பட்லர், வோக்ஸ் போராட்டம்: போட்டி சமநிலையில் முடிவு

2618

1st ODI Match Highlights

இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளைக் கொண்ட றோயல் லண்டன் கிண்ணத்தொடரின் 1ஆவது ஒருநாள் போட்டி நேற்று நொடிங்ஹெம்மில் அமைந்துள்ள ட்ரெண்ட் பிரிச் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயோன் மோர்கன் முதலில் களத்தடுப்பைத் தீர்மானம் செய்தார்.

 போட்டியின் சுருக்கம் 

இலங்கை அணி 286/9 (50)

எஞ்சலோ மெதிவ்ஸ் 73
சீகுகே பிரசன்ன  59
தினேஷ் சந்திமால் 37
பர்வீஸ் மஹ்ரூப்  31*
கிறிஸ் வோக்ஸ் 56/2
டேவிட் வில்லே 56/2

இங்கிலாந்து அணி 286/8 (50)

க்ரிஸ் வோக்ஸ் 95*
ஜொஸ் பட்லர் 93
இயோன் மோர்கன் 43
லியம் பிளன்கட் 22*
எஞ்சலோ மெதிவ்ஸ் 22/2
நுவான் பிரதீப் 64/2

19 வயதிற்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக அவிஷ்க பெர்னான்டோ

இந்தப் போட்டியின் இறுதி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றிபெற  14 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இறுதி ஓவரை நுவான் பிரதீப் வீசினார். அவர் இறுதி ஓவரின் முதல் 4 பந்துகளிலும் 4 ஓட்டங்களை மட்டுமே கொடுத்தார். கடைசியில் இறுதி 2 பந்துகளில் 10 ஓட்டங்கள் தேவைபட்டன. 50ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் இலங்கை அணியின் கவனயீனமற்ற களத்தடுப்பால் 2 ஓட்டங்கள் 3 ஓட்டங்களாக மாற்றப்பட்டன. இறுதியில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் போட்டி சமநிலையில் முடியும் என்ற நிலையில் லியம் பிளன்கட் இறுதிப் பந்தை சந்தித்தார். அவர் அந்தப் பந்தை நேர்த்தியாக உயர்த்தி “Long off” திசையினுடாக சிக்ஸர் அடித்துப் போட்டியை சமநிலையில் முடிக்க உதவினார். முதல் 18 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கட் இழப்பிற்கு 92 ஓட்டங்களை மட்டுமே எடுத்து இருந்தது. பின் ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் வோக்ஸ் அச்சுறுத்தலாக அமைந்து 7ஆவது விக்கட்டுக்காக 138 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள். இறுதியில் போட்டியின் போக்கு இலங்கை அணியிடம் காணப்பட்டாலும் கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் 2 ஓட்டங்கள் 3 ஓட்டங்களாக மாற்றப்பட்டமையே இந்த சமநிலை முடிவுக்கு முக்கிய காரணமாகும்.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக இறுதிவரை போராடி தனது ஒருநாள் கிரிக்கட் வாழ்க்கையில் முதலாவது அரைச்சதத்தைப் பெற்று போட்டியை சமநிலையில் முடிக்க உதவிய க்ரிஸ் வோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார். இலங்கைஇங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளைக் கொண்ட றோயல் லண்டன் கிண்ணத்தொடரின் 2ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை பர்மிங்ஹேமில் நடைபெறவுள்ளது. பகல் இரவுப் போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி மாலை 6.30மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்