டயலொக் இலங்கை கிரிக்கட் விருதுகள்

445
Sri Lanka Cricket

2015ஆம் ஆண்டுக்கான டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி பத்தரமுலையில் அமைந்துள்ள வோடர்ஸ் எட்ஜ் கிராண்ட் பால்ரூம் அரங்கில் நடைபெற உள்ளதாக நேற்று மாலை ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் தொடர்ந்து 8ஆவது வருடமாக நடைபெறுவதோடு இந்த நிகழ்விற்கு 4ஆவது வருடமாக இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குநரான டயலொக் ஆசியாட்ட நிறுவனம் அனுசரணையாளராக செயற்படுகிறது.

இந்த நிகழ்வின் போது சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20, பிரீமியர் லீக் போட்டி, பிரீமியர் லிமிடெட் ஓவர்கள் போட்டி, எமார்ஜிங்  கிரிக்கெட் போட்டி, சாரா டிராபி, டொனோவன்  & என்றி  போட்டி, 23 போட்டியில் கீழ் மற்றும் பெண்கள் உள்நாட்டு போட்டிகள் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக பரிகாசிக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

Photo Album – Dialog Sri Lanka Cricket Awards Press Conference 2016

இது தொடர்பாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் கருத்துத் தெரிவிக்கையில் “சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்களின்  திறமையை கண்டறிந்து பாராட்டுவது, வெளிக் கொண்டு வருவது என்பது முக்கியமான விடயமாகும். இவ்வாறான விடயங்களை செய்யும் போது வீரர்களுக்கு அது உற்சாகம் மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும். நாம் இது தொடர்பான விருது வழங்கும் நிகழ்வுகள் தொடர்ந்து எதிர்வரும் காலங்களிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியிருந்தார்.

2015ஆம் வருடத்தில் சிறப்பாகத் தமது திறமைகளை வெளிப்படுத்திய 65 வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. கடைசியாக நடைபெற்ற டயலொக் இலங்கை கிரிக்கட் விருதுகள் நிகழ்வின் போது எஞ்சலோ மெதிவ்ஸ் ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரராகத் தெரிவு செய்யப்பட்டதோடு இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஆண்டின்  மக்களின் ஆதரவைப் பெற்ற வீரர் விருதைப் பெற்று இருந்தார்.

இவ்வருட டயலொக் இலங்கை கிரிக்கட் விருதுகள் நிகழ்விற்கு இலங்கை மக்கள் தமது வாக்குகளை அளிக்கலாம். ஆண்டின் மக்களின் ஆதரவைப் பெற்ற வீரர் விருதுக்கு வாக்களிக்க விரும்புவோர் DPP என Type செய்து இடைவெளி விட்டு வீரரின் பெயரைக் குறிப்பிட்டு 2343 என்ற இலக்கத்துக்கு எந்தவொரு வலையமைப்பின் மூலமும் அனுப்பி வைக்கலாம். அல்லது www.cricketawards.online என்ற இணையத்தள முகவரியினுடாக தமது வாக்குகளை அளிக்கலாம்.

16 வீரர்களை அடக்கிய படத்தொகுப்பு டயலொக் ஆசியாட்டவின் உத்தியோகபூர்வ முகப்புத்தக தளத்தில் வெளியாகி இருப்பதோடு அந்த படத்தொகுப்பு இலங்கை கிரிக்கட் மற்றும் ThePapare.com முகப்புத்தக தளத்தில் பகிரப்பட உள்ளது. ரசிகர்கள் தாம் அளிக்கும் வாக்குகளை அந்த வீரர்களில் படங்களை லைக் செய்வதன் மூலம் இலகுவாக வெளிப்படுத்தலாம்.

டயலொக் இலங்கை கிரிக்கட் விருதுகள் நிகழ்விற்கான வாக்களிக்கும் கால அவகாசம் மக்களிற்காக ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி மதியம் 12 மணி முதல் செப்டம்பர் நள்ளிரவு 12 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் மக்கள் தமது வாக்குகளை அளிக்கலாம்.

இந்த விருது நிகழ்வு தொடர்பில் டயலொக் ஆக்சியாடா நிறுவனத்தின் தரம் மற்றும் ஊடகப் பொது மேலாளர், ஹர்ஷா சமரநாயக்க கூறுகையில் ” டயலொக் இலங்கை கிரிக்கட் விருதுகள் நிகழ்விற்கு தொடர்ந்து 4ஆவது தடவையாக அனுசரணை வழங்குவது தொடர்பில் டயலொக் நிறுவனம் முழுமையாகப் பெருமை அடைகிறது என்று கூறியுள்ளார்.

ஆண்டின் டயலொக் மக்கள் பிளேயர் 16 வேட்பாளர்கள்

  1. ஏஞ்சலோ மேத்யூஸ்
  2. தம்மிக்க பிரசாத்
  3. தினேஷ் சந்திமால்
  4. திமுத் கருணாரத்ன
  5. டில்ருவான் பெரேரா
  6. குசல் ஜனித் பெரேரா
  7. குமார் சங்கக்கார
  8. கவுஷல் சில்வா
  9. லஹிரு திரிமன்ன
  10. லசித் மலிங்கா
  11. நுவான் பிரதீப்
  12. நுவான் குலசேகரா
  13. ரங்கன ஹேரத்
  14. சுரங்க லக்மால்
  15. திசர பெரேரா
  16. திலகரத்ன தில்ஷான்

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்