முதலாவது நாளில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணி முன்னிலையில்

198
sl v sa development

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி அணியினர் இரண்டாவது டெஸ்ட் போட்டியை  தென்னாபிரிக்க வளர்ந்துவரும்  விளையாட்டு அணியுடன் நேற்று பிரிட்டோரிய மைதானத்தில் ஆரம்பித்தனர். கடந்த வாரம் முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியினர் 121 ஓட்டங்களால் வெற்றியடைந்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியின் தலைவர் டு புளூய்  முதலில் தனது அணியினை துடுப்பெடுத்தாடப் பணித்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மோகோட்ஸி, கோமாரி ஆகியோர் இணைப்பாட்டமாக 122 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து அரைச்சதம் பெற்ற கோமாரி 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய ப்ளூய், மோகோட்ஸி ஆகியோர் 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப்  பகிர்ந்து கொண்டனர்.  42 ஓட்டங்கள் பெற்ற வேளையில் புத்திக்கவின் பந்துவீச்சுக்கு எல்பிடபிள்யூ முறையில் ப்ளூய் ஆட்டம் இழந்தார். நிதானமான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்திய மோகோட்ஸி சதத்துடனும், அகெர்மன் அரைச் சதத்துடனும் முதல் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் 29 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 130 ஓட்டங்களைப் பெற்றனர் .

இலங்கை அபிவிருத்தி அணியின் பந்து வீச்சை பொருத்தமட்டில் அனுக் பெர்னாண்டோ, ரமேஷ் புத்திக்க ட தனஞ்சய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டினை வீழ்த்தினர். முதல் நாள் முடிவில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியினர் 82  ஒவர்களுக்கு முகம் கொடுத்து 405 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்துள்ளனர். ஆடுகளத்தில் மோகோட்ஸோ, அகெர்மன்  ஆகியோர்  சிறந்த இணைப்பாட்டத்துடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.  2ஆவது நாள் ஆட்டம் எவ்வாறு அமையப்பெரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போட்டியின் சுருக்கம் :

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணி – 405/3

மோகோட்ஸோ 155*, அகெர்மன் 91*, டு ப்ளூய் 42, கோமாரி 59, டலியம் 30

அணுக் பெர்னாண்டோ  1/68, புத்திக்க 1/42, தனஞ்சய 1/120