தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் விளையாட்டு அணி 588 ஓட்டங்களுடன் முன்னிலையில்

190
2nd Test day 2

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி அணியினர் இரண்டாவது டெஸ்ட் போட்டியை  தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் விளையாட்டு அணியுடன் பிரிட்டோரிய மைதானத்தில் ஆரம்பித்தனர். முதலாவது நாள் முடிவில் 3 விக்கட்டுகளை இழந்து 405 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியின் தலைவர் டு புளூய் முதலில் தனது அணியினை துடுப்பெடுத்தாடப் பணித்தார். முதலாவது நாள் 3 விக்கட்டுகளுக்கு 405 ஓட்டங்களைப் பெற்று நிறைவடைந்தது.

இரண்டாவது நாளைத் தொடர்ந்த தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியினர் 5 விக்கட்டுகளை இழந்து 588 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.

இதில் மோகோட்ஸி ஆட்டமிழக்காமல் 205 ஓட்டங்களை நிதானமாகப் பெற்றார். மறு முனையில் அகெர்மன் சிறப்பாக ஆடி 156 ஓட்டங்களைப் பெற்றார். இணைப்பாட்டமாக 208 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அகெர்மன் 156 ஓட்டங்களைக் குவித்தநிலையில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய குறுகர் அரைச்சதத்தைப் பூர்த்திசெய்த பொழுது சதுரங்கவின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

இலங்கை அபிவிருத்தி அணியின் பந்து வீச்சைப் பொருத்தமட்டில் சதுரங்க 2 விக்கட்டுகளும் சக வீரர்களான அனுக் பெர்னாண்டோ, ரமேஷ் புத்திக்க  தனஞ்சய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டினை வீழ்த்தினர்.

இரண்டாவது நாள் முடிவில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியினர் 123.2 ஒவர்களுக்கு முகம் கொடுத்து 588 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து ஆட்டத்தை இடைநிறுத்தி  இலங்கை  அபிவிருத்தி அணிக்கு துடுப்பெடுத்தாட சந்தர்ப்பத்தை வழங்கினர்.

தொடர்ந்து தமது முதலாவது இனிங்ஸியில் ஆடிய இலங்கை அபிவிருத்தி அணியினர் 1 விக்கட்டை மாத்திரம் இழந்து 98 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இரண்டாவது நாள் நிறுத்தப்பட்டது. இதில் வாத்துக 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

நெடுலி 1 விக்கட்டை வீழ்த்தினார். 3 வது நாள் ஆட்டத்தை இலங்கை அபிவிருத்தி அணியினர் எவ்வாறு பயன்படுத்துவர் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

போட்டியின் சுருக்கம் :

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணி – 588/5

மோகோட்ஸோ 205*, அகெர்மன் 156, டு ப்ளூய் 42, கோமாரி 59, டலியம் 30,குருகர் 53

சதுரங்க 2/95, அணுக் பெர்னாண்டோ 1/111, புத்திக்க 1/42, தனஞ்சய 1/152

இலங்கை அபிவிருத்தி அணியினர் – 98/1

வாத்துக 32, துமிந்து 24*, மிலிந்த 29*

நெடுலி 1/44