U17 மற்றும் U19 கால்பந்து சம்பியனானது மெரிஸ் ஸ்டெலா கல்லூரி

265

இலங்கை பாடசாலை சங்கம் நடாத்திய 17 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் புனித ஜோசப் வாஸ் கல்லூரி மற்றும் மெரிஸ் ஸ்டெலா கல்லூரி ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் ஆரம்பம் முதல், முதல் பாதியில்  புனித ஜோசப் வாஸ் கல்லூரி சிறப்பாக விளையாடியது.  அதன் பலனாக முதல் கோல் புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் கவிந்து பின்துஷன் மூலம் போடப்பட்டது. இதன் பிறகும் அவர்கள் போட்டியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்து, கோல்களைப் போடும் முயற்சியில் விளையாடினார்கள். ஆனால் அவர்களால் முதல் பாதியில் வேறு கோல்களைப் போட முடியவில்லை. ஆனாலும் முதல் பாதி முடிவில்  புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணி 1-0 என்ற அடிப்படையில் போட்டியில் முன்னிலை பெற்றுக் காணப்பட்டது.

பின் இரண்டாவது  பாதி ஆரம்பமானது. ஆனால் அதில் முதல் பாதிக்கு நேர்மாற்றமாகப் போட்டியின் போக்கு மெரிஸ் ஸ்டெலா கல்லூரியிடம் காணப்பட்டது. மிகச் சிறப்பாக விளையாடி 2 கோல்களைப் போட்டனர். ஆனால்  புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணியினரால் கோல் எதுவும் போட முடியாமல் போனது. இதனால் இந்தப் போட்டியில் 2-1 என்ற ரீதியில் மெரிஸ் ஸ்டெலா கல்லூரி வெற்றிகொண்டு இலங்கை பாடசாலை சங்கம் நடாத்திய 17 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப்  கிண்ணத்தை வென்றது.

Photo Album –St. Joseph Vaz College vs Maristella College – U17 Final

ThePapare.com போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் பாடசாலை சங்க இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக கரன் அவிஷ்க ராஜபக்ஷ தெரிவு  செய்யப்பட்டார். அத்தோடு பாடசாலை சங்க இறுதிப் போட்டியின் சிறந்த கோல் காப்பாளராக பிரமுதித்த பிரகாஷ் தெரிவு செய்யப்பட்டார்.

அதே போன்று இலங்கை பாடசாலை சங்கம் நடாத்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி  கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹமீட் அல் ஹுசைன் கல்லூரி  மற்றும் மெரிஸ் ஸ்டெலா கல்லூரி ஆகிய கல்லூரி அணிகள் மோதின.

மெரிஸ் ஸ்டெலா கல்லூரி அணி கட்டுநேரிய புனித செபஸ்டியன் கல்லூரி அணியை 3-1 என்று பெனால்டி முறையில் வெற்றி கொண்டதன் மூலமும் ஹமீட் அல் ஹுசைன் கல்லூரி அணி கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அணியை 4-3 என்று பெனால்டி முறையில் வெற்றி கொண்டதன் மூலமுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. இந்த இரண்டு போட்டிகளும் அனுராதபுரம் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றிருந்தது.

Photo Album – Hameed Al Husseinie College vs Maristella College – U19 Div 1 Final

இந்த இறுதி போட்டியில் மெரிஸ் ஸ்டெலா கல்லூரி அணியின் வீரரான இலங்கை 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் விளையாடும் திலிப் பீரிஸ் உபாதை காரணமாக விளையாடவில்லை. இதனால் இது ஹமீட் அல் ஹுசைன் கல்லூரி அணிக்கு சாதகமாகக் காணப்பட்டது. போட்டியின் முதல் பாதியில் மிகவும்  சிறப்பாக விளையாடியது. கோல்களைப் போடும் நோக்கில் விடா முயற்சியில் விளையாடின. ஆனால் இந்த நோக்கத்தின் பிரதிபலன் மெரிஸ் ஸ்டெலா கல்லூரி அணிக்கே கிடைத்தது. இந்த அணியின் முதல் கோலை 35ஆவது நிமிடத்தில் சுபுன் லஹிரு போட்டார். இதன் முடிவாக முதல் பாதி முடிவில் 1-0 என்ற அடிப்படையில் மெரிஸ் ஸ்டெலா கல்லூரி அணி முன்னிலை வகித்தது.

Photo Album – Inter Schools Football Tournament – Awards Ceremony

பின் இரண்டாவது பாதி ஆரம்பித்தது. இதில் ஹமீட் அல் ஹுசைன் கல்லூரி அணி கோல்களைப் போட பாரிய முயற்சியோடு விளையாடினாலும் கோல் போட முடியவில்லை. ஆனால் போட்டியின் 60ஆவது நிமிடத்தில் மெரிஸ் ஸ்டெலா கல்லூரி அணியின் சுபுன்  லஹிரு 2ஆவது கோலைப் போட்டார். இது அவர்களுக்கு வெற்றி கோலாக மாறியது. இதன் மூலம் அவர்கள் இந்த இறுதிப் போட்டியை 2-0 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டு இலங்கை பாடசாலை சங்கம் நடாத்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப்  கிண்ணத்தை வென்றது.

ThePapare.com போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் பாடசாலை சங்க இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக சுபுன் லஹிரு தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு பாடசாலை சங்க இறுதிப் போட்டியின் சிறந்த கோல் காப்பாளராக உமேஷ் சன்ஜய தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்