சாதனை மழை பொழிந்தார் குசல் மெண்டிஸ்

267
sl v aus day 3

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பல்லேகெலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.

நாணய  சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி அவுஸ்திரேலியாவி்ன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பின்னர் அவுஸ்திரேலியா அணி முதல் இனிங்ஸைத் தொடங்கியது. இலங்கை அணியின் அனுபவ பந்து வீச்சாளர் ரங்கானா ஹேரத், அறிமுக வீரரான சண்டகான் ஆகியோரின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அவுஸ்திரேலியா அணி 203 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஹேரத், சண்டகான் ஆகியோர் தலா 4 விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தினார்கள்.

அடுத்து 86 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இனிங்ஸைத் தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ஓட்டங்கள் எடுத்திருந்தது. குசால் பெரேரா 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அப்போது மழை பெய்ததால் 2-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்தது.

கௌசல் சில்வா 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சில்வாவுடன் கருணாரத்ன ஜோடி சேர்ந்தார். ஆட்டம் தொடங்கிய 3-வது பந்தில் கருணா ரத்ன ஓட்டம் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். 2 ஓட்டங்களுடன் நின்றிருந்த சில்வா மேலும் ஐந்து ஓட்டங்கள் எடுத்து 7 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து குசல் மெண்டீஸ் களம் இறங்கினார். இவருடன் தலைவர் மெத்யூஸ் ஜோடி சேர்ந்தார். மெத்யூஸ் நிதானமாக விளையாட, மெண்டிஸ் அதிரடியாக விளையாடினார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 86ஆக இருக்கும்போது மெத்யூஸ் 9 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இலங்கை அணி 2-வது இனிங்ஸிலும் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்துவிடும் என்று ரசிகர்கள் எண்ணினார்கள்.

ஆனால், 5-வது விக்கட்டுக்கு மெண்டிஸ் உடன் சந்திமால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லயனின் சுழற்பந்து, ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் ஆகியோரின் வேகப்பந்தை சிறப்பாக எதிர்கொண்டு மெண்டிஸ் ஓட்டங்களைக் குவித்தார். இதனால் 143 பந்துகளை சந்தித்த மெண்டிஸ் சதம் அடித்தார்.

இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 203ஆக இருக்கும்போது சந்திமால் 42 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கட்டுக்கு 117 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கை ஊட்டியது.

அடுத்து மெண்டிஸ் உடன் தனஞ்சய டி சில்வா ஜோடி சேர்ந்தார். சதத்தைக் கடந்த மெண்டிஸ் தேநீர் இடைவேளையின் கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்ததன் மூலம் 150 ஓட்டங்களைத் தாண்டினார்.

பின்னர் தேநீர் இடைவேளையின் பின் தொடர்ந்து ஆடிய வேளையில் தனஞ்சய டி சில்வா 36 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கட்டை நேதன் லியோன் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கட்டுகளைக் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இணைந்தார்.

அதன் பின் குசல் மெண்டிஸோடு ஆட டில்ருவான் பெரேரா களம் புகுந்தார். இவர்கள் நிதானமாக ஆட முற்பட்டாலும் போட்டி போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டது. அதன் பின் தொடர்ந்து மழை பொழிய ஆரம்பித்ததால் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது இலங்கை அணி 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 282 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.

களத்தில் அற்புதமாக ஆடி வரும் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 169 ஓட்டங்களையும் டில்ருவான் பெரேரா ஆட்டம் இழக்காமல் 5 ஓட்டங்களையும்  பெற்று இருந்தனர். இலங்கை அணி தற்போது வரை 4 விக்கட் கையிருப்பில் இருக்க 196 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் நேதன் லியோன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள்  வீதம் கைப்பற்றினர். போட்டியின் 4ஆவது நாள் ஆட்டம் நாளை தொடர வுள்ள நிலையில் இலங்கை அணி இன்னும் 50-60 ஓட்டங்களைப் பெறுமானால் அவுஸ்திரேலிய அணிக்கு ஒரு  தீர்க்கமான இலக்கு நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்தப் போட்டியில் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக ஆடிவரும் குசல் மெண்டிஸ் இலங்கை மண்ணில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதி கூடிய ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு இன்னும் 24 ஓட்டங்களைப் பெற்றால் இலங்கை அவுஸ்திரேலிய டெஸ்ட் வரலாற்றில் இலங்கை அணி சார்பாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தனி ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை இவர் நிலைநாட்டுவார்.

