முத்தரப்புத் தொடர் சம்பியனானது அவுஸ்திரேலியா

218
Tri-Nation Series, Final West Indies v Australia
@AFP

தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

முதலில் விளையாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ஓட்டங்களைக் குவித்தது. மேத்யூவாடே 57 ஓட்டங்களும்,ஆரோன் பிஞ்ச் 47 ஓட்டங்களும் எடுத்தனர். கேப்டன் ஸ்மித் 46 ஓட்டங்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர், கேப்ரியல் தலா 2 விக்கெட் எடுத்தனர். பிராத்வொயிட், பொல்லார்டு, நரேன், பென் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் துடுப்பெடித்தாடிய வெஸ்ட் இண்டிஸ் அணி 45.4 ஓவர்களில் 212 ஓட்டங்களை எடுத்தது. ஜொன்ஸன் சார்லஸ் அதிகபட்சமாக 45 ஓட்டங்களை எடுத்தார். ரம்டின் 40 ஓட்டங்கள், ஹோல்டர் 34 ஓட்டங்கள், நரேன் 23 ஓட்டங்கள் எடுத்தனர். இருப்பினும் மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பிளெட்சர், பிராவோ, சாமுவேல்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய ஹாசில்வுட் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்