வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 23

527
ENG vs AUS

1938ஆம் ஆண்டுஇங்கிலாந்து 903/6

இங்கிலாந்துஅவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் லண்டன் ஓவல் மைதானத்தில் 5ஆவது ஏஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. இதற்கமைய அந்த அணி தனது முதல் இனிங்ஸில் 7 விக்கட்டுகளை இழந்து 903 ஓட்டங்களைப் பெற்றது. டெஸ்ட் வரலாற்றில் ஒரு அணியினால் பெறப்பட்ட அதிக பட்ச ஓட்டங்களாக இது காணப்பட்டது. ஆனால் அதன் பின் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக 952 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 903/6 – லேனோர்ட் ஹட்டன் 364, மொரிஸ் லெய்லான்ட் 187, ஜோ ஹார்ட்ஸ்டாப் 169*, ஆர்தர் வூட் 53

அவுஸ்ரேலியா – 201/10 – பிரவுன் 69, ஹஸ்ஸாட் 42, பார்ன்ஸ் 41

அவுஸ்திரேலியா – 123/10 – பார்னெட் 46, பார்ன்ஸ் 33, பிரவுன் 15

இங்கிலாந்து அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 579 ஓட்டங்களால் வெற்றி


1972ஆம் ஆண்டு மார்க் புச்சர் பிறப்பு

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரரான  மார்க் புச்சரின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : மார்க் எலன் புச்சர்
  • பிறப்பு : 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி
  • பிறந்த இடம் : மத்திய ஸ்வான், மேற்கு ஆஸ்திரேலியா
  • வயது : 44
  • புனைப் பெயர்பஸ், பட்ச்
  • உயரம் – 5 அடி 11 அங்குலம்
  • விளையாடும் காலப்பகுதி : 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் வரை
  • துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்
  • விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 71
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 4288
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 173*
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 34.58

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 22

ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1909 சைட் புல்லர் (ஆங்கில டெஸ்ட் நடுவர்)
  • 1921 செசில்சாம்குக் (இங்கிலாந்து)
  • 1930 ஜாக் பனிஸ்ட்டர் (இங்கிலாந்து)
  • 1967 ரிச்சர்ட் பெட்ரி (நியூசிலாந்து)
  • 1973 கெர்ரி வால்ம்ஸ்லே (நியூசிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்