All Island School Games 2016

கண்டி,போகம்பரையில் தற்போது நடைபெற்று வரும் அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் மேலும் மூன்று புதிய சாதனைகள் நிலை நாட்டப்பட்டது. 

உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் ஆகிய போட்டித்தன்மை மிகுந்த போட்டிகளில் சுமார் 15 விளையாட்டு வீரர்கள், அவர்களுக்குரிய விளையாட்டு போட்டிகளில் மைலோ விருதுகளை பெறத்தகுதி பெற்றனர். தடகள போட்டிகளில் 4×400 மீட்டர் அஞ்சலோட்ட போட்டிகள் குறித்த நாளில் பின்னேரம் முடிவுற்றதுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு போட்டியாகவும் அமைந்திருந்தது. 

19 வயதுக்கு உட்பட்ட உயரம் தாண்டுதல் போட்டியில், பூர்ணிமா ஜெயமாலி மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1.74 மீட்டர் உயரத்தை தாண்டி வரலாறு படைத்தார். முன்னதாக தேசிய மட்டத்தில் 1.65 மீட்டர் உயரமாக இருந்த சாதனையையே இவர் முறியடித்தார்.     

19 வயதுக்கு உட்பட்ட நீளம் தாண்டுதல் போட்டியில் மற்றும் மைலோ விருதுகளுக்கு தகுதி பெற்ற ரித்மா நிஷாடி, ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த 5.50 மீட்டர் சாதனையை 5.85 மீட்டர்  நீளம் தாண்டி முறியடித்தார். தர்மமாசோக்க பாடசாலை மாணவியான இவர் தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இச்சாதனையைப் புரிந்தார்.

அதே நேரம், இறுதியாக பிற்பகல் இடம்பெற்ற, 21 வயதுக்கு உட்பட்ட மகளிர் கோலூன்றி தாண்டுதல் போட்டியில் ஜே. அனிதா அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் ஏற்படுத்தியிருந்த சாதனையை முறியடித்தார்.

நான்காம் நாள் ஆரம்பத்தில், 17 வயதுக்கு உட்பட்ட கோலூன்றிப் தாண்டுதல் போட்டியில் வட மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தி A. புவிதரன் 3.80 மீட்டர் தாண்டி முதலிடத்தைப் பதிவு செய்த அதே வேளை, R. ஜேசுதாசன் 3.60 மீட்டர் தாண்டி இரண்டாம் இடத்தையும், U. சலக்சன் 3.55 மீட்டர் தாண்டி முன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

19 வயதுக்கு உட்பட்ட சாதனைக்குரிய ரித்மா நிஷாடி நீளம் தாண்டுதல் வெற்றி பெற்ற அதே வேளையில், இரண்டாம் மற்றும் முன்றாம் இடங்களை முறையை, வசனா சத்துறங்கி மற்றும் S. அஹரணி கைப்பற்றிக் கொண்டார்கள்.   

21 வயதுக்கு உட்பட்ட மகளிர் ஈட்டி எறிதல் போட்டிகளில் ஆச்சரியப்படும் வகையில் I. கவிந்தி 36.25 மீட்டர் தூரம் எறிந்து போட்டியை வென்றதோடு போட்டிக்குரிய விருதுகளையும் பெற்றுக்கொண்டார். அத்துடன், TK ரத்னாயக்க மற்றும் J. அனிதா முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

நான்காம் நாள், காலை இடம்பெற்ற 200 மீட்டர் போட்டிகள் குறிப்பிட்ட காலைப் பொழுதில் அதிகமான நேரத்தினை எடுத்துக்கொண்டன. 

பிற்பகல் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில், குண்டு எறிதல் போட்டிகள் மிக விறுவிறுப்பான போட்டிகளாக அமைந்திருந்தன. சமல் குமாரசிறி முதலிடத்தையும் சபரகமுவ மாகாணத்தை சேர்ந்த ரசிந்த பெரேரா இரண்டாம் இடத்தையும், மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ரொஷான் இரண்டாம் இடத்தையும், ரசின்ற பெரேரா முன்றாம் இடத்ததையும் பதிவு செய்துகொண்டனர்.

4×400 மீட்டர் அஞ்சலோட்ட இறுதிபோட்டிகள், அனைத்து வயது பிரிவுகளிலும் இடம் பெற்றது. அதே சமயம் மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, வாளல்ல A. ரத்னாயக்க குழாம் அனைத்து வயது பிரிவு போட்டிகளிலும் அனேகமாக வெற்றி பெற்றிருந்தாலும், 15 வயதுக்கு உட்பட்ட அஞ்சலோட்ட போட்டியில் புனித திரித்துவக் கல்லூரியும், 19 வயதுக்கு உட்பட்ட போட்டிகளை மரிஸ்டெல்லா ஆடவர் குழாம் வெற்றி பெற்ற அதே நேரம் 17 வயதுக்கு உட்பட்ட ஆடவர் பிரிவில் புனித பெனடிக்ட் கல்லூரி வெற்றிகொண்டது. 

17 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில், முப்பாய்ச்சல் போட்டியில் தென் மாகாணத்தை சேர்த்த பிரசாதி லக்கஷனி முதலிடம், P. கருணாநாயக்க மற்றும் P. சமரதுங்க முறையே இரண்டாம், முன்றாம் இடங்களை பதிவு செய்துகொண்டனர். அவரிருவரும் சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றர்கள்.

05ஆம் நாளாக நடைபெறவுள்ள அகில இலங்கை மட்டத்திலான பாடசாலைகள் போட்டிகளில் 200 மீட்டர் அரையிறுதி போட்டிகளுடன் இறுதிப்போட்டிகளும் நடைபெறவுள்ளன. சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், போகம்பரவில் மற்றுமொரு போட்டிமிக்க நாளாக அமையவிருப்பதோடு பதக்கங்களும் அளிக்கப்படவுள்ளன.