இலங்கை “ஏ”, பாகிஸ்தான் “ஏ” மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் விளையாடும் முக்கோண ஒருநாள் தொடரின் 6ஆவது ஒருநாள் போட்டி நேற்று   கேன்டர்பரியில் அமைந்துள்ள  புனித லோரன்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

ஏற்கனவே தாம் விளையாடிய முதல் மூன்று  போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில்  இலங்கை “ஏ” அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்த்து ஆடியது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 1 விக்கட்டை மாத்திரம் இழந்து 425 ஓட்டங்களைக் குவித்தது.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் தலைவர் டாவிட் மலன் 23 ஓட்டங்களைப் பெற்று ஆரம்பத்திலேயே ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழக்கும் போது இங்கிலாந்து லயன்ஸ் அணி 11.2 ஓவர்களில் 58 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.

பின்னர் ஜோடி சேர்நத டேனியல் பெல்-ட்ரும்மொந்து மற்றும் பென் டக்கட் ஜோடி இலங்கை “ஏ” அணியின் பந்துவீச்சாளர்களை சின்னாபின்னமாக்கி ஓட்டங்களை மின்னல் வேகத்த்தில் குவித்தார்கள்.

இவர்கள் 2ஆவது விக்கட்டுக்காக வீழ்த்தப்பபடாத 367 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள். இதில் பென் டக்கட்  மிக மிக அபாரமாக ஆடி 167 நிமிடங்கள் களத்தில் நிலைத்தாடி 131 பந்துகளுக்கு முகம் கொடுத்து 29 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 220 ஓட்டங்களையும் ( ஸ்ட்ரைக் ரேட் 167.93 ) மறுமுனையில் ஆடிய டேனியல் பெல்-ட்ரும்மொந்து  220 நிமிடங்கள் களத்தில் நிலைத்தாடி  139 பந்துகளுக்கு முகம் கொடுத்து 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 171 ஓட்டங்களையும் ( ஸ்ட்ரைக் ரேட் 123.02 )  பெற்றனர்.

இலங்கை “ஏ” அணியின் பந்துவீசில் வீழ்ந்த ஒரு விக்கட்டை ரமித் ரம்புகவெல்ல வீழ்த்தினார். திஸர பெரேரா 10 ஓவர்கள் பந்து வீசி 101 ஓட்டங்களை வாரி வழங்கினார்.

பின்னர் 426 என்ற பாரிய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை “ஏ” அணி வீரரக்ள் 47.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். இலங்கை “ஏ” அணி சார்பாக துடுப்பாட்டத்தில் எஞ்சலோ பெரேரா 73 பந்துகளை முகம் கொடுத்து 69 ஓட்டங்களையும் ( 5 பவுண்டரிகள்  அடங்கலாக ) நிரோஷான் திகவெல்ல 45 பந்துகளை முகம் கொடுத்து 60 ஓட்டங்களையும்  ( 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக ) திஸர பெரேரா  40 பந்துகளை முகம் கொடுத்து 45  ஓட்டங்களையும்  ( 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக ) மஹேல உடவத்த  43 பந்துகளை முகம் கொடுத்து  40 ஓட்டங்களையும்  ( 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக ) பெற்றனர்.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்து வீச்சில் ஜோர்ஜ் கார்ட்டன் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும் லியம் டௌசன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள். இதன் மூலம் இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்த போட்டியில் 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்


இங்கிலாந்து லயன்ஸ் – 425/1 ( 50 )

பென் டக்கட்  220*, டேனியல் பெல்-ட்ரும்மொந்து  171*

ரமித் ரம்புக்வெல்ல 83/1

இலங்கைஅணி – 285/10 ( 47.3 )

எஞ்சலோ பெரேரா 69, நிரோஷான் திகவெல்ல 60, திஸர பெரேரா 45, மஹேல உடவத்த 40

ஜோர்ஜ் கார்ட்டன் 43/4, லியம் டௌசன் 41/2

இங்கிலாந்து லயன்ஸ் அணி  140 ஓட்டங்களால் வெற்றி