சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட, டிவிசன் I சுற்றுப்போட்டிகளில் இன்றைய தினம் ஐந்து போட்டிகள் நிறைவுற்றன.

புனித தோமியர் கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி

இரண்டு நாட்களை கொண்ட இந்த போட்டியின் இறுதி நாளான இன்று இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்ற போதிலும், முதல் இன்னிங்ஸ் வெற்றியை புனித தோமியர் கல்லூரி தனதாக்கிக் கொண்டது.

முதல் இன்னிங்சில் ஆனந்த கல்லூரியின் பந்து வீச்சை இலகுவாக எதிர் கொண்ட புனித தோமியர் கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர நிறைவின் போது 9 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்தி ஆனந்த கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது.

முதல் இன்னிங்சுக்காக திஸர ஹப்புவின்ன 85 ஓட்டங்களையும், ரொமேஷ் நல்பெரும 43 ஓட்டங்களையும் அணி சார்பாக கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். அதே நேரம் ஆனந்த கல்லூரி சார்பாக திலீப ஜயலத் 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இறுதி நாளான இன்று துடுப்பாடக் களமிறங்கிய ஆனந்த கல்லூரி 243 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பவித் ரத்னாயக்கவின் நேர்த்தியான பந்து வீச்சில் ஆனந்த கல்லூரி விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. எனினும், அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய சஹன் சுரவீர சதம் கடந்து 134 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். புனித தோமியர் கல்லூரி சார்பாக பவித் ரத்னாயக்க 87 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

44 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற புனித தோமியர் கல்லூரி, இரண்டாம் இன்னிங்சுக்காக 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. புனித தோமியர் கல்லூரி சார்பாக ரவிந்து கொடிதுவக்கு 53 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்): 287/9d (86) – திஸர ஹப்புவின்ன 85, ரொமேஷ்  நல்பெரும 43, அனுர புலன்குலம 30, திலீப ஜயலத் 4/59, சுபுன் வாராகோட 2/91  

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 243 (62.1) – சஹன் சுரவீர 134, லஹிரு ஹிரன்ய 26*, பவித் ரத்நாயக்க 5/87

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (இரண்டாம் இன்னிங்ஸ்): 113/5 (38) ரவிந்து கொடிதுவக்கு 53 சுபுன் வாரகொட 2/35

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. புனித தோமியர் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


குருகுல கல்லூரி, களனி எதிர் ஸாஹிரா கல்லூரி, கொழும்பு

கொழும்பு, ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற முதல் சுற்றுக்கான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த களனி, குருகுல கல்லூரி முதலில் துடுப்பாட்டதினை தெரிவு செய்திருந்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி ஸாஹிரா கல்லூரியின் அதிரடியான பந்து வீச்சில் 42.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

நெருக்கடியான சூழ்நிலையில் களமிறங்கிய மலிந்து விதுரங்க அரைச் சதம் கடந்து 71 ஓட்டங்களை விளாசி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். ஸாஹிரா கல்லூரி சார்பாக சிறப்பாக பந்து வீசிய முகம்மது ஹஷ்மி 20 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஸாஹிரா கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்று மூன்று ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸ் வெற்றியை நழுவவிட்டது. முஹம்மத் ஷமாஸ் கூடிய ஒட்டங்களாக 38 ஓட்டங்களை பதிவு செய்தார். குருகுல அணி சார்பாக மலிந்து விதுரங்க மற்றும் சசித சமித் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த குருகுல கல்லூரி இரண்டாம் இன்னிங்சில் அபாரமாக துடுப்பாடியது. ஸாஹிரா கல்லூரியின் பந்து வீச்சை அதிரடியாக எதிர்கொண்ட ரவிந்து உதார ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அதே நேரம் மறுமுனையில் துடுப்பாடிய  ப்ருதுவி ருசர 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

239 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய ஸாஹிரா கல்லூரி, ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது. இரோஷன் லக்ருவான் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்): 132 (42.5) – மலிந்து விதுரங்க   71, அச்சிந்த மல்ஷான் 20, முஹம்மது ஹஷ்மி 8/20

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 129 (44.2) – முஹம்மத் ஷமாஸ் 38, முஹம்மத் சகி 33, மலிந்து விதுரங்க 3/39, சசித சமித் 3/21  

குருகுல கல்லூரி, களனி (இரண்டாம் இன்னிங்ஸ்): 236/4d (53) – ரவிந்து உதார 104*

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 115/5 (36) – இரோஷன் லக்ருவான் 38*

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. குருகுல கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


ரோயல் கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

சமபலம் பெற்றிருந்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றிருந்தாலும் புனித ஜோசப் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியினை பெற்றுக்கொண்டது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜோசப் கல்லூரி முதலில் ரோயல் கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது.

அந்த வகையில் களமிறங்கிய ரோயல் கல்லூரி முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தினை நிறுத்திக் கொண்டது. அதிரடியாக துடுப்பாடிய ஹெலித விதானகே 119 ஓட்டங்களை விளாசினார். அதே நேரம் கவிந்து ஜயதிஸ்ஸ 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜோசப் கல்லூரி, எதிர்பார்த்தது போலவே தனது சொந்த மைதானத்தில் ஓட்டங்களை மலை போல் குவித்தது. சிறப்பாக துடுப்பாடிய அவ்வணி 86 ஓவர்களில் 397 ஓட்டங்களை விளாசியது. ரோயல் கல்லூரின் பந்து வீச்சை துவம்சம் செய்த ஷேவோன் பொன்சேகா 113 ஓட்டங்களை விளாசினார். அத்துடன் கெமரூன் துருகே மற்றும் டினெத் ஜயக்கொடி அரைச் சதம் கடந்து முறையே 73, 53 ஓட்டங்களை அணி சார்பாக பெற்றுக்கொடுத்தனர். ரோயல் கல்லூரி சார்பாக மணுல பெரேரா 127 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்த வகையில் 106 ஓட்டங்களால் பின்னிலை அடைந்த நிலையில் இரண்டாம் இன்னின்சுக்காக களமிறங்கிய றோயல் கல்லூரி 31 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டம் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு, றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 291/9d (71.3) – ஹெலித விதானகே 119, கவிந்து மதரசிங்க 37, லசிந்து நாணயக்கார 39, குஷான் குணரட்ன 26, ஹிமேஷ் ராமநாயக்க 26, லக்ஷான் கமகே 2/42, கவிந்து  ஜயதிஸ்ஸ 3/62

