யூரோ கிண்ண கால் இறுதியில் போலந்து

182
Switzerland v Poland Euro 2016
@Jason Cairnduff Reuters

யூரோ கிண்ண  கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில் இன்று நாக் அவுட் சுற்று தொடங்கியது. முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து – போலந்து அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் போலந்து அணி முதல் கோலை அடித்தது. அந்த அணியின் பாஸ்க்சிகோவ்ஸ்கி இந்த கோலை அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் போலந்து 1-0 என முன்னிலையில் இருந்தது.

ஆட்டத்தின் 2ஆவது பாதி நேரத்தில் சுவிட்சர்லாந்து அணி பதில் கோல் அடிக்க முயற்சிசெய்தனர். இந்த முயற்சிகளைப் போலந்து அணியின் கோல் கீப்பர் மற்றும் தடுப்பாட்டக்காரர்கள் தடுத்தனர். இறுதியில் 82ஆவது நிமிடத்தில் ஷகிரி பதில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. பின்னர் ஆட்டம் முடியும் வரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கூடுதல் நேரம் கடைப்பிடிக்கப்பட்டது.

இரண்டு 15 நிமிடங்களிலும் இரு நாட்டு வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பெனால்டி ஷூட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 5-4 என போலந்து வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்