ஸ்ரீலங்கா ப்ரிமியர் டென்னிஸ் தொடர்

191
Sri Lanka Premier Tennis

ஜெட் ஹோல்டிங் பிரைவட் லிமிட்டட் மற்றும் குயின்ஸ் கிளப்  ஆகியன இணைந்து முன்னெடுக்கும் “ஸ்ரீலங்கா பிரிமியர் டென்னிஸ் லீக்” என்ற மாபெரும் டென்னிஸ் தொடர் இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் ஜுலை மாதம் 3 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கையில் டென்னிஸ் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தொடர் நடத்தப்பட இருக்கின்றது.

ஆறு அணிகள் பங்கு பற்றும் இந்த டென்னிஸ் தொடர் கொழும்பு 7 குயின்ஸ் கிளப்பில் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் பங்குபற்றும் இந்தப் போட்டியில் வீரர்கள் ஆறு அணிகளாகப் பிரித்து அணிக்கு தலா ஐந்து வீரர்கள் என போட்டியிடவுள்ளனர்.

இந்தப் போட்டியில் ஒரு அணிக்கு ஆண்கள் ஒற்றையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு, மூத்த வீரர்களின் இரட்டையர் பிரிவு மற்றும் ஜுனியர் ஒற்றையர் பிரிவு என போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

குறித்த போட்டிகளின்படி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைத் தக்கவைக்கும் அணிகள், எதிர்வரும் ஜுலை 3 ஆம் திகதி இரவு 6 மணிக்கு இடம்பெறவிருக்கும் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.

இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கே “ஸ்ரீலங்கா பிரிமியர் டென்னிஸ் லீக்” சம்பியன் கிண்ணம் வழங்கப்படும்.

போட்டி அட்டவணை பின்வறுமாறு,

ஜுன் 30
மாலை 5 மணிக்கு – கார்கில்ஸ் ஈகல்ஸ் எதிர் எஸ்.எல்.டி டஸ்கர்ஸ்
மாலை 7 மணிக்கு என்.எஸ்.பி. ஜகுவார்ஸ் எதிர் கிரவ்ன் ஷொக்ஸ்

ஜுலை 01
மாலை 5 மணிக்கு எஸ்.எல்.டி. டஸ்கர்ஸ் எதிர் என்.எஸ்.பி. ஜக்குவார்ஸ்
மாலை 7 மணிக்கு கிரவ்ன் ஷொக்ஸ் எதிர் கார்கில்ஸ் ஈகல்ஸ்

ஜுலை 02 
மாலை 5 மணிக்கு என்.எஸ்.பி. ஜக்குவார்ஸ் எதிர் கார்கில்ஸ் ஈகல்ஸ்
மாலை 7 மணிக்கு எஸ்.எல்.டி டஸ்கர்ஸ் எதிர் கிரவ்ன் ஷொக்ஸ்

ஜுலை 03
இறுதிப்போட்டி மாலை 6 மணிக்கு இடம்பெறும்

ஆதாரம் – வீரகேசரி

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்