வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 29

269
OTD-July-29

2006ஆம் ஆண்டு – உலக சாதனை இணைப்பாட்டம்


2006ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க கிரிக்கட் அணி இலங்கைக்கு விஜயம் செய்து இருந்தது. இலங்கை தென் ஆபிரிக்க அணிகள் மோதிய 1ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி முதல் இனிங்ஸில் 189 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின் இலங்கை அணி தமது முதல் இனிங்ஸை ஆரம்பித்த வேளையில் 14 ஓட்டங்களுக்குள் முதல் 2 விக்கட்டுகளையும் இழந்தது.

அதன் பின் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் ஜோடி சேர்நது இலங்கை அணியை மீட்டி உலக சாதனை இணைப்பாட்டமாக 3ஆவது விக்கட்டுக்காக 624 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இதில் சங்கக்கார 287 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 374 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களது அபார ஆட்டத்தின் உதவியோடு இந்தப் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது.

2001ஆம் ஆண்டு – மசகட்சா சதம்


சிம்பாப்வே அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஹெமில்டன் மசகட்சா கறுப்பு ஆபிரிக்க ஒருவரால் பெறப்பட்ட சதத்தை பெற்றவர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் மிகச் சிறப்பாக ஆடி 316 பந்துகளில் 12 பவுண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களைப் பெற்றார்.

இவரது இந்த நிதான ஆட்டத்தின் மூலம் இந்தப் போட்டியை சிம்பாப்வே அணி வெற்றி தோல்வி இன்றி முடித்துக் கொண்டது.

ஜூலை மாதம் 29ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்


1933 கேம்மி ஸ்மித் (மேற்கிந்திய தீவுகள்)

1966 ஹெலன் டேவிஸ் (தென் ஆபிரிக்கா)

1975 லங்கா டி சில்வா (இலங்கை)

1978 எமிலி டிராவர்ஸ் (நியூசிலாந்து)