இவ்வருட ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுமா? வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?

235
Rio Olympics

சிகா வைரஸ் பரவும் ஆபத்துக் காரணமாக பிரேசிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைக்க வேண்டுமா அல்லது ரியோ டி ஜெனெரோ நகரில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமா என்பதை உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்க வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கூட்டுக்கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த நிபுணர்கள் சிகா வைரஸ் மூலம் உலகப்பொது சுகாதாரத்துக்கு தெளிவான ஆபத்து ஏற்பட்டிருப்பதாக எச்சரித்துள்ளனர்.

இங்கிலாந்துடன் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதில் நியுசிலாந்து ஆர்வம்

இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு ஆலோசனை சொல்வதற்கான சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்கும்படியும் அவர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

முன்னதாக அட்லாண்டாவிலிருந்து இயங்கும் நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் பிரேசிலில் ஏற்பட்டிருக்கும் சிகா வைரஸ் பரவல் என்பது ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யும் அளவுக்குப் பெரியதொரு ஆபத்தாக உருவாகவில்லை என்று கூறியிருந்தார்.

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு சிகா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் மூளை கடுமையாக பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

ஆதாரம்பிபிசி

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்