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 397/9d (86) – ஷேவோன் பொன்சேகா 113, கெமரூன் துருகே 73, டினெத் ஜயக்கொடி 53, நிபுன்  சுமணசிங்க 41, ஹரீன் குரே 33*, ஜெஹான் பெர்னாண்டோபுள்ளே 25, டினெத் மதுரவால 22, மணுல பெரேரா 5/127, ஹிமேஷ் ராமநாயக்க 2/79

கொழும்பு, றோயல் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 137/9 (31) – ரொனுக்க ஜயவர்தன 46, பசிந்து சூரியபண்டார 38, தினெத் ஜயக்கொடி 5/36

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. புனித ஜோசப் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


புனித பேதுரு கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி

புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், வலிமைமிக்க புனித பேதுரு கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் புனித செபஸ்டியன் கல்லூரியை இலகுவாக வெற்றி கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித செபஸ்டியன் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி பேதுரு கல்லூரி அதிரடியான பந்து வீச்சில் சிக்குண்டு 24.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 79 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. புனித செபஸ்டியன் கல்லூரி துடுப்பாட்ட வீரர்களை துவம்சம் செய்த சிவன் பெரேரா 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் சந்துஷ் குணதிலக 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி லக்க்ஷின ரோட்ரிகோவின் சதத்துடன் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 289 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. புனித பேதுரு கல்லூரி சார்பாக லக்க்ஷின ரோட்ரிகோ138 ஓட்டங்களை விளாசினார். அதே நேரம் சலித்த பெர்னாண்டோ சதம் பெறுவதற்கு 6 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் துரதிர்ஷ்டவசமாக 94 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்ச்சுக்காக களமிறங்கிய புனித செபஸ்டியன் கல்லூரி 200 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் தோல்வியுற்றது. அவ்வணி சார்பாக நிமேஷ் பண்டார 59 ஓட்டங்களையும் தருஷ பெர்ணாண்டோ 44 ஓட்டங்களையும் பெற்றனர். சத்துர ஒபேசேகற, முஹம்மத் அமீன் மற்றும் சச்சின் சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்): 79 (24.4) – சந்துஷ் குணதிலக்க 4/31, ஷிவான் பெரேரா 5/20

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 289/6d (69.1) – லக்ஷின  ரொட்ரிகோ 138, சலித்த பெர்னாண்டோ 94, ரவிந்து சில்வா 21*, வினுஜ ரணசிங்க 2/78, ஆஷேர் வர்ணகுலசூரிய 2/6

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ (இரண்டாம் இன்னிங்ஸ்): 200 (74.5) – நிமேஷ் பண்டார 59, தருஷ பெர்னாண்டோ 44, அஷேர் வருணகுலசூரிய  33, நுவனிது பெர்னாண்டோ 22, சத்துர ஒபேசேகற 3/34, சச்சின் சில்வா 3/67, முஹம்மத் அமீன் 3/37

முடிவு: புனித பேதுரு கல்லூரி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் வெற்றி.


டி மெசனொட் கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

டி மெசனொட் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி எதிர்பார்த்திருந்ததை போலவே வலிமைமிக்க மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய டி மெசனொட் கல்லூரியை 195 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. சொற்ப ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளை இழந்த போதிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சங்கீத் தேஷான் 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அதே நேரம், அதிரடியாக பந்து வீசிய பசிந்து உஷேட்டி 74 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 366 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக அதிரடி காட்டிய லசித் குருஸ்புள்ளே மற்றும் அஷான் பெர்னாண்டோ முறையே 81, 85 ஓட்டங்களை விளாசினர்.

171 ஓட்டங்களால் பின்தங்கிய பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய டி மெசனொட் கல்லூரி, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி பந்து வீச்சாளர்களினால் கொடுக்கப்பட்ட அழுத்தினால் 114 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதிவரை போராடிய ஹிரோஷ் டி சில்வா 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். அதே நேரம் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி  சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரவிந்து பெர்னாண்டோ 54 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (முதல் இன்னிங்ஸ்): 195 (52.4) – சங்கீத் தேஷான் 63, தில்ருக் அந்தணி 39, ரோஷித செனவிரத்ன 23, பசிந்து உஷெட்டி 5/74, சசிந்து கொலம்பகே 3/32  

மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 366/7d (68.5) லசித் குருஸ்புள்ளே 81, அஷான் பெர்னாண்டோ 85, துஷான் குருகே 60, நவீன் பெர்னாண்டோ 67, சசிந்து கொலம்பகே 24, மிதில கீத் 2/55, அஷான் பெர்னாண்டோ 2/63

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (இரண்டாவது இன்னிங்ஸ்): 114 (25.5) –  ஹிரோஷ் டி சில்வா 55, ரவிந்து பெர்னாண்டோ 5/54, பசிந்து உஷெட்டி 3/33

முடிவு: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 57 ஓட்டங்களால் வெற்றி.