சம்பத் மற்றும் மாஸ் அணிகளுக்கு வெற்றி

9098
MCA Sep 24

மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினத்தில் 2 போட்டிகள் நடைபெற்றன. இதில் சம்பத் வங்கி மற்றும் மாஸ் யுனிச்செலா ஆகிய அணிகள் வெற்றியை ருசித்தன.

சம்பத் வங்கி எதிர் மாஸ் எக்டிவ்

மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரில் சம்பத் வங்கி மற்றும்  மாஸ் எக்டிவ்  அணிகளுக்கு இடையிலான போட்டி டி சொயிஸா மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாஸ் எக்டிவ்  அணி முதலில் சம்பத் வங்கி அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.

இதன்படி முதலில் ஆடிய சம்பத் வங்கி அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 276 ஓட்டங்களைப் பெற்றது. சம்பத் வங்கி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கௌஷல் சில்வா மிக அருமையாக ஆடி ஆட்டம் இழக்காமல் 147 ஓட்டங்களையும், தினுக்  விக்கிரமநாயக்க 36 ஓட்டங்களையும் பெற்றனர். மாஸ் எக்டிவ் அணியின் தரப்பில் பந்து வீச்சில் கசுன் மதுஷங்க 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்த சச்சித் பத்திரண 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின் 277 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மாஸ் எக்டிவ் அணி 41.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம் சம்பத் வங்கி அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மாஸ் எக்டிவ் அணியின் துடுப்பாட்டத்தில் கித்துருவான் விதானகே 76 ஓட்டங்களையும், சச்சித்திர சேரசிங்க 69 ஓட்டங்களையும் பெற்றனர்  

சம்பத் வங்கி அணியின் சார்பில் பந்து வீச்சில் கசுன் ராஜித 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், நுவன் பெரேரா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜீவன் மெண்டிஸ் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பத் வங்கி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி  – 276/8 (50)

கவுஷல் சில்வா 147 *, தினுக் விக்கிரமநாயக்க 36

கசுன் மதுஷங்க 2/56, சச்சித்  பத்திரண 4/43

மாஸ் எக்டிவ் – 240/10 (41.4)

கித்துருவான் விதானகே 76, சச்சித்திர சேரசிங்க 69

கசுன் ராஜித 4/50, நுவான் பெரேரா 3/45, ஜீவன் மெண்டிஸ் 2/48

சம்பத் வங்கி அணி 36 ஓட்டங்களால் வெற்றி

schoolscricketcrawler

கொமர்ஷல் கிரெடிட் எதிர் மாஸ் யூனிச்செலா

இதேவேளை மெர்க்கன்டைல் கிரிக்கெட் தொடரின் மற்றும் ஒரு போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொமர்ஷல் கிரெடிட் மற்றும் மாஸ் யூனிச்செலா அணிகள் மோதின. இந்தப் போட்டி கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாஸ் யூனிச்செலா அணி முதலில் கொமர்ஷல் கிரெடிட் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.

இதன்படி முதலில் ஆடிய கொமர்ஷல் கிரெடிட் அணி 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. கொமர்ஷல் கிரெடிட் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் லஹிரு மதுஷங்க 41  ஓட்டங்களையும், சதுரங்க டி சில்வா 35 ஓட்டங்களையும், உபுல் தரங்க 23 ஓட்டங்களையும், ரங்கா குரே 28 ஓட்டங்களையும் பெற்றனர். மாஸ் யூனிச்செலா அணியின் தரப்பில் பந்து வீச்சில் மலிங்க பண்டார 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த திலகரத்ன டில்ஷான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்பு 190 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மாஸ் யூனிச்செலா அணி வெறுமனே 21.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியைப் பதிவு செய்தது. மாஸ் யூனிச்செலா அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக 50 ஓட்டங்களையும், மஹேல உடவத்த 65 ஓட்டங்களையும், பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய திலகரத்ன டில்ஷான் 22 ஓட்டங்களையும் பெற்றனர். கொமர்ஷல் கிரெடிட் அணியின் பந்து வீச்சில் கமகே 37 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கொமர்ஷல் கிரெடிட் – 189/10 (47.4)

லஹிரு மதுஷங்க 41, சதுரங்க  டி சில்வா 35, உபுல்  தரங்க 23, ரங்கா குரே 28

மலிங்கா பண்டார 3/29, டி. எம் தில்ஷன் 2/30

மாஸ் யூனிச்செலா – 191/4 (21.4)

மஹேல உடவத்த 65, தனுஷ்க குணதிலக 50, டி. எம் தில்ஷான் 22

லஹிரு கமகே 1/37

மாஸ் யூனிச்செலா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி