டுப்ளசிஸ் சதம், நியூசிலாந்து தடுமாற்றத்தில்

190
sa v nz

தென் ஆபிரிக்க  – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.  இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானம் செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய தென் ஆபிரிக்க அணி முதல் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 283 ஓட்டங்களை பெற்று இருந்தது. டுமினி 67 ஓட்டங்களோடும் , டு பிளிசிஸ் 13 ஓட்டங்களோடும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

டுமினி 88 ஓட்டங்களை  எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பவுமா 8 ஓட்டங்களோடு  வெளியேறினார். ஆனால்,  தலைவர்  டு பிளிசிஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் தென் ஆபிரிக்க  அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 481 ஓட்டங்களை  குவித்து டிக்ளேர் செய்தது. டு பிளிசிஸ் 112 ஓட்டங்களை விளாசி கடைசி வரை ஆட்டம் இழக்காமல்  இருந்தார். நியூசிலாந்து அணி சார்பில் வாக்னர் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இனிங்சிற்காக ஆடி வரும் நியூசிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கட்டுகளை இழந்து 38 ஓட்டங்களை பெற்று தடுமாறி வருகிறது. ஆட்ட நேர முடிவின் போது ஆடுகளத்தில் கென் வில்லியம்சன் 15 ஓட்டங்களோடும் நிகோலஸ் 4 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். தென் ஆபிரிக்க அணியின் ஸ்டெயின் மற்றும் பிளெண்டர் தலா 1 விக்கட் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

தென் ஆபிரிக்கா – 481/8d

டுப்ளசிஸ் 112*, ஜெ. பி டுமினி 88, ஸ்டிபன் குக் 56, குயின்டன் டி கொக் 82, ஹசீம் அம்லா 58

நீல் வாக்னர் 86/5, டொக் ப்ரெஸ்வெல் 98/1

நியூசிலாந்து – 38/3

கென் வில்லியம்சன் 15*, நிகோலஸ் 04*,  மார்ட்டின் கப்டில் 08

ஸ்டெய்ன் 18/1, பிளண்டர் 10/1

நியூசிலாந்து அணி 443 ஓட்டங்கள் பின்னிலையில்