சம்பியனான ஹைதராபாத் இன்னுமொரு சாதனை

903
Sunrisers Hyderabad

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையை சண் ரைசஸ் ஹைதராபாத் பெற்றது.

இவ்வளவு காலமும்  .பி.எல் வரலாற்றில் இறுதிப் போட்டியில் ஒரு அணி பெற்ற அதிகபட்ச ஓட்டம் 2011ஆம் ஆண்டு  .பி.எல். இறுதிப் போட்டியின் போது  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 5  விக்கட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையே  .பி.எல். இறுதிப் போட்டியில் பெறப்பட்ட அதிக ஓட்டங்களாகக் காணப்பட்டது.

ஐ.பி.எல் வரலாற்றில் பென் கட்டிங் நிகழ்த்திய சாதனை 

ஆனால் நேற்றைய  .பி.எல். இறுதிப் போட்டியில் சண் ரைசஸ் ஹைதராபாத் அணி 208 ஓட்டங்களைக் குவித்து  .பி.எல். இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற பெருமையைப் பெற்றது.

அதுமட்டுமில்லாமல் நேற்றைய போட்டியில் மொத்தம் 408 ஓட்டங்கள் குவிக்கப்பட்டு இருந்தது. இது .பி.எல் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து எடுத்த அதிக ஓட்டங்களாகும். இதற்கு முன் 2014ஆம்  .பி.எல் இறுதிப் போட்டியின் போது கிங்க்ஸ் லீவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 399 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அத்தோடு கடந்த 3 (2014, 2015, மற்றும் 2016) வருடகால  .பி.எல் சம்பியனான அணி இறுதிப்போட்டியில் 200 அல்லது அதற்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்று இருந்தமை இன்னுமொரு  முக்கிய அம்சமாகும்.

 மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்