சாம்பியன் கிண்ணத்தை வெல்ல இன்னும் முன்னேறவேண்டும் – ஸ்மித்

191
Smith seeks more improvement

முத்தரப்பு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியா அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

முதலில் விளையாடிய அவுஸ்திரேலியா 270 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 212 ரன்களில் சுருண்டது. ஹசில்வுட் 5 விக்கெட்டும், மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்தத் தொடரை கைப்பற்றினாலும் அவுஸ்திரேலிய அணியின் ஒட்டுமொத்த செயற்பாட்டில் ஸ்மித்துக்கு திருப்தியில்லை. அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்ல இது போதாது, அனைத்து துறைகளிலும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்மித் மேலும் கூறுகையில் ‘‘இறுதிப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்காக மிகுந்த மிகிழ்ச்சி அடைகிறேன். நாம் விளையாடியதில் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் சற்று மாறுபட்டவை என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் நாங்கள் எங்களுடைய வேலையை சரியாக செய்துவிட்டோம் என்பதில் மகிழ்ச்சி.

வெஸ்ட் இண்டீஸ் அணி 271 ரன்களை சேஸிங் செய்யும்போது தொடக்க வீரர்கள் 10.3 ஓவரில் 49 ரன்கள் சேர்த்தனர். புதிய பந்தில் நாங்கள் தொடர்ந்து சிறப்பாகப் பந்து வீச வேண்டும். கடந்த இரண்டு மூன்று தொடர்களில் எதிரணி தொடக்க வீரர்கள் எங்களுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ளனர். இந்தப் போட்டியிலும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால், மிடில் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசி அவர்களைக் கட்டுப்படுத்திவிட்டோம்.

சரியான பகுதியில் பந்து பிட்ச் செய்து நம்முடைய திட்டத்தை சரியாக செயற்படுத்தி, தொடக்கத்தை சரியாகத் தொடங்கினால், அது நமக்கு மிகவும் எளிதான விஷயமாகிவிடும்.

பெரும்பாலான பகுதியில் (பேட்டிங், பீல்டிங், பந்து வீச்சு) இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பீல்டிங்கில் கவனம் தேவை. இன்றைய போட்டியில் விளையாடியது போல் ஒவ்வொரு போட்டியிலும் நம்முடைய சக்தியை வெளிப்படுத்த வேண்டும். இந்த அணி தொடர்ந்து அப்படியே விளையாடும் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்