மலியதேவ கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

155
U19 School Cricket

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் ஆனந்த கல்லூரியுடனான போட்டியில் மலியதேவ கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

ஆனந்த கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி

முதல் நாள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றிருந்த மலியதேவ கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 7 ஓட்டங்களை மாத்திரமே பெற வேண்டிய நிலையில் இன்றைய நாள் துடுப்பாடக் களமிறங்கியது.

அற்புதமாக துடுப்பெடுத்தாடிய துலாஜ் ரணதுங்க 111 ஓட்டங்கள் விளாச, மலியதேவ கல்லூரி 79 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் திலீப ஜயலத் 3 விக்கெட்டுகளையும் சம்மு அஷான் மற்றும் அச்சில இரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய ஆனந்த கல்லூரி, ஆட்டம் நிறைவடையும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 19 ஓட்டங்களை பெற்றிருந்தது. அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முன்னர், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனியொருவராக போராடிய கவிஷ்க அஞ்சுல 67 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். மலியதேவ கல்லூரி சார்பாகப் பந்து வீச்சில் அசத்திய சஜீவன் பிரியதர்ஷன (5/59) மற்றும் தமித சில்வா (4/50) தமக்கிடையே 9 விக்கெட்டுகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 158 (48.2) – கவிஷ்க அஞ்சுல 67, லஹிரு ஹிரண்ய 27*, சஜீவன் பிரியதர்ஷன 5/59, தமித சில்வா 4/50

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 238 (79) – துலாஜ் ரணதுங்க 111, தனஞ்சய பிரேமரத்ன 36, சுபுன் சுமனரத்ன 34, திலீப ஜயலத் 3/56, சம்மு அஷான் 2/33, அச்சில இரங்க 2/36

ஆனந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 19/2 (5)

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மலியதேவ கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி.


புனித ஜோசப் கல்லூரி எதிர் காலி மஹிந்த கல்லூரி

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மஹிந்த கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி 82 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்றியிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்  கொண்டது.

அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நிபுன் சுமனசிங்க 82 ஓட்டங்களைக் குவித்தார். பந்து வீச்சில் கவிந்து எதிரிவீர 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சொற்ப ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் களமிறங்கிய மஹிந்த கல்லூரி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பேதுமின்றி 7 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 255/7d (82) – நிபுன் சுமனசிங்க 82, சச்சித மஹிந்தசிங்க 33*, தினித் ஜயகொடி 31, கவிந்து எதிரிவீர 3/67

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 7/0 (11)


கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி எதிர் மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித செபஸ்டியன் கல்லூரி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது. அதன்படி ஆடுகளம் பிரவேசித்த டி.எஸ். சேனநாயக்க கல்லூரி எதிரணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

புனித செபஸ்டியன் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் நிமேஷ் பண்டார 3 விக்கெட்டுகளையும் விஷேன் சில்வா மற்றும் பசித் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்த, டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி 121 ஓட்டங்களுக்கே சுருண்டது. முதித லக்ஷான் அதிபட்சமாக 38 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய புனித செபஸ்டியன் கல்லூரி, இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மலிந்த பீரிஸ் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 121 (32.4) – முதித லக்ஷான் 38, விஹான் குலதுங்க 34, நிமேஷ் பண்டார 3/35, விஷேன் சில்வா 2/19, பசித் பெரேரா 2/30

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 73/2 (25) – மலிந்த பீரிஸ் 34*, நுவனிது பெர்னாண்டோ 22


கண்டி தர்மராஜ கல்லூரி எதிர் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தர்மராஜ கல்லூரி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அசத்தலாக துடுப்பெடுத்தாடிய தேஷான் குணசிங்க 116 ஓட்டங்களையும், கசுன் குணவர்தன 82 ஓட்டங்களையும் குவிக்க, தர்மராஜ கல்லூரி தமது முதல் இன்னிங்சிற்காக 283 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் கவீஷ துலாஞ்சன 3 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.

அடுத்து களமிறங்கிய புனித அந்தோனியார் கல்லூரி, இன்றைய ஆட்ட நேரம் நிறைவடையும் போது 1 விக்கெட் இழப்பிற்கு 38 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 283 (70.2) – தேஷான் குணசிங்க 116, கசுன் குணவர்தன 82, கவீஷ துலாஞ்சன 3/31

புனித அந்தோனியார் கல்லூரி – (முதல் இன்னிங்ஸ்) – 38/1 (16)

மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு