வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 26

383
OTD-Aug-26

2012ஆம் ஆண்டுஇந்தியா U19 சம்பியனானது

2012ஆம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட்டோருக்கானஉலகக் கிண்ணப் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் போட்டியை நடாத்திய அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை டோனி அயர்லாண்ட் மைதானத்தில் சந்தித்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய 19 வயதிற்குட்பட்ட அணி முதலில் பந்து வீசத் தீர்மானம் செய்தது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய U19 – 225/8 (50)

வில்லியம் போஷிஸ்டா 87*, அஸ்டோன் டர்னர் 43, டிராவிஸ் ஹெட் 37

சந்தீப் சர்மா 54/4, பாபா அபரஜித் 31/1

இந்தியா U19 – 227/4 (47.4)

உன்முகுட் சந் 111*, ஸ்மிட் படேல் 62*, பாபா அபரஜித் 33

ஜோயில் பரிஸ் 33/1, அஸ்டோன் டர்னர் 42/1

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 25

இந்தியா U19 அணி 6 விக்கட்டுகளால் வெற்றி கொண்டு 2012ஆம் ஆண்டுக்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக உன்முகுட் சந் தெரிவு செய்யப்பட்டதோடு போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக வில்லியம் போஷிஸ்டா தெரிவு செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1854 அர்னால்ட் ஃபோதர்கில் (இங்கிலாந்து)
  • 1908 பில் ஹன்ட் (அவுஸ்திரேலியா)
  • 1909 எரிக் டேவிஸ் (தென் ஆபிரிக்கா)
  • 1970 பிரட் ஷூல்ட்ஸ் (தென் ஆபிரிக்கா)
  • 1975 ஜான் லூயிஸ் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்