இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்கள் சேர்த்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்த சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுக்காத போதும் அடுத்து வந்த குசால் மென்டிஸ் 69 ஓட்டங்களும், சwதிமால் 48 ஓட்டங்களும், அணியின் தலைவர் மேத்யூஸ் 57 ஓட்டங்களும், குசால் பேரேரா 54 ஓட்டங்களும் சேர்த்து அணியின் ஸ்கோரைஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். அவுஸ்திரேலியா தரப்பில் பந்துவீச்சில் ஸ்டார்க், பால்க்னர், சம்பா ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதையடுத்து 289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியும் துவக்க விக்கட்டுகளை விரைவில் இழந்தது. இந்த விக்கட்டுகளை திசர பெரேரா கைப்பற்றினார். மூன்றாவது வீரராகக் களமிறங்கிய அணியின் தலைவர் ஸ்மித் 30 ஓட்டங்கள் சேர்த்து எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பெய்லி தனது பங்கிற்கு 27 ஓட்டங்கள் சேர்த்தார். பொறுப்புடன் ஆடிய மேத்யூ வேட், 76 ஓட்டங்களை விளாசி நம்பிக்கை அளித்தார்.

Photo Album – Sri Lanka vs Australia – 2nd ODI

அவர் ஆட்டம் இழந்த பின்னர் அணியின் ஓட்ட வீதம் சரியத் தொடங்கியது. நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் 31 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவரது விக்கட்டை மேத்யூஸ் கைப்பற்றினார். அதே ஓவரில் ஸ்டார்க் ரன் அவுட் ஆனார். பால்க்னர்(13), சம்பா(5), ஸ்டார்க் (0) ஆகியோரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, அவுஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 206 ஓட்டங்கள் எடுத்து சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதனால், இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் தரப்பில் பந்துவீச்சில் அமில அபோன்சோ 4 விக்கட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். திசர பெரேரா 3 விக்கட்டுகளும், மேத்யூஸ் 2 விக்கட்டுகளும் கைப்பற்றினர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி 28ஆம் திகதி தம்புல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 288/10 (48.5)
குசல் மெண்டிஸ் 69, எஞ்சலோ மெதிவ்ஸ் 57, குசல் பெரேரா 54, தினேஷ் சந்திமால் 48
மிச்சல் ஸ்டார்க் 53/3, எடம் சம்பா 42/3, ஜேம்ஸ் போல்க்னர் 45/3

அவுஸ்ரேலியா – 206/10 (47.2)
மெதிவ் வெட் 76, ட்ரேவிஸ் ஹெட் 31, ஸ்டீவ் ஸ்மித் 30
அமில அபோன்சோ 18/4, திசர பெரேரா 33/3, எஞ்சலோ மெதிவ்ஸ் 17/2

இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றி