17 வயதிற்குட்பட்ட கிரிக்கட் அரையிறுதியில் தர்ஸ்டன் வெற்றி

171
u17 2nd semi

17 வயதிற்குட்பட்ட பிரிவு 1 பாடசாலை கிரிக்கட் போட்டிகளில் 2ஆம் அரையிறுதி ஆட்டத்தில் புனித பீட்டர்ஸ் கல்லூரியை 47 ஓட்டங்களால் வென்று தர்ஸ்டன் கல்லூரி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

கொழும்பு மூர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

தமது தெரிவு சரி என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய தர்ஸ்டன் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் 289 எனும் மாபெரும் ஓட்டங்களை அடையப் பங்களித்தனர்.

தர்ஸ்டன் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்படுகையில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நிமேஷ் லக்ஷான் சதம் அடித்து அசத்தினார்.

அவர் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைப் பெற அவருக்குத் துணையாக இமேஷ் விரங்க மற்றும் நிபுன் லக்ஷான் முறையே 66 மற்றும் 44 ஓட்டங்களைப் பெற்றனர்.

புனித பீட்டர்ஸ் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் அசித கிரியெல்ல மற்றும் சந்துஷ் குணாதிலக தலா 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

நியமிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விகாற்றுகளை இழந்து தர்ஸ்டன் கல்லூரி 289 ஓட்டங்களைப்பெற்றது.

290 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய புனித பீட்டர்ஸ் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக துடுப்பெடுத்தாட முனைந்து வேகமாக மைதானத்தை விட்டு வெளியேறினர்.

புனித பீட்டர்ஸ் கல்லூரியின் இனிங்ஸைத் தாங்கி நின்ற ரன்மித் ஜயசேன 79 ஓட்டங்கள் குவித்து பீட்டர்ஸ் அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

எனினும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அதிக ஓட்டங்களை குவிக்கத் தவற பீட்டர்ஸ் அணி இலக்கை அடைவது சந்தேகமானது.

பீட்டர்ஸ் அணிக்குத் தலைவலியாக அமைந்த யெஷான் விக்ரமாரச்சி 3 விக்கட்டுகளைக் கைப்பற்றி பீட்டர்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

இறுதியில் பீட்டர்ஸ் அணி இலக்கை அடைய முன் அணைத்து விக்கட்டுகளையும் இழந்தது. 45.5 ஓவர்களில் புனித பீட்டர்ஸ் கல்லூரியால் 242 ஓட்டங்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

தர்ஸ்டன் கல்லூரி 47 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது. தர்ஸ்டன் அணியானது இறுதிப் போட்டியில் செபஸ்டியன் கல்லூரியுடன் மோதவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி 289/6(50)

நிமேஷ் லக்க்ஷன் 105*, இமேஷ் விரங்க 66, நிபுண லக்ஷன் 44

அசித கிரியெல்ல 2/43, சந்துஷ் குணதிலக 2/65

புனித பீட்டர்ஸ் கல்லூரி 242/10(45.5)

ரன்மித் ஜயசேன 79, ஷெவான் பெரேரா 41, சச்சின் சில்வா 26

யேஷான் விக்ரமாரச்சி 3/37, சந்தரு டயஸ் 2/47