விஷ்வ பெர்னாண்டோ அபாரம்; இலங்கை “ஏ” அணி முன்னிலையில்

1338
V.Fernando

இலங்கை “ஏ” அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. அந்தத் தொடரில் இலங்கை “ஏ” அணி பாகிஸ்தான் “ஏ” அணியோடு  இரண்டு 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இப்போட்டிகளில் பங்கேற்க முன் இலங்கை “ஏ” அணி  இங்கிலாந்து உள்ளூர் கவுண்டி அணியான டர்ஹாம் அணியோடு 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டி கடந்த 26ஆம் திகதி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் ஆரம்பித்தது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை “ஏ” அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை “ஏ” அணி – 1ஆவது இனிங்ஸ் 353/10
ரொஷேன் சில்வா 109
சச்சித் பதிரன 51
லஹிரு கமகே 43*
மாதவ வாணபுர 34
சந்து 70/4

டர்ஹாம் – 1ஆவது இனிங்ஸ் 205/10
முச்சல் 70
மஸ்டார்ட் 38
விஷ்வ பெர்னாண்டோ 37/5
லஹிரு கமகே 49/3

இலங்கை “ஏ” அணி – 2ஆவது இனிங்ஸ் 143/2
மஹேல உடவத்த 45*
ரொஷேன் சில்வா 43*
மாதவ வாணபுர 27
உதார ஜயசுந்தர 23

3ஆம் நாள் ஆட்ட  நேர முடிவில் இலங்கை “ஏ” அணி 8 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க 291 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. நாளை போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்