விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்தார் முன்னாள் காற்பந்தாட்ட வீரர் ஈ.பி.சன்ன

358
channa

இலங்கை காற்பந்தாட்ட அணியின் தலைவராக பணியாற்றி, இலங்கையின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக திகழ்ந்து தற்போது நிலையான வருமானம் இல்லாமல் அவதிப்படும், சில  வாரங்களுக்கு முன் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட முன்னாள் இலங்கை காற்பந்தாட்ட வீரர் ஈ.பி.சன்ன  ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களை அவரின்  ஆராதனையின் பெயரில் சந்தித்தார்.

இதன் போது சன்னவிடம் உரையாற்றிய திரு. தயாசிறி ஜயசேகர அவர்கள் பழைய கசப்பான நிகழ்வுகள் அனைத்தையும் மறக்கும் படியும், புதிதாக மீண்டும் வாழ்வை ஆரம்பிக்கும்படியும் அன்பாக வேண்டிக்கொண்டார்.

எந்த ஒரு மனிதனாலும் தொடர்ந்து ஒரு துறையில் நிலைக்க முடியாது எனவும், வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக வாழவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

மேலும் ஒரு விளையாட்டுத்துறை அமைச்சராக பூரண ஒத்துழைப்பு தருவதாகவும், தற்போதைக்கு மாத்தறை விளையாட்டு மைதானத்தில் பொறுப்பான ஒரு பதவியை தருவதாகவும் உறுதிமொழி அளித்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த ஈ.பி.சன்ன அவர்கள் இவ்வாறு என்னைப்போல் பாதிப்படைந்த வீரர்களை கண்டுபிடித்து, நலம் விசாரித்து உதவிகளை மேற்கொள்ளும் விளையாட்டுதுறை அமைச்சர் இருப்பது தற்போதைய வீர, வீராங்கனைகளுக்குப் பெரும் பாக்கியம் எனக் குறிப்பிட்டார்.