ஹொங் கொங் கிங்ஸ் பார்க் ஹொக்கி அரங்கில் இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணியை பங்களாதேஷ் அணி 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்டு சம்பியனாகத் தெரிவாகியது. இதனால் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் A குழுவில் முன்னிலை பெற்றிருந்த பங்களாதேஷ் அணி B குழுவில் இரண்டாம் இடம் பெற்றிருந்த சிங்கப்பூர் அணியை 8-0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளன இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி

அதேபோன்று, இலங்கை அணி இதற்கு முன்னைய சுற்றுக்களில் தாம் விளையாடிய எந்த ஒரு போட்டியிலும் தோல்வியடையாத நிலையில் மிகவும் பலம் மிக்க அணியாக B குழுவில் முன்னிலை பெற்றது.

இலங்கை அணி அரையிறுதியில் A குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்த ஹொங்கொங் அணியை 2- என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்தது.

அந்த வகையில் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் தொடர்ந்து இருமுறை சம்பியன் பட்டம் வென்ற பங்களாதேஷ் அணி, முதல் பாதி நேரத்தில் முதலாவது கோலையும் இரண்டாவது பாதி நேரத்தில் இரண்டு கோல்களையும் பெற்று 3- கோல்கள் அடிப்படையில் இலங்கை அணியை வெற்றி கொண்டது.  

ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ண அரையிறுதிக்கு இலங்கை அணி தகுதி

பங்களாதேஷ் அணிக்காக சுபைர் ஹசன் முதல் பாதியின் 22ஆவது நிமிடத்தில் முதலாவது கோலையும், இரண்டாவது பாதியின் 61ஆவது நிமிடத்தில் இஸ்லாம் அஷ்ரபுல் இரண்டாவது கோலையும் பெற 2 கோல்களால் அவ்வணி முன்னிலை பெற்றது.

எனினும் மறு முனையில் இலங்கை அணியினர் பல முயற்சிகளை மேற்கொண்டவாரே இருந்தனர். எனினும் அவர்களால் கோல்களைப் போட முடியாமல் இருந்த நிலையில், இறுதியாக 67ஆவது நிமிடத்தில் A.H.M கம்ருச்சமன் மூலம் 3ஆவது கோலையும் பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்டது.

இறுதி வரை போராடிய இலங்கை அணிக்கு எவ்விதமான கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதன்படி பங்களாதேஷ் ஹொக்கி அணி ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ண போட்டிகளில் மூன்று முறை சம்பியன் பட்டம் வென்று ஹட்ரிக் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி ஆசிய கிண்ண ஹொக்கி போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெறுகின்றது.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் சிங்கப்பூர் அணியை வெற்றி கொண்டதன்மூலம் இத்தொடரின் வெண்கலப் பதக்கத்தினை ஹொங் கொங் அணி பெற்றுக்கொண்டது.