எனினும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோயல் பின்டோ ஆட்டமிழக்காமல் அரை சதம் கடந்து அணியின் ஒட்ட எண்ணிக்கையை உயர்த்திய அதே நேரம் 65 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக அணி சார்பாக பதிவு செய்தார்.

அதே நேரம் அதிரடியாக பந்து வீசிய புனித செபஸ்தியன் கல்லூரி அணி பந்து வீச்சாளர்கள் அந்தோனியர் கல்லூரி அணியை 66 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 180 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர். சிறப்பாக பந்து வீசிய ரவீந்து தில்ஷான் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய கட்டுனேறிய, புனித செபஸ்தியன் கல்லூரி முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 78 ஓட்டங்களை பெற்றுள்ளது. முதலிரண்டு விக்கட்டுகள் சொற்ப ஓட்டங்களுக்கு வீழ்த்தபட்டிருந்தாலும், தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஷெஷான் உதார நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.

போட்டியின் சுருக்கம் :

புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை (முதல் இன்னிங்ஸ்): 180 (66) –  ஜோயல் பின்டோ 65 *, ரவிந்து தில்ஷான் 4/31, ஷெஷான் உதார 3/42, அஷேன் சாருக 2/42

புனித செபஸ்தியன் கல்லூரி, கட்டுனேறிய (முதல் இன்னிங்ஸ்): 78/2 (24) சேஷான் உதார 32*


றோயல் கல்லூரி கொழும்பு எதிர் புனித பெனடிக் கல்லூரி கொழும்பு

B குழுவில் இடம் பெற்றிருந்த இவ்விரு அணிகளும் டிவிஷன் I முதலாவது சுற்றுக்காக இன்றைய தினம் கொழும்பு றோயல் கல்லூரி மைதானத்தில் களமிறங்கின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற றோயல் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி கவிந்து மதரசிங்க சதத்துடன் 8 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 290 ஓட்டங்களை பெற்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது. புனித பெனடிக் கல்லூரியின் பந்து வீச்சை இலகுவாக எதிர் கொண்ட கவிந்து மதரசிங்க 111 ஓட்டங்களையும், தெவிந்து சேனாரத்ன 53 ஓட்டங்களையும் முதல் இன்னிங்சுக்காக பதிவு செய்தனர்.

புனித பெனடிக் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் ஓட்டங்களை கட்டுப்படுத்திய இமேஷ் பெர்னாண்டோ 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம் :

கொழும்பு றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 290/8 (84) – கவிந்து மதரசிங்க 111, தெவிந்து சேனாரத்ன 53, லகிந்து நாணயக்கார 37, பசிந்து சூரியபண்டார 21, ஹெலித விதானகே 20, இமேஷ் பெர்னாண்டோ 2/39

புனித செர்வாடியஸ் கல்லூரி, மாத்தறை எதிர் பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா

D குழுவின் கீழ் போட்டியிட்ட இவ்விரு அணிகளும் முதலாவது சுற்றுக்காக இன்று உயனவத்த மைதானத்தில் களமிறங்கின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற் பண்டாரநாயக்க கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ததோடு புனித செர்வாடியஸ் கல்லூரியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 207 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.

நெருக்கடியான சூழ்நிலையில் களமிறங்கிய கேசர நுவந்த நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்து அணியின் ஒட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். எனினும், 65 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்து சென்றார். அத்துடன், அவருடன் துடுப்பாடிய இசுறு உதயங்க 47 ஓட்டங்களை அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார்.

புனித செர்வாடியஸ் கல்லூரி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த ஹசித்த திமல் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய பண்டாரநாயக்க கல்லூரியின் முதலிரண்டு விக்கெட்டுகளை சொற்ப ஓட்டங்களுக்கு வீழ்த்தி அதிர்ச்சியளித்தார் திலான் பிரஷான். இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 20 ஓவர்களில் 43 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து மேலும் 164 ஓட்டங்களால் பின்னிலையுற்று காணப்படுகிறது.

போட்டியின் சுருக்கம் :

புனித செர்வாடியஸ் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்): 207 (72.4) – கேசர நுவந்த 65, சுபுன் கவிந்த 35, இசுறு உதயங்க 47, ஹசித்த திமல் 3/50, ஜனிது ஜயவர்தன 3/52

பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (முதல் இன்னிங்ஸ்): 43/3 (20) – திலான் பிரஷான் 2/18

DS சேனநாயக்க கல்லூரி எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி

தர்மபால கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பித்த இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற DS சேனநாயக்க கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதனையடுத்து களமிறங்கிய அவ்வணி முதல் இன்னிங்சுக்காக 78 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்ற வேளை ஆட்டதை நிறுத்தியது. அவ்வணி சார்பாக தசுன் திமேஷ கூடிய ஓட்டங்களாக 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அதே நேரம் விஹான் குணசேகர மற்றும் மத்சித் ஜயமன்ன முறையே 45, 43 ஓட்டங்களை பதிவு செய்தனர்.

சிறப்பாக பந்து வீசிய துசித் டி சொய்சா 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய கண்டி, சில்வெஸ்டர் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட்டினை மாத்திரம் 23 ஓட்டங்களை பெற்றுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

DS சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 272/9d (78) – தசுன் திமேஷ 51, விஹான் குணசேகர 45, மத்சித் ஜயமன்ன 43, ஷீசாத் அமீன் 39, பசிந்து சானக 21, தூசித் டி சொய்சா 3/64, நிம்சர அதரகல 2/38

புனித சில்வெஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்க்ஸ்): 23/1 (10)