இவருக்கு முன் குமார் சங்கக்கார அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 192 ஓட்டங்களைப் பெற்று இருப்பதே இதுவரை இலங்கை வீரர் ஒருவரால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக  டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டமாக காணப்படுகிறது. அத்தோடு தனது டெஸ்ட் வாழ்வில் 1ஆவது சதத்தைப் பூர்த்தி செய்த குசல் மெண்டிஸ் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த இளமையான இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பது சிறப்பான விடயமாகும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை –  117/10 ( 34.2 )

தனன்ஜய டி சில்வா 24, குசல் ஜனித் பெரேரா 20, லக்ஷன் சந்தகன் 19*, எஞ்சலோ மெதிவ்ஸ் 15,  தினேஷ் சந்திமால் 15

நேதன் லியோன் 12/3, ஜோஸ் ஹசலவூட் 21/3, மிச்சல் ஸ்டார்க் 51/2, ஸ்டிவ்  ஓ’கீபே  32/2

அவுஸ்திரேலியா – 203/10

எடம் வொக்கஸ் 47, மிட்சல் மார்ஷ் 31, உஸ்மான் கவாஜா 26 , ஸ்டீவ்  ஸ்மித் 30

ரங்கன ஹேரத் 49/4, லக்ஷன் சந்தகன் 58/4

இலங்கை  –  282/6

குசல்  மெண்டிஸ் 169*, தினேஷ் சந்திமால் 42, தனன்ஜய டி சில்வா 36

நேதன் லியோன் 98/2, மிச்சல் ஸ்டார்க் 44/2

இலங்கை அணி 4விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க 196 ஓட்டங்கள் முன்னிலையில்

Batsmen Dismissal Runs Balls
Dimuth Karunarathne LBW b Starc 5 12
Kaushal Silva c Voges b Hazelwood 4 25
Kusal Mendis LBW b Hazelwood 8 7
Dinesh Chandimal  c Nevill b Hazelwood 15 54
AD Mathews  c Smith b O’Keefe 15  24 
Dhananjaya De Silva  c Burns b Lyon  24  38
Kusal Janith Perera  b Lyon  20  15
Dilruwan Perera  LBW b Lyon
Rangana Herath  LBW b Starc  10
Lakshan Sandakan  Not Out  19  15
Nuwan Pradeep c Smith b O’Keefe   0
Extras (1) TOTAL  117 (34.2 overs)

Fall of wickets :1-6 (Karunaratne, 4.1 ov), 2-15 (Mendis, 5.3 ov), 3-18 (Silva, 9.1 ov), 4-43 (Mathews, 14.2 ov), 5-67 (Chandimal, 25.6 ov), 6-87 (de Silva, 28.2 ov), 7-87 (MDK Perera, 28.4 ov), 8-94 (MDKJ Perera, 30.2 ov), 9-100 (Herath, 31.6 ov), 10-117 (Pradeep, 34.2 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Mitchell Starc  11 1 51 2
Josh Hazelwood 10 4 21 3
Steve O’Keefe 10.2 3 32 2
 Nathan Lyon   3 12
Batsmen Dismissal Runs Balls
Joe Burns b Herath 3 15
David Warner b Pradeep 0 5
Usman Khawaja LBW b Herath 26 62
Steve Smith st Chandimal b Herath 30 53
Adam Voges ct Mendis b Pradeep 47 115
Mitchell Marsh b Sandakan 31 63
Peter Neville ct Perera b Herath 2 11
Steve O’Keefe ct Mendis b Sandakan 23 80
Mitchell Starc ct Perera b Sandakan 11  29
Nathan Lyon LBW b Sandakan  17 25
Josh Hazelwood Not Out 2 18
Extras (11) TOTAL  203 (79.2 overs)

Fall of wickets: 1-3 (Warner, 2.2 ov), 2-7 (Burns, 3.6 ov), 3-69 (Smith, 21.2 ov), 4-70 (Khawaja, 23.2 ov), 5-130 (Marsh, 45.4 ov), 6-137 (Nevill, 48.3 ov), 7-160 (Voges, 62.1 ov), 8-179 (Starc, 69.5 ov), 9-190 (O’Keefe, 73.6 ov), 10-203 (Lyon, 79.2 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Nuwan Pradeep 16 6 36 2
Rangana Herath  25 8 49 4
Dilruwan Perera 14 1 43 0
 Lakshan Sandakan  21.2 58 4
 Angelo Mathews  3 1 6
Batsmen Dismissal Runs Balls
Kusal Janith LBW b Starc 4 5
Kaushal Silva LBW b O’Keefe 7 32
Dimuth Karunarathne LBW b Starc 0 3
Kusal Mendis Not Out 169 243
Angelo Mathews c Burns b Lyon 9 31
Dinesh Chandimal LBW b Marsh 42 100
Dhananjaya De Silva c Khawaja b Lyon 36 62
Dilruwan Perera Not Out 5 4
Extras (10) TOTAL 282/6 (80 overs)

Fall of wickets: 1-6 (MDKJ Perera, 2.2 ov), 2-6 (Karunaratne, 2.5 ov), 3-45 (Silva, 12.2 ov), 4-86 (Mathews, 27.1 ov), 5-203 (Chandimal, 58.1 ov), 6-274 (de Silva, 77.3 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Mitchell Starc 12 4 44 2
Josh Hazelwood 13 3 41 0
Steve O’Keefe 16.2 3 42 1
Nathan Lyon 26 2 98 2
David Warner 1 0 10 0
Adam Voges 1.4 0 3 0
Mitchell Marsh 9 1 33 1
Steve Smith 1 0 1 0