CR  & FC மைதானத்தில் நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் போட்டியில் CH & FC அணியை 62-03 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடையச் செய்து CR  & FC விளையாட்டுக்கழகம் வெற்றிவாகை சூடியது.

கடந்த போட்டியில் விளையாடிய 9 வீரர்களுக்கு ஓய்வளித்த நிலையில் CR & FC விளையாட்டுக்கழகம் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் களமிறங்கியது. அதேவேளை, CH & FC அணி அவர்கள் சார்பில் 7 மாற்றங்களைக் கொண்டு வந்தது.

ரோஹித ராஜபக்ச போட்டியை தொடங்கி வைக்க ஆரம்பம் முதலே CH & FC அணி பின்னடைவை சந்தித்தது. போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் கவிந்து டி கொஸ்டா CR & FC அணியின் முதலாவது ட்ரையினை வைத்தார். (CR & FC 05 – 00 CH & FC)

Photos: CH&FC v CR&FC – Dialog Rugby League 2016/17 | #Match 38

Photos of the CH&FC v CR&FC – Dialog Rugby League 2016/17 | #Match 38

மேலும் சில உதை வாய்ப்புகள் பாரிஸ் அலி மற்றும் ஜனித் சந்திமலிற்கு கிடைக்கப்பெற்றாலும் அவர்களால் கிடைத்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்த முடியாமற்போனது. CR & FC அணியின் குஷான் இந்துனில் மற்றும் மிதில பெரேரா ஆகியோருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டன.

மேலும் CR & FC அணிக்காக ரந்தித வர்ணபுர இரண்டாவது ட்ரையினை வைத்தார். (CR & FC 10 – 00 CH & FC)

தொடர்ந்து சாமிர் பஜுதீன் மற்றும் ரெஹான் சில்வா ஆகியோர் ட்ரை வைக்க CR & FC அணி முதலாவது பாதியில் 24 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. CH & FC அணியினால் எந்தவொரு புள்ளிகளையும் பெற முடியாமற்போனது. (CR & FC 24 – 00 CH & FC)

முதற்பாதி – CR & FC 24 – 00 CH & FC

முதல் பாதியைப்போன்றே இரண்டாவது பாதியிலும் CR & FC அணி தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொண்டது.

சரண சேந்தநாயக இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலே ஒரு ட்ரையினை வைத்தார். (CR & FC 31 – 00 CH & FC)

மேலும் சிறப்பாகவிளையாடிய CR & FC அணிக்காக புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர்களான தாரிக் சாலி மற்றும் சரண சேந்தநாயக ட்ரைகளை வைத்து புள்ளி வித்தியாசத்தை மேலும் அதிகப்படுத்தினர். (CR & FC 43 – 00 CH & FC)

போட்டியின் 55வது நிமிடத்தில் CH & FC  அணி போட்டியின் முதலாவது புள்ளிகளை பதிவு செய்தது. ரோஹித ராஜபக்ச ட்ரொப் கோல் மூலம் 3 புள்ளிகளை CH & FC அணிக்கு பெற்றுக் கொடுத்தார். (CR & FC 43 – 03 CH & FC)

அதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக அவிஷ்க ஹீன்பெல்ல CR & FC அணிக்கு இன்னொரு ட்ரையினை வைத்து புள்ளிகளை ஐம்பதாக அதிகரித்தார். (CR & FC 50 – 03 CH & FC)

தவறான நடவடிக்கை காரணமாக CH & FC அணியின் இர்பான் இன்சாமிற்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திய CR & FC  அணி மேலும் ட்ரைகளை குவித்தன. ரந்தித வர்ணபுர மற்றும் அனுராத ஹேரத் இருவரும் போட்டியின் இறுதி இரண்டு ட்ரைகளை வைத்தனர். (CR & FC 62 – 03 CH & FC)

முழு நேரம் – CR & FC  62 – 03 CH & FC  

ThePapare.com சிறப்பாட்டக்காரர்சரண சேந்தநாயக (CR & FC)

போட்டி முடிந்ததன் பின்பு ThePapare.com இற்காக சரண சேந்தநாயக தனது கருத்தினை தெரிவித்தபோது,

போட்டியில் நாம் சிறப்பாக செயற்பட்டாலும் மேலும் முன்னேற இடங்கள் காணப்பட்டன.ஆகவே பயிற்சிகளின் போது அவற்றை சரிசெய்து எதிர்வரும் போட்டிகளில் மேலும் சிறப்பாக விளையாடுவோம் எனக்குறிப்பிட்டார்.

புள்ளிகள் பெற்றோர்

CR & FC கழகம் – கவிந்து டி கொஸ்டா 1T, ரந்தித வர்ணபுர 2T, சாமிர் பஜுதீன் 1T, ரெஹான் சில்வா 1T, சரண சேந்தநாயக 2T, தாரிக் சாலி 1T, அவிஷ்க ஹீன்பெல்ல 1T, அனுராத ஹேரத் 1T

ரிஸா முபாரக் 5C, குமார சாமுவேல் 1C

CH & FC கழகம் – ரோஹித ராஜபக்ச 1DG