இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்ற பாணதுறை விளையாட்டுக் கழகம்

310
SLC Tier B Premier League

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பிரீமியர் லீக் தொடரின் B தர அணிகளுக்கான போட்டியில் பொலிஸ் அணியை பாணதுறை விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது.

நேற்று ஆரம்பமாகிய மேலும் பல போட்டிகள் நாளையும் (ஞாயிறு) தொடர்ந்து இடம்பெறவுள்ளன.

போட்டிகளின் முதல் நாள் விபரம்

பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

பாணதுறை விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து களமிறங்கிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்சில் 97 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களினால் பின்னிலை பெற்றமையால் பல்லொவ் ஒன் முறைப்படி மீண்டும் துடுப்பாட நேரிட்டது.

மீண்டும் இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய பொலிஸ் அணி 36.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 151 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

பாணதுறை விளையாட்டுக் கழகம் சார்பாக பந்து வீச்சில் சரித புத்திக்க 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, முதல் இன்னின்சில் 38 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய கயான் சிரிசோம இரண்டாம் இன்னிங்சில் 4௦ ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 263 (59.2) – மிஷேன் சில்வா 6௦, சரிக்க புத்திக 44*, நிசல் ரண்டிக்க 37, சமர சில்வா 29, மயேஷ் பிரியதர்சன 62/3, சுவஞ்சி மதநயக்க 76/3

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 97/(27.3) – கயான் சிரிசோம 38 /9

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 151 (36.5) – அசேல அழுத்கே 74, துசிற மதனயக்க 34 , சரித புத்திக்க 42/5, லசித் பெர்னாண்டோ 26/2, கயான் சிரிசோம 4௦/2

போட்டி முடிவு : பாணதுறை விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வெற்றி


SLPA கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

முதல் இன்னிங்சில் விமானப்படை விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்ட 172 ஓட்டங்களை தொடர்ந்து தமது முதல் இன்னிங்சிற்காகக் களமிறங்கிய SLPA கிரிக்கெட் கழக அணி 106.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 347 ஓட்டங்களை பெற்று 175 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து களமிறங்கிய விமானப்படை விளையாட்டுக் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின்போது 6௦ ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. இந்நிலையில் அவ்வணி இன்னும் 115 ஓட்டங்களால் பின்னிலை வகிப்பதோடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. நாளை போட்டியின் இறுதி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 172(45.1) – உடயவன்ச பாராக்ரம 76, யோஹான் டி சில்வா 2௦/3, சமிந்த பண்டார 37/2, சமிக்கற எதிரிசிங்க 37/2, அக்கலங்கா கனேகம 39/2

SLPA கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 347(1௦6.4) – கயான் மனிஷான் 72, ரனேஷ் பெரேரா 68, இஷான் ரங்கன 43, ஹஷான் ஜேம்ஸ் 31/4, நிமேஷன் மென்டிஸ் 69/3

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 6௦/4 (23) – ரங்க திசாநாயக்க 41, சனக்க கோமசரு 12/2


குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 297 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக கூடிய ஓட்டங்களாக புட்டிக ஹசரங்க 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்சுக்காக 1௦7 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 375 ஓட்டங்களை பெற்று 78 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது. ஹஷான் பிரபாத் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களை பெற்ற நிலையில் களத்தில் இருக்கிறார். நாளை போட்டியின் இறுதி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 297(71) – புத்திக்க ஹசரங்க 72, குசல் எதுரிசூரிய 61, சமீர சந்தமல் 48, அஷான் ரணசிங்க 46, அனுராதா ராஜபக்ச 42/3 ஹிரத் மப்படுன 63/3

குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்க்ஸ்) : 375/9 (17) – தனுஷ்க தர்மசிறி 134, ஹஷான் பிரபாத் 97*மதுர மதுசங்க 45/4, திலங்க அய்வர்ட் 81/3


களுதுறை TC எதிர் களுதுறை PCC

களுதர TC அணி முதல் இன்னிங்சுக்காக 95.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நவமினி சிறிவர்தன 1௦7 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார். களுதுறை PCC அணி சார்பாக விஷ்வ சாந்த 94 ஓட்டங்களுக்கு 5 விக்கேட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய களுதுறை PCC முதல் இன்னிங்சுக்காக 237 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 9௦ ஓட்டங்களால் பின்னிலை வகித்தது. மங்கள குமார 73 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய களுதுறை TC அணி 6 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினை இழந்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

களுதுறை TC (முதல் இன்னிங்ஸ்) : 327 (95.2) – வமினி சிறிவர்தன 1௦7, சுலான் ஜெயவர்தன 59, யோஹான் டி சில்வா 38, விஷ்வ சாந்த 5/94

களுதுறை PCC (முதல் இன்னிங்ஸ்): 237 (83.3) – பத்தும் நிஷங்க 88, மனோஜ் தேசப்பிரிய 60, ரசிக்க பெர்னாண்டோ 41, மங்கள குமார 4/73

களுதுறை TC : 6/1 (3)

நாளை போட்டியின் இறுதி நாளாகும்.

>> போட்டி அட்டவணை <<