கிரிக்கட் போட்டிகளில் பந்துவீச எரங்காவிற்குத் தடை

1480
Eranga's bowling action ruled illegal

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்தா எராங்கா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இடம்பிடித்து விளையாடினார். அப்போது அவர் பந்து வீச்சு மீது சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அவர் .சி.சி. விதிக்கு மாறாக அனைத்து பந்துகளையும் 15 டிகிரிக்கு மேல் கையை வளைத்து வீசியது தெரிய வந்தது. இதனால் .சி.சி. அவரை சர்வதேசப் போட்டியில் பந்துவீசத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 6ஆம் திகதி .சி.சி. அங்கீகாரம் பெற்ற இடத்தில் அவரது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்தினர். அதன்பின் பந்து வீச்சில் மாற்றம் செய்து மீண்டும் பரிசோதனை செய்ய அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

நாளை அவர் மீண்டும் பரிசோதனைக்குத் தயாரானார். இந்நிலையில் இன்று இதய நோய் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இந்தத் தடை உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.

அத்தோடு எரங்கா இதய நோய் காரணமாக இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை  தெரிவித்துள்ளது. இதுகுறித்து முழுவிவரம் ஏதும் தெரிவிக்கவில்லை.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தமிகா பிராசத் மற்றும் சமீரா ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்கள். அப்போது எரங்காதான் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஆனால் 2-வது டெஸ்டில் பந்து வீசும்போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறப்பட்டது.  பின்பு இன்று அவருக்கு .சி.சி சர்வதேச போட்டிகளில் பந்துவீச .சி.சி. தடை விதித்துள்ளது.

29 வயதாகும் எரங்கா இலங்கை அணிக்காக தலா 19 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 57 விக்கெட்டுகள் வீழத்தியுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்