இரண்டாவது டெஸ்ட் போட்டியை சமநிலை செய்தனர் இலங்கை அபிவிருத்தி அணியினர்

200
sl v sa emerging

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி அணியினர் இரண்டாவது டெஸ்ட் போட்டியை  தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் விளையாட்டு அணியுடன் 21ஆம் திகதி   பிரிட்டோரிய மைதானத்தில் ஆரம்பித்தனர். இப்போட்டி நான்காவது நாளில் சமநிலையில் முடிவடைந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியின் தலைவர் டு புளூய் முதலில் தனது அணியினை துடுப்பெடுத்தாடப் பணித்தார். முதலாவது இனிங்ஸ் முடிவில் 5 விக்கட்டுகளுக்கு 588  ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.  

இதில் மோகோட்ஸி ஆட்டமிழக்காமல் 205 ஓட்டங்களை நிதானமாகப் பெற்றார். மறு முனையில் அகெர்மன் சிறப்பாக ஆடி 156 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அபிவிருத்தி அணியின் பந்து வீச்சைப் பொருத்தமட்டில் சதுரங்க 2 விக்கட்டுகளும் சக வீரர்களான அனுக் பெர்னாண்டோ, ரமேஷ் புத்திக்க மற்றும் தனஞ்சய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டினை வீழ்த்தினர்.  

தொடர்ந்து தமது முதலாவது இனிங்ஸை  ஆடிய இலங்கை அபிவிருத்தி அணியினர் சகல  விக்கட்டுகளையும்  இழந்து  510 ஓட்டங்களைக் குவித்தனர்.  இதில் லஹிரு மிலந்த அதிரடியாக ஆடி  31 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 196 ஓட்டங்களைப் பெற்று இரட்டைச்சதத்தை தவறவிட்டார்.

மறுமுனையில் சந்துன் 78 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அனுக் பெர்னாண்டோ 57 ஓட்டங்களை குவித்தார். ஹசன் துமிந்து 49 ஓட்டங்களைப் பெற்று அவரும் அரைச்சதத்தை தவறவிட்டார். தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணி சார்பாகப் பந்துவீச்சில் பூதாசா 87 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளையும், நிட்டுலி 97 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுகளயும் போர்டுன் 97 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது இரண்டாவது இனிங்ஸை நான்காவது நாளில் ஆடிய  தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியினர் 2 விக்கட்டுகளை இழந்து 99 ஓட்டங்கள்ப் பெற்ற  நிலையில் இறுதி நாள் முடிவுக்கு வந்தது. இதில் கலியெம் 37 ஓட்டங்களயும் கோமாரி 27 ஓட்டங்களயும் குவித்தனர். பந்து வீச்சில் மதுசங்க, தனஞ்ஜய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை வீழ்த்தினர்.  

போட்டியின் சுருக்கம் :

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணி – 588/5

மோகோட்ஸோ 205*, அகெர்மன் 156, டு ப்ளூய் 42, கோமாரி 59, டலியம் 30, குருகர் 53

சதுரங்க 2/95, அணுக் பெர்னாண்டோ 1/111, புத்திக்க 1/42, தனஞ்சய 1/152

இலங்கை அபிவிருத்தி அணியினர் – 510

மிலிந்த 196, சந்துன் 78 , அணுக் பெர்னாண்டோ 57, துமிந்து 49*

பூதாசா 3/87, போர்டுன் 4/97, நிட்டுலி 2/97

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணி – 99/2

கலியெம் 37*, கோமாரி 27, டு புளூய் 21*

மதுசங்க 1/22, தனஞ்ஜய 1/17