மதுஷங்க, கமகே, குணரத்ன மற்றும் குமார ஆகியோர் ஜிம்பாப்வே தொடருக்காக தெரிவு

687
Sri Lanka Squad - Zimbabwe Tests

காயம் காரணமாக பல முன்னணி மற்றும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணிக்குள் உள்வாங்கப்படாத நிலையில், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு, இதுவரை எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கு கொள்ளாத கசுன் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோரை ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணிக்கு தெரிவு செய்திருக்கிறது.

மேலும், வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார மற்றும் நடுத்தர துடுப்பாட்ட வீரர் அசேல குணரத்ன ஆகியோரும் 15 பேர் கொண்ட இந்த இலங்கை டெஸ்ட் குழாமிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 214இல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான லஹிரு கமகே இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ள அதேநேரம், அசேல குணரத்ன நடப்பாண்டில் ஒரே ஒரு T2 போட்டியில் மாத்திரமே பங்கு பற்றியிருக்கிறார்.

புனித திரித்துவ கல்லூரியின் முன்னாள வீரரும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளருமான லஹிரு குமாரஅவுஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி குழாமிற்கு அழைக்கபட்டிருந்த போதும், அவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இளையோர் டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்த லஹிரு குமார, மிகவும் அற்புதமாக பந்து வீசி 13 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணியிடனான முதல் தர போட்டிகளில் அவர் அறிமுகமானார்.

மாத்தறை, புனித செர்வதிஸ் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்திய கசுன் மதுஷங்க 48 முதல்தர போட்டிகளில் பங்குபற்றி 136 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இலங்கை கிரிக்கெட் ப்ரிமியர் லீக் போட்டிகளில் இவர் சின்ஹலிஸ் விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுகிறார்.   

நடுத்தர துடுப்பாட்ட வீரர் அசேல குணரத்ன, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சாராசரியாக 42.77  ஐ கொண்டுள்ள அதேநேரம், இவரது சிறப்பான ஓப் கட்டர் சுழல் பந்து வீச்சு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கட்டைவிரல் காயம் காரணமாக துணைத்தலைவர் தினேஷ் சந்திமல் ஜிம்பாப்வேக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமிற்கு தெரிவு செய்யப்படவில்லைகடந்த செப்டம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற மேர்க்கன்டைல் சுற்றுப்போட்டியில் விளையாடும்போது, அவருக்கு கட்டைவிரலில் காயம் ஏற்ப்பட்டது.

அதுபோன்று, பல தடவைகள் இலங்கை அணியின் பந்து வீச்சை பலப்படுத்திய நுவான் பிரதீப் தசைநார் பிடிப்பு காரணமாக இத்தொடரில் பங்குபற்றவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எதிர்பார்த்தவாரே இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் ரங்கன ஹேரத்டில்ருவான் பெரேரா மற்றும் லக்ஷன் சந்தகன் ஆகிய சுழல் பந்து வீச்சாளர்களை அணியில் இணைத்துள்ளனர். அதேநேரம், அண்மையில் மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான இரண்டு போட்டிகளிலும் சிறந்த துடுப்பாட்டதை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்ன ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்க உள்ளார்.

அதேசமயம், நிரோஷன் திக்வெல்ல தொடர்ந்தும் நடுத்தர துடுப்பாட்ட வீரர் மற்றும் விக்கெட் காப்பாளராக செயற்படவுள்ளார். அத்துடன், அவுஸ்திரேலியாவுடன் 3- கணக்கில் வெற்றி பெற்று வரலாறு படைத்த அணியில் அங்கம் வகித்த ரோஷன் சில்வா குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி ஹராரேயில் ஆரம்பமாக உள்ளது. இலங்கை அணி 2004ஆம் ஆண்டு முதல் ஜிம்பாப்வே அணியுடன் எந்தவிதமான டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டி குழாம்

1. அஞ்சலோ மத்யூஸ் (தலைவர்)
2. திமுத் கருணாரத்ன
3. கௌஷால் சில்வா
4. குசல் ஜனித் பெரேரா
5. குசல் மெண்டிஸ்
6. தனஞ்சயன் டி சில்வா
7. நிரோஷன் டிக்வெல்ல
8. அசேல குணரத்ன
9. ரங்கன ஹேரத்
10. டில்ருவன் பெரேரா
11. லக்க்ஷன் சந்தகன்
12. லஹிரு கமகே
13. லஹிரு குமார
14. சுரங்க லக்மால்
15. கசுன் மதுஷங்க

Crawler